- ஸ்ரீ குருவாயூரப்பனுக்கே கொடு
- Mrs. Vishalam Raman
இரு நண்பர்கள் கேரளத்தில் இருந்தனர். ஒருவருக்கு குருவாயூரப்பன் இஷ்ட தெய்வம். அவன் நண்பனுக்கு பழனி ஆண்டவர் இஷ்ட தெய்வம். இருவரும் சேர்ந்து பயிரிட்டு வந்தனர். ஒரு சம்யம் அவர்கள்" கதனி" என்ற வாழைப்பழத்தைப் பயிரிட்டனர். முதல் நண்பன் வேண்டிக்கொண்டான், "நான் நட்ட வாழை எத்தனை அழகாக வளர்ந்து குலை தள்ளப்போகிறது, அந்தகுலை வட்க்கு திசைப்பக்கம் பார்த்து இருந்தால் அதை நான் குருவாயூரப்பனுக்குப் படைப்பேன்."
அவனது நண்பன் பார்த்தான், "ஆஹா! நான் நட்டது இன்னும் சிறிது நாளில் குலை தள்ளிவிடும். அது தெற்கைப் பார்த்து குலை தள்ளினால் அதை நான் பழனி ஆண்ட்வருக்குச் சேர்ப்பேன்."
கொஞ்சம் நாட்கள் ஆனபின் அந்த வாழை தெற்கு திசையிலுமில்லாமல் வட்க்கிலும் இல்லாமல் மேற்கைப் பார்த்து குலை தள்ளியது. இதனால் நண்பர்கள் நடுவில் பிரச்சனை ஏற்பட்டது. சண்டையும் வந்தது. ஒருவன் தான் அதைப் பழனி முருகனுக்குக் கொடுப்பேன் என்றான். மற்றவன் குருவாயூரப்பனுக்கே தருவேன் என்றான். இதனால் அவர்கள் பேசுவதையும் நிறுத்திக் கொண்டனர்.
பார்த்தார் பழனி முருகன், தனது பக்தன் கனவில் தோன்றினார், "பகதா அந்தக் கதனிப்ப்ழத்தை ஸ்ரீ குருவாயூரப்பனுக்கே சமர்ப்பித்து விடு, உன் நண்பனுடன் அன்பாக பழகு" என்றார்.
அதன்படியே மறுநாள் தன் நண்ப்னை அழைத்து கனவைத் தெரிவித்தான் அதன்படியே அவை குருவாயூரப்பனுக்குப் படைக்கப்பட்டன. இந்த முருகனே தான் ப்ழனியில் தனக்கு மாம்பழம் கிடைக்கவில்லையே என்று கோபத்துடன் பழனி மலைமேல் அமர்ந்தவர்.
ஆண்டிக்கோலம் கொண்டு பழனியப்பனாக ஆனவர்.
இன்றும் குருவாயூரில் எடைக்கு எடை கதனிப்ப்ழத்தை வேண்டுதலாகப் படைக்கிறார்கள்.
ஸ்தல்புராணத்தில் படித்தது
விசாலம் இராமன்
Designed and maintained by AKR Consultants


