Healthcare Tips
Parents Home
Couples Suit
Spiritual Path
Student's Corner
Youth Resort
Management
Lighter Moments
Entertainment
Serious Side
World Tour
Internet Links
Snippets

Tamil Software
அழகி மென்பொருள்
   
Tamil-English bilingual webmagazine dedicated to education of the masses through E-books, articles, worldwide informations, Slideshows, Presentations on various subjects, photographs and images, moral and objective oriented stories and Lectures including audio and video

நல்லதொரு கதை. நல்லதொரு பாடம் நாம் கற்க

இன்று எனக்குக் கணினியில் திரு பார்வமணி அவர்கள் அனுப்பி இருந்த ஒரு ஆங்கில மடலின் தமிழாக்கம், சற்றே மாற்றங்களுடன்.

ஒரு அழகிய பெண். அழகை அளித்த ஆண்டவன் அவளுக்குக் கண் பார்வையை அளிக்க மறந்து விட்டான். அவள் தன்னை மட்டுமின்றி இந்த உலகில் உள்ள அனைவரையுமே வெறுத்தாள். அவளுடனேயே எப்போதும் இருந்து வந்த நண்பன் ஒருவனைத் தவிற.

அவள் அடிக்கடி சொல்வாள், "எனக்கு மட்டும் கண் பார்வை இருந்தால் உன்னை நான் மணந்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்வேன்" என்று.

ஒரு நாள் இரு கண்கள் அவளுக்குத் தானமாகக் கிடைக்க, அவளுக்குக் கண் அறுவை சிகிச்சை நடந்தது. கண் பார்வை கிடைத்த அவள் தன்னைச் சுற்றியுள்ள வற்றைப் பார்த்து சந்தோஷத்தில் குதித்தாள்.

அருகில் நின்றிருந்தவன் கேட்டான், "உனக்குக் கண் பார்வை வந்து விட்டதே. இப்போது என்னை நீ மணந்து கொள்வாயா?" என்று.

"உன்னையா? நானா?" போயும் போயும் ஒரு குருடனையா நான் மணப்பேன்?" என்றாள் அவள்.

அவளுக்கு ஒரு பணக்காரருடன் கல்யாணம் வெகு விமரிசையாக நடந்தது. விருந்தும் முடிந்தது. மறு நாள் வந்திருந்த பரிசுகள் ஒவ்வொன்றாக பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.

"என்ன இந்தக் கவ்ர் சிறிதும் கனமின்றி இருக்கிறதே? உள்ளே ஏதாவது காசோலை இருக்குமோ?" கவனமாகப் பிரித்தாள் கவரை. உள்ளிருந்து ஒரு கடிதம் விழுந்தது. அதை பிரித்துப் படித்தாள்.

"ஜூலீ உன் கண்களை பத்திரமாகப் பார்த்துக் கொள். ஏனென்றால் அவை உன் கண்களாவதற்கு முன்பு என்னுடைதாக இருந்தன. இப்படிக்கு என்றுமே உன் நண்பன், புதிய குருடன்."

இந்தக் கதை உண்மையில் நடக்க முடியாத ஒரு கட்டுக்கதை, காரணம் உயிருடன் இருக்கும் ஒருவர் கண் தானம் செய்ய எந்த நாட்டின் சட்டமும் இடமளிப்பதில்லை. எனினும்...

இதுதான் மனித மனம். வாழ்க்கையில் முன்னேறியதும் கஷடப் பட்ட நாட்களில் யார் தன்னுடனே இருந்து தன் கஷ்டங்களைப் பகிர்ந்துகொண்டு வாழ்ந்தார்கள் என்பதெல்லாம் மறந்து விடுகிறான் மனிதன். ஏன் தன்னைப் பெற்றவர்களையும் கூடத்தான்.

வாழ்க்கை என்பது இறைவன் நமக்களித்த ஒரு வரப் பிரசாதம்.

இன்று நீங்கள் ஒருவர் மீது கடுஞ்சொற்களை வீசு முன் பேசவே முடியாத ஊமை ஒருவனை நினைத்துப் பாருங்கள்.

இன்று சாப்பிட்ட உணவின் ருசி பற்றி குறை கூறும் முன் உண்ண உணவின்றித் தவிக்கும் ஒருவனை நினைத்துப் பாருங்கள்.

உங்கள் வாழ்க்கைத் துணை மீது குறை கூறுமுன் துணை வேண்டி இறைவனிடம் உருகும் ஒருவரை எண்ணிப் பாருங்கள்.**

உங்கள் வாழ்க்கை பற்றி சலித்துக் கொள்ளும் போதெல்லாம் வாழாமலே இள வயதில் இறந்த ஒருவரைப் பற்றி நினைத்துப் பாருங்கள்.

உங்கள் குழந்தைகள் பற்றி ஒருவரிடம் குறை கூறுமுன் குழந்தை இல்லையே என்று ஏங்கும் கணவன் மனைவி பற்றி நினைத்துப் பாருங்கள்.

உங்கள் வீட்டை சரியாகச் சுத்தம் செய்ய வில்லையென்று ஒருவர் மீது குற்றம் சுமத்தும் முன் வீடின்றி வீதியில் உறங்கும் ஒருவரை எண்ணிப் பாருங்கள்.

உங்கள் வேலை பற்றி அலுத்துக் கொள்ளுமுன், வேலை இன்றி இருப்போரையும், வேலை செய்ய முடியாது உடல் ஊனமுற்றோரையும், உங்கள் வேலை தனக்குக் கிடைக்காதா என்று ஏங்குவோரையும் பற்றி சற்றே சிந்தியுங்கள்.

காரை இவ்வளவு தூரம் ஓட்ட வேண்டுமே என்று அலுத்துக் கொள்ளு முன் அதே தூரத்தினை நடந்தே கடக்க வேண்டி யுள்ள ஒருவரைப் பற்றி நினைவில் கொள்ளுங்கள்.

பிறர் குறைகளைச் சுட்டிக் காட்டுமுன் மனதில் இறுத்துங்கள் குற்றமில்லாத மனிதனே இல்லை இவ்வுலகில், உங்களியும் சேர்த்துதான், என்பதை.

மனத்திலே சோர்வா? சோகமா? கவலை இன்றிப் புன் முறுவல் செய்யுங்கள். பறந்து விடும் அவை சூரியன் கண்ட பனி போல.

இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்ப்து இல்

என்ற வள்ளுவன் வாக்கினை நினைவில் வையுங்கள். சந்தோஷ மடையுங்கள், நீங்கள் உயிருடன் தான் இருக்கிறீர்கள் அதுவும். நல்ல உடல் நிலையுடன்.

நடராஜன் கல்பட்டு

அழகி ஒரு தனித் தன்மை வாய்ந்த, சுலபமாக உபயோகப் படுத்த்ப் படக்கூடிய, ஆங்கிலத்தில் தட்டுவதை தமிழாக்கம் செய்தளிக்கும் மென் பொருள். அதுவும் இலவசமாக உங்கள் கணினி வந்து சேரும் ஒன்று.

சொடுக்குங்கள் இங்கே


Designed and maintained by AKR Consultants