- பக்ரீத் திருநாள்
- திருமதி விசாலம் ராமன்
எல்லா முஸ்லிம் சகோதர்களுக்கும் அன்பர்களுக்கும் பக்ரீத் திருநாள் வாழ்த்துகள்.
இந்தத் திருநாளைப்பற்றி எனக்குத்தெரிந்த செய்தியைப் பகிர்ந்துக்கொள்கிறேன். முஸ்லிம் அன்பர்கள் எதேனும் தவறு இருந்தால் மன்னிக்கவும்.
தியாகத்தைக் குறிக்கும் இந்தத் திருநாள் மிகவும் உயர்ந்த ஒன்றாக இருக்கிறது. உலகத்திலேயே அன்பு தியாகம் என்று இரண்டு இருந்தால் அங்கு அமைதி தன்னாலேயே உண்டாகும்.
"இதுல் ஸுஹா - Idul zuha" என்றும் இந்தத் திருநாளைச் சொல்கிறார்கள்.
நபி இப்ரஹீம் அவர்கள் அல்லா மாலீக் காக எதை வேண்டுமானாலும் செய்வார். அவர் அல்லா மேலும் அநத மதத்தின் மேலும் அளவில்லா நம்பிக்கை வைத்திருந்தார். பலவிதமான சோதனைகளிருந்தும் அன்பும் தியாகமும் கொண்டிருந்ததால் மீண்டு வந்தார். அவருக்கு இரு மனைவிகள், ஆனால் புத்திர பாக்கியம் இல்லாது இருந்தது, அதனால் அவர் பலமுறை அல்லாவைப் பிரார்த்திக்க, அவரது இரண்டாவது மனவியான ஹாஜாராவுக்கு ஒரு ஆண் மகவு பிறந்தது. பின்னால் நபி இஸ்மாயிலாக ஆனவர் இவர்.
ஒரு நாள் நபி முகமது அவர்கள் நபி இபரஹீம் கனவில் வந்தார். பின் அவரது மகன் இஸ்மாயிலை தியாகம் செய்யும்படியும் கேட்டுக்கொண்டார். இது கனவானாலும் இதன்படி நடக்க இப்ராஹிமும் அவரது மகனும் தயாரானார்கள், அல்லா செய்வது நன்மைக்கே என்று எடுத்துக்கொண்டார்கள் அவர் மேல் முழு நம்பிக்கை வைத்தார்கள். மகனை வெட்டத் தயாரானார் நபி இஸ்மாயில். மகனும் அவர் எங்கேயாவது மனம் இளகி தடுமாறுவாரோ என்று எண்ணி அவரது கண்களைக் கட்டிவிட்டார். பின் நபி இப்ராஹீம் மகனைத் தியாகம் செய்தப்பின் தன் கண்கட்டை அவிழ்த்து திரும்பிப் பார்க்க, அங்கு ஒரு செத்த மிருகம் {Ram} இருந்தது. மகன் உயிருடன் நின்றிருந்தார்.
இதை பார்க்கும் போது எனக்கு சிறுதொண்டர் புராணம் நினைவுக்கு வருகிறது. அங்கும் ஏறத்தாழ இதே போல் நடந்தது தான்.
சிவனடியாருக்கு அன்னம் அளித்தப்பின் தான் சிறுதொண்டர் சாப்பிடுவது வழக்கம். மன்னரின் சேனதிபதியான பரஞ்சோதியாரே இவர். ஒரு நாள் அவ்ர் வீட்டிற்கு ரொம்ப நேரமாகியும் ஒரு அடியாரும் வராததால் அடியாரைத் தேட இவர் வெளியில் சென்றார். அவரைச் சோதிக்க எண்ணி சிவபெருமானே இப்படி ஒரு நாடகம் நடத்தினார். சிவனே ஒரு பைரவர் சடாதாரி வேஷத்தில் வந்து சாப்பிட கேட்டார். அவரது மனைவி மகிழ்ந்து, "அடியாரைத் தேடித்தான் என் கண்வர் போயிருக்கிறார். இதோ வந்துவிடுவார் என்றார். சிவனும் வெளியே ஒரு மரத்தடியில் அமர்ந்தார். பின் சிவன் வந்தபின் சாப்பாடு தயாராக இருந்ததால் இலை போடப்பட்டது, ஆனால் சிவனோ அவரது மகனைக் கறி செய்து படைத்தால்தான் தான் சாப்பிடுவேன் என்று சொல்ல, அடியாருக்கு அன்னம் படைப்பதே தன் முதல் கடமை என்பதால் அதேபோல் தன் ஐந்து வயது மகன் சீராளத்தேவன் பள்ளியிருந்து வந்ததும் அவன் சம்மதத்துடன் தம்பதிகள் இருவரும் அவனை வெட்டிக் கறி சமைத்தனர். பின் உணவு உண்ணும் சமயம் சிவன் ரூபத்தில் இருந்த அடியார், "பிள்ளை இல்லாத வீட்டில் நான் உண்ண மாட்டேன் என்று சண்டி பண்ண, சிறுத்தொண்டர் மனம் கலங்கி சிவபெருமானை வேண்ட, பின் வெட்டப்பட்டு உணவாக இருந்த மகன் உயிருடன் திரும்பி வந்தான். பின் அங்கு நிலைமை எப்படி இருந்திருக்கும்? ஒரே ஆனந்தம் தான்.
எனக்கு இந்தக் கதை போல் இருந்தது "பக்ரீத்" பண்டிகையின் சம்பவமும். ஒரே வித்தியாசம், ஒன்று கனவாக வந்து அதனால் ஏற்பட்ட சம்பவங்கள், மற்றொன்று உண்மையாகவே நிகழ்ந்த சம்பவங்கள். இரண்டிலும் தியாகம், நம்பிக்கை, அன்பு முக்கியத்துவம் பெருகின்றன. இரண்டிலுமே மகனாய் இருந்தாலும் கடவுளுக்கு அர்ப்பிக்கும் சந்தர்ப்பம் வந்தால் மகிழ்ச்சியுடன் ஏற்க வேண்டும் என்று புரிய வைக்கிறது. இரண்டிலும் மகனின் சம்மதமும் இருந்திருக்கிறது. இரண்டிலும் கடவுளின் அனுகிரஹத்தால் மகன்கள் உயிர் பிழைத்து வருகின்றனர்.
பக்ரீத் பண்டிகை அன்றுதான் குர்ரான் புத்தகம் முடிக்கப்பட்டது. இன்றைய தினம் பலர் மக்காவிற்குப் புனித யாத்திரை மேற்கொள்வார்கள். நபி இஸ்மாயில் வெட்டப்பட்ட இடத்திற்கும் செல்வார்கள். ஆட்டைப் பலிக்கொடுப்பார்கள். பக்ரி என்றல் ஆடு என்று அர்த்தம். பின் பலருக்கு பிரசாதமாக அந்த ஆட்டின் இறைச்சியில் செய்த உணவைக் கொடுப்பார்கள் அவர்கள் தலையை மொட்டையும் அடித்துக்கொள்கின்றனர். புத்தாடைகள் உடுக்கின்றனர் இனிப்பும் செய்து வழங்குகின்றனர்.
பக்ரீத் திருநாளுக்கு என் இனிய வாழ்த்துகள்.
Designed and maintained by AKR Consultants

