- சுவற்றில் ஓர் வாசகம்
- நடராஜன் கல்பட்டு
வாங்கியவற்றை அலமாரியில் வைத்தாள்
காத்திருந்த மூத்த மகன் வழக்கம் போல்
புகார் சொன்னான் தம்பி மேல்
அம்மா நீ சென்றாய் வெளியே
அப்பா பேசிக் கொண்டிருந்தார் போன் வழியே
எங்களறை சுவற்றில் ஒட்டினாயே அழகிய காகிதம்
அதில் கிறுக்கினான் தம்பி கல்ர் பென்சில் கொண்டே
நான் சொல்வதை நீ நம்பு
சென்று பார் நீயே எனக்கேன் வம்பு
கோபம் தலைக் கேறிய தாய்
அலறினாள் ஐயோ வென்று
ஓடினாள் அவள் குழந்தைகள் அறை
பார்த்தாள் அவள் ஒட்டிய காகிதம் தனை
சிரித்தன கிறுக்கல்கள் அவள் முகம் பார்த்து
பனித்தன அவள் கண்கள் அதை படித்து
அணைத்தாள் அவள் மார்புடன்
சின்னக் குழந்தையை
பெரியவன் முகத்திலோ ஏமாற்றம்
தாய் கண்ட கிறுக்கல்கள்
தருகிறேன் கீழே நான்
|
|
|
|
|
|
|
|
|
|
|
அம்மா உன்னை நான் நேசிக்கிறேன்
உந்தன் நரேன்
பி.கு. இது திரு வெங்கடராம் ஸ்ரீனிவாஸ் அவர்கள் அனுப்பியிருந்த ஒரு ஆங்கிலக் கவிதையைத் தழுவி எழுதப் பட்டது
Designed and maintained by AKR Consultants


