முன்னாளைய தகவல்கள்
   
Tamil-English bilingual webmagazine dedicated to education of the masses through E-books, articles, worldwide informations, Slideshows, Presentations on various subjects, photographs and images, moral and objective oriented stories and Lectures including audio and video

தினம் ஒரு தகவல்
ஜீன் 17, புதன் 2009


சிந்தனைகள்

இன்னும் ஈரமாக!
ஓ!
என் இனிய கவிதைகளே!
என்
நினைவு மரணப்படும்
ஒவ்வொரு இரவிலும்
நான்
உங்களோடுதான்
உறங்கிக் கொண்டிருக்கிறேன்!

என்
இதயப் பொய்கை
எப்போதோ
வற்றத் தொடங்கிவிட்டது!
ஆனாலும் -
உங்களின ஈரத்தால்தான்
அதைக்
காய்ந்துவிடாமல்
காத்துக் கொண்டிருக்கிறேன்!

என்
இனிய கவிதைகளே
என்
எண்ணத்தைப் போலவே
என்கைகளும்
எழுதப்பழகிக்கொண்டதால்
நீங்கள் எனக்குள்
இன்னும்
ஈரமாக இருக்கிறீர்கள்!

- நன்றி மஞ்சை மயிலன்

அனுதின‌மும் ஆனந்தமாய் வாழ்ந்திட‌ வாழ்த்துக்க‌ளோடு,
கொல்லி ம‌லை சார‌ல் பொ. ஆனந்த் பிர‌சாத்

கல்விச்சேவை     anudhinam

தினம் ஒரு தகவலை பெற: ananthprasath@drcet.org


Designed and maintained by AKR Consultants