முன்னாளைய தகவல்கள்
   
Tamil-English bilingual webmagazine dedicated to education of the masses through E-books, articles, worldwide informations, Slideshows, Presentations on various subjects, photographs and images, moral and objective oriented stories and Lectures including audio and video

தினம் ஒரு தகவல்
ஜீன் 12, வெள்ளி 2009


சிந்தனைகள்

· ஒரு மனிதனை துவங்க வைப்பது அகத்தூண்டுதலாகும். அவனைச் சரியான பாதையில் செலுத்துவது செயல் தூண்டுதலாகும். தன்னியல்பாய் அதைச் செய்ய வைப்பது பழக்கமாகும்.

· நாம் பழக்க வழக்கங்களை உருவாக்குகிறோம். பழக்க வழக்கங்கள் பண்பை உருவாக்குகின்றன.

· நல்ல பழக்க வழக்கங்கள் வருவதற்குக் கஷ்டமாக இருக்கலாம். ஆனால் அவற்றோடு வாழ்வது சுலபமே ஆகும். தீய பழக்க வழக்கங்கள் சுலபமாக வருவதாக இருக்கலாம். ஆனால் அவற்றோடு வாழ்வது கடினமாகும்.

· சிறு திட்டங்களை தீட்டாதீர்கள், நம் இரத்தத்தைக் கிளர்ந் தெழச் செய்யும் சக்தி அவற்றிற்கில்லை…. பெருந் திட்டங்களைத் தீட்டுங்கள்; நம்பிக்கையுடன் உயர்ந்தவற்றைக் குறி வைத்து வேலை செய்யுங்கள்.

அனுதின‌மும் ஆனந்தமாய் வாழ்ந்திட‌ வாழ்த்துக்க‌ளோடு,
கொல்லி ம‌லை சார‌ல் பொ. ஆனந்த் பிர‌சாத்

கல்விச்சேவை     anudhinam

தினம் ஒரு தகவலை பெற: ananthprasath@drcet.org


Designed and maintained by AKR Consultants