முன்னாளைய தகவல்கள்
   
Tamil-English bilingual webmagazine dedicated to education of the masses through E-books, articles, worldwide informations, Slideshows, Presentations on various subjects, photographs and images, moral and objective oriented stories and Lectures including audio and video

தினம் ஒரு தகவல்
மே 14, வியாழன் 2009


மனதை ஆய்வு செய்தல்

மனதைப் பற்றி ஆய்வு செய்ய அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஏசலன் என்ற நிறுவனம் முடிவு செய்தது. அதன்படி வன்முறையை மிகவும் விரும்பும் மனம் கொண்டவரின் கண்களைக் கட்டி விட்டு, எதிரில் தலையணையை வைத்து இதை எதிரி என்று நினைத்துக் குத்தச் செய்தது. முதலில் குத்த நினைத்த மனிதர் பிறகு சற்று யோசித்துச் சிரித்தார்… தலையணையை எப்படிக் குத்துவது? என்று. இந்தத் தலையணைக்கும், ரத்தத்தில் உருவான மனிதனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று கூறியவுடன் அந்த மனிதன் தலையணையைத் தாக்க முற்பட்டான். அதைக் கண்டு அவரைச் சுற்றி நிற்பவர்களே ஆச்சிரியப்படும் வண்ணம் அவன் அடிக்கும் வேகம், அடிக்கும் விதம், தலையணையைக் கிழித்தல் போன்ற செயல்கள் வியப்பை உண்டு பண்ணின. பரிசோதனையின் பின் அவ்வாறு அடித்தவரின் மனம் மிக இலேசாகிவிடுவதை உணர்ந்தார்கள். அவர்களது மனம் இதற்கு முன் இவ்வளவு இலேசாக ஒரு போதும் இருந்ததில்லை.

வன்முறை தோன்றும் போது அதை யாரை நோக்கியாவது வெளிவிடச் செய்யலாம். அப்போது அது முழுதும் தீர்ந்துபோகும். உதாரணமாக, வன்முறையைக் காற்றிடம் காட்டலாம். ஏனெனில் அது எதிர்க்காது. அதுவே மனிதரை நோக்கி வெளிப்படுத்தினால் பதிலடி பெற நேரிடும். என்னால் குத்தப்படுபவனே என்னை நோக்கிக் குத்துவான். அவன் இன்றோ, நாளையோ அல்லது எதிர்காலத்திலோ தாக்கலாம். அவன் காத்திருக்கலாம். கண்டிப்பாக என்றாவது ஒரு நாள் திருப்பித் தாக்கலாம். ஒருவரை அடிக்கும் போது, பின்னால் அதற்காக வருத்துதல் மட்டுமின்று இன்னொரு தாக்குதலுக்கு பதிலடி தரவும் தயாராகிறோம். இவ்வாறு வன்முறை ஒரு விஷ மட்டத்தை உருவாக்குகிறது.

“நமது பகைமையைக் காற்றிடம் காட்டலாம். தலையணையிடம் காட்டலாம்.
அவை நம்மை எதிர்க்கா. நமக்கு மற்றொருவரின் பகைமையை உருவாக்கா”.

அனுதின‌மும் ஆனந்தமாய் வாழ்ந்திட‌ வாழ்த்துக்க‌ளோடு,
கொல்லி ம‌லை சார‌ல் பொ. ஆனந்த் பிர‌சாத்

கல்விச்சேவை     anudhinam

தினம் ஒரு தகவலை பெற: ananthprasath@drcet.org


Designed and maintained by AKR Consultants