- Feedbacks for Shantham
- SPR
காரணம் இன்னதெனத் தெரியாத வகையில் இன்று நாம் வாழ்வின் பல நல்ல செய்திகளைத் தெரிந்து கொள்ளாமலே இருக்கிறோம். மஹாப்பெரியவர் கூறுவது போல, புராணக் கதைகளைக் கூறுவோர் கூட புராணத்தை ஒரு கதை என்ற அளவிலே சொல்கிறார்களே தவிர அது சுட்டிக் காட்டும் நீதியினைச் சொவதில்லை. பலர் சில நேரங்களில், தான் ஒரு செய்தியினை ஏன் சொல்கிறோம் என்று கூடத் தெரியாதவர்களாய், தான் எங்கோ படித்ததை, கேட்டதை (யாரோ சொன்னார்களாம் என்று பெயர் விவரம் கூடக் குறிப்பிடத் தெரியாமல்) அப்படியே சொல்கிறார்கள்; எழுதுகிறார்கள்.
பெரும்பாலான இன்றைய இளம் தலைமுறை மிகவும் புத்திசாலிகள். அதனாலேயே அவர்களால் எந்த ஒரு செய்தியினையும் அப்படியே ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சாக்ரடீஸ் முதல் அண்ணா வரை "கேள்வி கேட்டுப் புரிந்து கொள்" என்று அறிவுறுத்தியதால், அவர்கள் எது ஒன்றையும் கேள்வி கேட்கத் தொடங்குகிறார்கள். பதில் கிடைக்காத இடத்தில், குழப்பத்திற்கும் ஆளாகிறார்கள். அவர்களுக்கு புரியாததை அப்படியே ஏற்றுக் கொள்ள மறுக்கும் உரிமை உடையவர்களாகவும் இருக்கிறார்கள். கேள்வி கேட்கத் தேவையில்லாத, பொழுது போக்கு சாதனங்களான, எளிதில் மனதை ஈர்க்கும் சினிமா, தொலைக்காட்சி, இவை தவிர அண்மைக் காலத்தில் இணையதளம் ஆகியவை அவர்கள் மனதை ஆக்கிரமிக்கிறது. இணைய தளம் முழுவதும் நாளுக்கு நாள் குப்பைக் காடாக மாறிவருகிறது.
இந்த நிலையில், சற்றே மாறுபட்டு பயனுள்ள நல்ல செய்திகளைத் தருகிற "Shantham magazine" போன்ற நல்ல தரமான வெளியீடு பாராட்டப்பட வேண்டியதே. அதனை உருவாக்கி உலகிற்கு அறிமுகப்படுத்தும் உங்களுக்கு இளம் தலைமுறை சார்பாகவும், அந்த இளம் தலைமுறை நல்லவர்களாக, வல்லவர்களாக உருவாக வேண்டுமே எனக் கவலைப்படும் என் போன்றோரின் பாராட்டுக்கள் எல்லாம் ஒரு ஆதங்கத்தின் பிரதிபலிப்பே!
தொடரட்டும் உங்கள் பணி.
நண்பர் திரு ஹரிஹர மஹாதேவனுக்கும் எங்கள் பாராட்டுகள்.
எங்கள் நகரின் இளைய தலைமுறை சிலரிடம் பேசுகையில், அவர்களுக்கு ஆன்மீகம், இலக்கியம் இவற்றைவிட இந்த கல்வி சார்ந்த "Shantham magazine" (அவர்கள் பாஷையில் சொல்வதானால், நண்பர்கள் முன்பாக தனக்கு அறிவு சார்ந்த பல செய்திகள் தங்களுக்கும் தெரியும் என்று "பீற்றிக் கொள்ள") மிகவும் உதவியதாகச் சொல்கிறார்கள்!
திரு ஹரிஹர மஹாதேவனின் குறிக்கோள் வெகு விரைவில், நிறைவேறும் சந்தேகமேயில்லை.
அன்புடன்
செபரா
Designed and maintained by AKR Consultants

