- திருக்குறளும் என் குறளு(லு)ம்
அதிகாரம் 11: செய்நன்றி அறிதல்
ஓருதவி செய்யா ஒருவனுக்குச் செய்யுதவிக்(கு)
ஈருலகும் ஈடாகா திங்குணர் - பாரினில்
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது (11)
[முதல்குறள் ஈற்று = து ; ஆசு = இங்குணர்]
கடுகளவு சிற்றுதவி; போற்றுவார் பெற்றோர்
பெரும்பனை யின்அள வுக்கு - வெறுமோர்
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார் (12)
[முதல்குறள் ஈற்று = வுக்கு ; ஆசு = -]
துன்பம் துடைத்தநல் நட்பையே ஏழ்பிறப்பும்;
நெஞ்சினில் கொள்வார்சான் றோர்பாரில் - என்றும்
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தம்கண்
விழுமம் துடைத்தவர் நட்பு (13)
[முதல்குறள் ஈற்று = றோர் ; ஆசு = பாரில்]
அதிகாரம் 12 : நடுவு நிலைமை
நேர்நிலையில் சேர்த்தோரின் செல்வம்; நிலைத்தவர்
வாரிசுக்கும் நன்மை தருமென்றும் - பாரினில்
செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவுஇன்றி
எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து(14)
[முதல்குறள் ஈற்று = தரும் ; ஆசு = என்றும்]
நல்லார் நடுவிலார் என்பதை அவரவர்
மக்கள் குணமுணர்த் தும்பார் - தலைவர்
தக்கார் தகவிலார் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும் (15)
[முதல்குறள் ஈற்று = தும் ; ஆசு = பார்]
அதிகாரம் :13 அடக்கம் உடைமை
அடக்கமே சொர்க்கம் அளிக்கும்; தவறின்
கடும்நரகம் தள்ளி விடுமுணர் - சுட்டும்
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும் (16)
[முதல்குறள் ஈற்று = விடும் ; ஆசு = உணர்]
நிலையில் வழுவா(து) அடங்கிவாழ் பவன்பிம்பம்
கல்மலையைக் காட்டிலும்பெ ரிதிங்கு - நிலைத்து
நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது (17)
[முதல்குறள் ஈற்று = ரிது ; ஆசு = இங்கு]
என்றும் அன்புடன் துரை
Designed and maintained by AKR Consultants

