Bookmark and Share 


Healthcare Tips
Parents Home
Couples Suit
Spiritual Path
Student's Corner
Youth Resort
Management
Lighter Moments
Entertainment
Serious Side
World Tour
Internet Links
Snippets

Tamil Software
அழகி மென்பொருள்
  
Tamil-English bilingual webmagazine dedicated to education of the masses through E-books, articles, worldwide informations, Slideshows,
Presentations on various subjects, photographs and images, moral and objective oriented stories and Lectures including audio and video

வைகுண்ட ஏகாதசி 11-1-2014

Courtesy: KTR, Chennai

வைகுண்ட ஏகாதசி 11-01-2014\

ஒருசமயம் பிரளயத்தில் மூழ்கிய உலகத்தை மறுபடியும் உண்டாக்க விரும்பிய திருமால் நான்முகனைப் படைத்தார். அந்த பிரம்மாவை எதிர்த்து அவரை அழிக்க முயன்றார்கள் இரண்டு அசுரர்கள். பிரம்மதேவனைக் காப்பதற்காக திருமால் அவர்களை வதைக்க வந்தபோது, அவ்வசுரர்களுக்கு நல்லறிவு வந்தது. அவர்கள் திருமாலிடம், ""எங்களை வதைப்பதைப்பற்றி கவலையில்லை. உங்களால் அழிக்கப்பட்டால் எங்களுக்கு சித்தியடையும் வாய்ப்பு கிடைக்கும். அதனால் எங்களுக்கு மரணம் ஏற்பட்டவுடன் வைகுண்டத்தில் வாசம் செய்யும்படியான பாக்கியத்தை அளிக்கவேண்டும்'' என்று வேண்டினர்.

திருமாலும் அவர்களின் வேண்டுதலையேற்று, மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசியன்று விண்ணகரத்தின் வடக்கு வாசலைத் திறந்து

அதன்வழியாக சத்யலோகத்திற்கு மேலுள்ள பரமபதத்திற்கு அவர்களை அனுப்பினார். திருமாலிடம் அரக்கர்கள் வேண்டியபடி, அந்த நன்னாளில் பூவுலகிலுள்ள திருக்கோவில்களில் சுவர்க்க வாசல் வழியாகத் தான் எழுந்தருளுவதாகவும்; அன்று அந்த தரிசனத்தைப் பெற்றவர்களுக்கும் சுவர்க்க வாசல் வழியாக வருபவர்களுக்கும் மோட்சம் அளிப்பதாகவும் அனுக்ரகித்தார்.

அந்த நன்னாளே வைகுண்ட ஏகாதசித் திருநாளாக அனைத்து திருக்கோவில்களிலும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. அதற்கு முன்னுள்ள பத்து நாட்களும் பின்னுள்ள பத்து நாட்களும் பகல் பத்து, இராப்பத்து என்னும் உற்சவங்கள்- திருமங்கை யாழ்வார், நாதமுனிகள், பகவத் ராமானுஜர் வழிகாட்டியபடி தற்போதும் நடந்துவருகின்றன.

ஏகாதசியின் மகிமையைப் பற்றி ஆங்கீரஸ முனிவரிடம் தான் அறிந்ததை தருமபுத்திரர் முதலானவர்க்கு உபதேசித்தார் பீஷ்ம பிதாமகர். அவையாவன:

✶ சிறந்த குலத்தில் பிறந்து சீரும் சிறப்புடனும் வாழ சித்திரை, வைகாசி மாதங்களில் ஏகாதசி விரதங்களை அனுஷ்டிக்க வேண்டும்.

✶ ஒருவேளை உணவருந்தி ஆனி மாத ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பவர்கள் வாழ்வில் சகல சௌபாக்கியங்களையும் அடைவர்.

✶ ஆடி மாத ஏகாதசி விரதம் அனுஷ் டிப்பவர்கள் நன்மக்கட்பேறினை அடைவர்.

✶ அழகும், செல்வவளமும் பெற்று வாழ்பவர்கள் ஆவணி மாத ஏகாதசி விரதங்களை அனுஷ்டிப்பவராய் இருந்திருப்பர்.

✶ புரட்டாசி ஏகாதசி விரதமிருப் பவர்களுக்கு செல்வச் செழிப்பு, இகபர சுகங்கள் கிடைக்கும்.

✶ சிறந்த புத்திமானாய் நற்பிறவி அமைய, ஐப்பசி மாத ஏகாதசி விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும்.

✶ கார்த்திகை மாத ஏகாதசி விரதமிருப்பவர்கள் தைரியமும் வீரியமும் உள்ளவராய் மறுபிறவி எடுப்பர்.

✶ மார்கழி மாத ஏகாதசி நோன்பு நோற்பவர்கள் மோட்ச சாம்ராஜ்ஜியத்தையே அடைவர்.

✶ புகழ்பெற்றவராய் விளங்க தை மாத ஏகாதசி விரதம் கைகொடுக்கும்.

✶ மாசி, பங்குனி மாத ஏகாதசி உபவாசம் அனுஷ்டிப்பவர்கள் கீர்த்தியுடன் விளங்குவர்.

வைகுண்ட ஏகாதசி விரதம் மோட்ச சாம்ராஜ்ஜியத்தையே தருவதால், மோட்ச ஏகாதசி என்று புகழப்படுகிறது.

வைகுண்ட ஏகாதசியன்றுதான் திருமால் மந்தரமலையைக் கொண்டு திருப்பாற்கடலைக் கடைய கூர்மாவதாரம் எடுத்தார் என்பது ஆன்றோர்கள் கூற்று.

அதேபோல திருப்பாற்கடலிலிருந்து ஆலகால விஷம் தோன்றியபோது பரமசிவன் அவ்விஷத்தை உண்டு நீலகண்டனானார் என்பதால், இந்துக்களுக்கு முக்கிய விரதமாக இது அமைந்துள்ளது. மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசியன்றுதான் கண்ணபரமாத்மா கீதோபதேசம் செய்தார் என்ற தகவலும் உண்டு. ஸ்ரீரங்கத்தைப் போன்றே பண்டரிபுரம், குருவாயூர் தலங்களும் ஏகாதசி விரத மகிமை கொண்டவை.

நம்மாழ்வாருக்கு முன்பாக வைகுண்டம் செல்வார் யாருமில்லையென்றதால்தான் அது மூடப்பட்டிருந்ததாம். ஆழ்வார் வைகுண்டப் பிராப்தியடைந்தபோதே அவருக்காக அது திறக்கப்பட்டதாம். இந்த தத்துவத்தின் அடிப்படையிலேயே திருமால் திருத்தலங்களில் வைகுண்ட ஏகாதசியன்று சுவர்க்க வாசல் திறப்பு வைபவம் நடைபெறுகிறது.

ஏகாதசி விரதம் எல்லாவற்றையும் தரும். முறையாக விரதமிருந்து பரமபதநாதனைப் பணிந்தால் கிட்டாத பேறுண்டோ!

ஓம்ஹரிஹரிஓம்

ஓம்ஹரிஹரிஓம்

ஓம்ஹரிஹரிஓம்

ஓம்ஹரிஹரிஓம்

Tell A Friend!
Type In Your Name:
Type In Your Email:
Your Friend's Email:
Your Comments:

Receive copy:

PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:  

*E-mail:  

*Comments:


*Enter number in the text box below



Post your comments to Facebook




Designed and maintained by AKR Consultants