Bookmark and Share 


Healthcare Tips
Parents Home
Couples Suit
Spiritual Path
Student's Corner
Youth Resort
Management
Lighter Moments
Entertainment
Serious Side
World Tour
Internet Links
Snippets

Tamil Software
அழகி மென்பொருள்
  
Tamil-English bilingual webmagazine dedicated to education of the masses through E-books, articles, worldwide informations, Slideshows,
Presentations on various subjects, photographs and images, moral and objective oriented stories and Lectures including audio and video

பெரியவா நடத்தை வைத்த உபநயனம்

Courtesy:

பெரியவா நடத்தை வைத்த உபநயனம்

சுந்தரராமன் என்ற பக்தரின் அனுபவங்களைத் தொடருவோம்.........

படிப்புக்கான செலவோடு, தினமும் அவனுடைய சாப்பாட்டுக்கும் பெரியவா தன்னுடைய அத்யந்த பக்தர்களிடம் "பிக்ஷை" எடுத்தார். வாரத்தின் ஆறு நாட்கள் வெவ்வேறு பக்தர்கள் மனமுவந்து அவனுக்கு அன்போடு அன்னமிட்டனர். அவனுக்கு உள்ளே ஒரே உளைச்சல்! பெரியவாளை தர்சனம் பண்ண காஞ்சிபுரம் சென்றான்.

"வாரத்துக்கு ஒருநாள் போக, மீதி நாளுக்கு ஒனக்கு சாப்பாட்டுக்கும், தங்கறதுக்கும் என்னோட பக்தாள் மூலம் ஏற்பாடு பண்ணிட்டேன்" குழந்தையாக புன்னகைத்தார். அவன் பேசாமல் இருக்கவே அவன் எண்ணத்தை புரிந்து கொண்டவர்...

"நான் செஞ்ச இந்த ஏற்பாடு ஒனக்கு கொஞ்சமும் பிடிக்கலே; கொஞ்சம் கௌரவக் கொறைவா இருக்கலாம். அப்டி எதுவும் நடக்காது! ஒனக்கு சாப்பாடு போடறவா எல்லாரும் என்னோட பரம பக்தாள். அவாங்..கள்ள ஒனக்கு ராஜோபசாரம் நடக்கும்.." சுந்தரராமன் பதிலே சொல்லவில்லை.

"நீ தமிழ்ல புலவனாச்சே! "கற்கை நன்றே கற்கை நன்றே; பிச்சை புகினும் கற்கை நன்றே"ன்னு ஔவையார் பாட்டுத் தெரியுமோல்லியோ? நான் செஞ்ச இந்த ஏற்பாடு, பிச்சை எடுக்கறதுக்கு சமம்ன்னு நீ நெனைச்சே. ஆனா, இப்போ நான் சொல்றேன் கேளு! அந்தப் பிச்சையை நீ எடுக்கலே; ஒனக்காக நான் பிச்சை எடுத்தேன்!.."

பெரியவா பேசி முடிக்கவில்லை, "ஓ !"வென்று கதறிக் கொண்டு அவர் பாதங்களில் விழுந்து அழுதான் சுந்தரராமன்.

சிறுவனாக இருக்கையில், ஓரிக்கையில் ஒருநாள் பெரியவாளோடு இருக்கும்போது, அவனுக்கு பூணூல் இல்லாதிருப்பதைப் பார்த்தார்.

"ஏண்டா! இன்னும் உபநயனம் ஆகலியா?.."

"அதுக்கான பணம் அப்பாட்ட இல்லே போலருக்கு பெரியவா..." சில நிமிஷங்கள் மெளனமாக இருந்துவிட்டு, அவனுக்கு சொல்வதாக, எல்லாருக்குமாக ஒரு ப்ரசங்கமே பண்ணினார்.

"இன்னைய ப்ராம்மண சமூஹம் எனக்குக் கொஞ்சங்கூட த்ருப்தியாவே இல்லே; உபநயனம் மாதிரி எளிமையான, அதே சமயம் ரொம்ப முக்யமான சம்ஸ்காரங்களை கூட பெரிய ஆடம்பரமா ஒரு விழா மாதிரிப் பண்ணிடறா!பட்டுப்பொடவை, விருந்து, செலவுன்னு பணத்தை வாரி எறைக்கறா! இதுனால சம்ஸ்காரத்தோட முக்யமான அம்சத்தையே மறந்துடறா! எனக்கு சம்மதமே இல்லாட்டாலும் செரி...பணக்காரா வேணும்னா அவாளோட அந்தஸ்த்தை காட்டிக்கறதுக்கு, இஷ்டத்துக்கு செலவு பண்ணட்டும். ஆனா, இந்த ஏழை ஜனங்களும் இதைப் பாத்து காப்பி அடிக்கறச்சேதான் கஷ்டம் வருது. உபநயனம் மாதிரி சின்ன விசேஷத்துக்குக்குக்கூட, தங்களோட சக்திக்கு மீறி கடன் வாங்கறா. கல்யாணம் நிச்சயம் ஆறவரைக்கும் கூட சில பிள்ளையாண்டான்களுக்கு பூணூலே போடறதில்லே; கல்யாண ஸுப முஹூர்த்தங்களோ.....இன்னும் படு மோசம்! ஆயிரமாயிரமா [1960ல் ஆயிரமாயிரம்; இப்போ? லக்ஷலக்ஷமா,கோடிகோடியா] செலவு பண்ணி, ரொம்ப ஆடம்பரம் பண்ணறா! வரதக்ஷிணைங்கறது எத்தனையோ பொண்கள் வாழ்க்கையையே பாதிச்சிருக்கு. என்னோட உபதேசங்கள் இந்த சமூஹக் கொடுமைகளை கொஞ்சங்கூட மாத்தினதாத் தெரியலே! எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியலே!.." என்று சொல்லிவிட்டு சற்று நேரம் மெளனமாக இருந்தார்.

"மத்தவாளைப் பத்தி நா ஏன் பேசணும்? நீ எனக்கு முன்னாடி தொறந்த மார்போட நிக்கறே! இதை நான் எப்டி கவனிக்காம விட்டேன்? போ! போய் பஞ்சாங்கத்தைக் கொண்டா! ஒங்கப்பாவையும் அழைச்சிண்டு வா!.." பஞ்சாங்கமும், அப்பாவும் அடுத்த க்ஷணம் ஆஜர்.

"அடுத்த வியாழக்கெழமை நாள் நன்னா இருக்கு. அன்னிக்கே இவனுக்குப் பூணூல் போட்டுடு"

அப்பா ஏதோ சொல்ல வாயெடுக்க...

"பணம் இல்லே; சொந்தக்காராளை அழைக்க அவகாசம் இல்லேன்னெல்லாம் சொல்லாதே!மடத்து சாஸ்த்ரிகளுக்கு ஒன் சக்திக்கேத்தபடி ஸம்பாவனை பண்ணு. உபநயனத்தை அவர் பண்ணிவெப்பார். மடத்து உக்ராணத்ல வேணுமான ஸாமான் இருக்கு. நீ, பையன், அவனோட தாயார் தவிர வேற யாரும் இந்த ஸுப கார்யத்துக்கு அவஸ்யம் இல்லே! "

"அடுத்த வியாழன், பெரியவா உத்தரவுப்படி எனக்கு நைவேத்ய கைங்கர்யம் இருக்கே!.."

"ஓஹோ! பேஷா பண்ணேன்! நீ நைவேத்ய கைங்கர்யமும் செய்யப்போறே; அதே நாள்ள ஓம்பையனுக்கும் உபநயனம் பண்ணி வெக்கப் போறே! உபநயனத்தை இதே கோசாலைல இதே எடத்ல நடக்கணும்.ஆனா, பஸுவுக்கு எந்த எடைஞ்சலும் இருக்கப்...டாது. நீ பூர்வாங்க வேலையை விடிகாலமே ஆரம்பிச்சுடு. அப்றம் சந்த்ரமௌளீச்வரருக்கு நைவேத்யம் தயார் பண்ணிடு. அங்க நான் பூஜையை ஆரம்பிக்கறச்சே, இங்க வைதீக கர்மால கலந்துக்கோ. நான் சந்த்ரமௌளீச்வரருக்கு சந்தனாபிஷேகம் பண்றச்சே, அதே டைம்ல இங்க உபநயனம் நடக்கணும். போ! இப்போ ஒன் வேலையைப் பாரு!.." ஸாக்ஷாத் பெரியவாளே போடும் ப்ளான் நடக்காமல் போகுமா?

இன்விடேஷன், சொந்தக்காரர்கள் கூட்டம், பட்டுப் புடவைகள், புத்தாடைகள் எதுவுமே இல்லாமல், மிக மிக நன்றாகவே உபநயனம் நடந்து கொண்டிருந்தது. அங்கே பெரியவா சந்த்ரமௌளீச்வரருக்கு சந்தனாபிஷேகம் செய்யும் போது, இங்கே கோசாலையில் ஒரு தம்பதி கையில் பெரிய மூங்கில் தட்டோடு நுழைந்தனர். நங்கவரம் சுந்தரமையரும் அவருடைய சஹதர்மிணியும்தான் அது! ஸ்வாமிக்கு அழகான கல்யாணி ராகத்தில் நாதஸ்வரம் வாசித்துக் கொண்டிருந்தார்கள்.

"பெரியவா நேத்திக்கி எங்களண்டை "நாளைக்கி காலமே எனக்கு ரொம்ப ப்ரியமான பையனுக்கு பூணூல். நான் நடத்தற இந்த பூணூல் கல்யாணத்துக்கு எனக்கு யாருடா ஒதவப் போறான்னு பாத்துண்டிருந்தேன். சரியான டைமுக்கு நீங்க ரெண்டு பேரும் வந்திருக்கேள். எனக்கு ஒதவி பண்றேளா?.."ன்னு கேட்டா...

"எங்களோட பாக்யம் ! பெரியவா என்ன சொன்னாலும் செய்ய சித்தமாயிருக்கோம்"ன்னு சொன்னோம்.

"பையனுக்கும்,அப்பா அம்மாக்கும் புதுத் துணி எடுங்கோ. தங்கப்பூணூல்,வெள்ளிப்பூணூல் பழம், மாலை, வெத்தலை பாக்கு எல்லாம் இப்போவே கடைகள் மூடறதுக்குள்ள போய் வாங்கிடுங்கோ" ன்னு சொன்னா.....

நங்கவரம் தம்பதி மகிழ்ச்சியோடு உடனே ஓடிப்போய் எல்லாவற்றையும், தங்கள் பிள்ளைக்கு வாங்குவது போல் பார்த்துப் பார்த்து வாங்கி, பெரியவாளிடம் வந்து காட்டி ஆசிர்வாதமும் வாங்கிக் கொண்டனர். அன்று அந்த கோசாலையில் இருந்த அத்தனை பேருடைய கண்களும், மனங்களும் பெரியவாளுடைய கரைகாணாக் கருணையை எண்ணி எண்ணி நெகிழ்ந்தன. புதுப்பூணூலோடு பெரியவாளை வந்து நமஸ்கரித்தான்.

"என்ன? ஒம்பிள்ளையோட பூணூல் நன்னா...ஜாம்ஜாம்ன்னு நடந்துதா?..." என்று விஜாரிக்க வேறு செய்தார்.

Tell A Friend!
Type In Your Name:
Type In Your Email:
Your Friend's Email:
Your Comments:

Receive copy:

PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:  

*E-mail:  

*Comments:


*Enter number in the text box below



Post your comments to Facebook




Designed and maintained by AKR Consultants