Bookmark and Share 


Healthcare Tips
Parents Home
Couples Suit
Spiritual Path
Student's Corner
Youth Resort
Management
Lighter Moments
Entertainment
Serious Side
World Tour
Internet Links
Snippets

Tamil Software
அழகி மென்பொருள்
  
Tamil-English bilingual webmagazine dedicated to education of the masses through E-books, articles, worldwide informations, Slideshows,
Presentations on various subjects, photographs and images, moral and objective oriented stories and Lectures including audio and video

* ஜென் பிரிவை தோற்றுவித்த மஹாகஷ்யபா *

Courtesy: KTR, Chennai

ஜென் பிரிவை தோற்றுவித்த மஹாகஷ்யபா *

போதிதர்மர் புத்த மதத்தின் ஜென் பிரிவை தோற்றுவிக்கவில்லை.உண்மையில் ஜென் பிரிவை தோற்றுவித்தவர் மஹாகஷ்யபா ஆவார். ஆனால் அவர் ஒருபோதும் பேசாத காரணத்தால் மக்கள் அவரை மறந்து விட்டார்கள். அவர் கால வெள்ளத்திற்குள் மறைந்து விட்டார்.

உண்மையில் அவர் ஒரு அற்புதமான மனிதர். அளவுகடந்த கருணை உள்ளம் கொண்டவர். அவர் எவ்வாறு ஜென் மதத்தை தோற்றுவித்தார் என்பது நினைவில் கொள்ள வேண்டிய விஷயமாகும்.

ஒருநாள் வைஷாலியைச் சேர்ந்த ஒரு செருப்புத் தைக்கும் ஏழைத் தொழிலாளியான சுதாஸ் தனது தோட்டத்தில் ஒரு தாமரைப் பூ மலர்ந்திருப்பதைக் கண்டார். அது தாமரைப் பூ பூப்பதற்கான பருவகாலம் கிடையாது. அதைக் கண்டதும் அவர் மிகவும் சந்தோஷமடைந்தார். அது பருவம் இல்லாத காரணத்தால் அந்த அழகிய தாமரைப் பூவை அவரால் நல்ல விலைக்கு விற்க முடியும் என்று நினைத்தார்.

அவர் அந்த பூவைப் பறித்து எடுத்துக் கொண்டு அரண்மனையை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த நகரின் பெரும்செல்வந்தர் தன் தங்கத் தேரில் அவ்வழியே வந்து கொண்டிருந்தார்.

அந்த அழகிய தாமரைப் பூவைப் பார்த்ததும் அந்த செல்வந்தர் தேரை நிறுத்தினார். பருவம் தவறிய காலத்தில் பூத்த அந்த தாமரைப் பூவை விற்க சுதாஸ்க்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டார்.

ஏழையான சுதாஸ்க்கு அந்தப் பூவுக்கு எவ்வளவு பணம் கேட்க வேண்டும் என்று தெரியவில்லை. நீங்கள் என்ன விலை கொடுத்தாலும் எனக்குப் போதும் என்று சொன்னார். நானே ஒரு ஏழை என்றார்.

ஆனால் அந்த செல்வந்தர், ஒருவேளை உனக்குத் தெரியாமல் இருக்கலாம், நான் நகரின் வெளியே மாந்தோப்பில் தங்கியுள்ள கௌதம புத்தரை சந்திக்கப் போகிறேன், இந்த பருவம் தவறிய தாமரைப் பூவை நான் அவரது பாதகமலங்களில் சமர்ப்பிக்கப் போகிறேன், இது போன்ற பரிசைக் கண்டு அவரும் ஆச்சரியப்படுவார், நான் உனக்கு 500 தங்க காசுகள் தருகிறேன் என்று சொன்னார்.

சுதாஸால் அதை நம்ப முடியவில்லை. தனக்கு 500 தங்க காசுகள் கிடைக்கும் என்று அவர் கனவு கூட கண்டதில்லை. ஆனால் அதற்குள் மன்னரின் தேர் அங்கு வந்து நின்றது. அந்தச் செல்வந்தர் என்ன தருகிறாரோ அதைவிட 4 மடங்கு அதிகமாக தருகிறேன், விற்றுவிடாதே நில் என்று சுதாஸிடம் மன்னர் கூறினார்.

என்ன நடக்கிறது என்பதை சுதாஸால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஒரு பூவிற்கு 500 தங்க காசுகளின் 4 மடங்கு, அதாவது 2000 தங்க காசுகள் கிடைக்கிறதா?நீங்கள், ஏன் இதில் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை என்று அவர் மன்னனிடம் கேட்டார்.

ஆனால் அந்த செல்வந்தரை அவ்வளவு எளிதில் தோற்கடித்து விட முடியாது.அவர் மன்னரைவிட பெரும் பணக்காரர். உண்மையில் மன்னன் அந்த செல்வந்தரிடம் ஏராளமான பணம் கடன் வாங்கியிருக்கிறார். நீங்கள் சொல்வது சரியல்ல, நீங்கள் மன்னர் என்றாலும் கூட, இப்போது நாம் இருவரும் போட்டியாளர்கள், மன்னர் என்ன தருகிறாரோ அதை விட 4 மடங்கு அதிகமாக தருகிறேன் என்று அவர் சொன்னார்.

இவ்வாறு, அவர்கள் இருவரும் மாறி மாறி 4 மடங்கு அதிகமாக தருவதாக சொன்னார்கள். எவ்வளவு பணம் கிடைக்கும் என்று சுதாஸால் கணக்குப் பார்க்க முடியவில்லை. அந்த ஏழைக்கு கணக்கும் அதிகமாக தெரியாது. விலை அவரால் எண்ண முடியாத அளவுக்கு ஏறிவிட்டது. ஆனால் திடீரென அவர் ஒன்றைப் புரிந்துகொண்டார்.இரண்டுபேரும் நிறுத்துங்கள், நான் பூவை விற்கப் போவதில்லை என்று சொன்னார்.

இருவரும் அதிர்ச்சியடைந்தனர். என்ன ஆச்சு என்று அவர்கள் கேட்டார்கள். உனக்கு அதிக பணம் வேண்டுமா என்று கேட்டனர்.

நீங்கள் எவ்வளவு பணம் கொடுப்பதாகச் சொன்னீர்கள் என்பதே எனக்குத் தெரியாது என்று சுதாஸ் சொன்னார். மேலும், எனக்கு அதிக பணம் தேவையில்லை, நான் ஒரு எளிய காரணத்திற்காக பூவை விற்க விரும்பவில்லை என்று சொன்னார். நீங்கள் இருவருமே இதை கௌதம புத்தருக்குத்தான் கொடுக்கப் போகிறீர்கள். எனக்கு அவரைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அவர் பெயரை மட்டும்தான் கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்கள் இவ்வளவு பணமும் தர போட்டியிடுகிறீர்கள் என்றால் அவர் எப்படிப்பட்டவரைக இருப்பார் என்பதை நான் புரிந்துகொண்டேன். அப்படியானால் நான் இந்த வாய்ப்பை நழுவ விடமாட்டேன். நானே இந்த தாமரைப் பூவை அவருக்கு பரிசளிப்பேன் என்று சொன்னார்.

புத்தர் இருமடங்கு ஆச்சரியப்படட்டும். ஒரு ஏழை கணக்கு வழக்கு இல்லாத அளவு பணம் கொடுக்க தயாராக இருந்தும் அதை ஏற்க மறுத்து விட்டு தானே அந்தப் பூவை பரிசளித்ததாக இருக்கட்டும் என்று சொல்லிவிட்டு சுதாஸ் புத்தரை நோக்கி புறப்பட்டார்.

மன்னரும், அந்த செல்வந்தரும் சுதாஸ்க்கு முன்பாகவே தங்கள் தேரில் புத்தரை சென்றடைந்தனர். நடந்த கதையை அவரிடம் சொன்னார்கள். ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளி தங்களை அதிர்ச்சியடைய வைத்துவிட்டதாகச் சொன்னார்கள். நாங்கள் தோற்றுவிட்டோம். என்ன விலை கொடுத்தாலும் பூவை விற்க மறுத்துவிட்டார். நான் எனது கருவூலம் முழுவதையும் கொடுக்கத் தயாராக இருந்தேன் என்று செல்வந்தர் சொன்னார்.

அப்போது சுதாஸ் நடந்தே அங்கு வந்து சேர்ந்தார். அவர் கௌதம புத்தரின் பாதங்களைத் தொட்டு வணங்கினார். அந்த தாமரைப் பூவை அவரது காலடியில் வைத்தார்.

சுதாஸ், நீ அவர்கள் கொடுத்த பணத்தை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்று புத்தர் சொன்னார், அவர்கள் ஏராளமான பணம் தந்திருப்பார்கள், என்னால் உனக்கு எதுவும் கொடுக்க முடியாது என்று சொன்னார்.

அப்போது, சுதாஸ் கண்களில் கண்ணீர் மல்க நின்றிருந்தார். நீங்கள் இந்த தாமரைப்பூவை உங்கள் கரங்களில் வாங்கிக் கொண்டாலே போதும் என்று சொன்னார். அது அந்தப்பூ தேசத்தை விட பெரிதாக இருந்தது. அந்த பெரும் செல்வந்தரின் கருவூலம் முழுவதையும் விட பெரிதாக இருந்தது. நான் ஒரு ஏழைதான். அதற்காக நான் கவலைப்படவில்லை. நான் என் வாழ்க்கையைப் பற்றியும் கவலைப்படவில்லை. நான் பணக்காரன் ஆக வேண்டிய தேவையுமில்லை. ஆனால் இது வரலாற்றுப் பூர்வமான நிகழ்வாக இருந்து பல நூற்றாண்டுகளுக்கு நினைவில் வைக்கப்படும். மனிதர்கள் உங்களை நினைவில் வைக்கும் வரை சுதாஸையும் நினைவில் வைப்பார்கள். அவரது தாமரைப் பூவும் நினைக்கப்படும். இதை நீங்கள் உங்கள் கரங்களில் எடுத்துக் கொண்டால் போதுமானது என்று சொன்னார்.

புத்தர் தனது கரங்களில் அந்த தாமரைப் பூவை எடுத்தார். அது அவர் வழக்கமாக காலைச் சொற்பொழிவை நிகழ்த்தும் நேரமாக இருந்தது. அவர் தனது காலைச் சொற்பொழிவை ஆரம்பிப்பார் என்று எல்லாரும் காத்திருந்தனர். ஆனால் புத்தர் தனது சொற்பொழிவை ஆரம்பிக்காமல் வெறுமனே அந்தத் தாமரைப் பூவையே பார்த்துக் கொண்டிருந்தார்.

நிமிடங்கள் கடந்தன. ஒரு மணிநேரம் கடந்தது. காத்திருந்த எல்லாரும் பொறுமையிழந்தனர். என்ன ஆனது? இந்தத் தாமரைப் பூ மனதை மயக்கம் பூவாக இருக்குமோ? அவர் வெறுமனே அந்த பூவை பார்த்தவாறே இருக்கிறாரே என்று எல்லாரும் நினைத்தனர். அந்த நேரத்தில், கௌதம புத்தரின் சீடர்களில் ஒருவரும், ஒருபோதும் பேசியிராதவருமான மஹாகஷ்யபா வாய்விட்டுச் சிரித்தார். அவரைப் பற்றி இந்த நிகழ்வுக்கு முன்பும் பின்பும் பேசப்படவேயில்லை. எந்தப் பதிவுகளிலும் அவர் பெயர் குறிப்பிடப்படவில்லை.

புத்தர் அவரை அழைத்து அந்த பூவை அவரிடம் கொடுத்தார். நான் உனக்கு இந்த பூவை மட்டும் கொடுக்கவில்லை. நான் எனது ஒளி, நறுமணம், விழிப்புணர்வு முழுவதையும் தருகிறேன் என்று சொன்னார். அது ஒரு அமைதியான கடத்துதலாக இருந்தது. அந்த பூ ஒரு அடையாளமாக கொடுக்கப்பட்டது.

இதுதான் ஜென் பிரிவின் ஆரம்பமாக அமைந்தது. என்ன நடந்தது என்று எல்லாரும் மஹாகஷ்யபாவிடம் கேட்டார்கள். நாங்கள் இங்கே இருந்தாலும் நடந்ததை கவனித்தாலும் எங்களால் அந்த பூ கொடுக்கப்பட்டதைத் தவிர எதையும் பார்க்க முடியவில்லை என்று சொன்னார்கள். நீங்கள் புத்தரின் பாதங்களை தொட்டு வணங்கிவிட்டு உங்கள் இடத்திற்குத் திரும்பிச் சென்று கண்களை மூடி அமர்ந்து விட்டீர்கள், என்ன நடந்தது என்று கேட்டார்கள்

Tell A Friend!
Type In Your Name:
Type In Your Email:
Your Friend's Email:
Your Comments:

Receive copy:

PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:  

*E-mail:  

*Comments:


*Enter number in the text box below



Post your comments to Facebook




Designed and maintained by AKR Consultants