Bookmark and Share 


Healthcare Tips
Parents Home
Couples Suit
Spiritual Path
Student's Corner
Youth Resort
Management
Lighter Moments
Entertainment
Serious Side
World Tour
Internet Links
Snippets

Tamil Software
அழகி மென்பொருள்
  
Tamil-English bilingual webmagazine dedicated to education of the masses through E-books, articles, worldwide informations, Slideshows,
Presentations on various subjects, photographs and images, moral and objective oriented stories and Lectures including audio and video

பெரியவா சரணம்....!!!!

Courtesy: KTR, CHENNAI

பெரியவா சரணம்

பரமாச்சாரிய சுவாமிகளிடம் பக்தி பூண்டு மனம் வசப்பட்டு வாழ்ந்தவர்களிடையே, புகழ்பெற்ற வழக்கறிஞர்களும் உண்டு. அவர்களில் முக்கியமான ஒருவர் நானிபல்கிவாலா. பார்ஸி இனத்தவரானாலும் அவருக்கு இந்துமதத்தில்-குறிப்பாக வேதங்களின் பெருமையில் –மிகுந்த மதிப்பு உண்டு. ஐயாயிரம் ஆண்டுகளாக பாரத தேசத்தின் பெருமையைக் காப்பாற்றிவரும் வேதங்களைப் பற்றிச் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் குறிப்பிட்டுப் பேசுவார்.

மகா சுவாமிகளிடம் ஆசிகளைப் பெறுவதற்காக, அவர் சுவாமிகளின் 88வது வயது நிறைவின்போது வந்திருந்தார். விழாவில் பேசும்போது பல்கிவாலா சுவாமிகளின் சில மேன்மைகளைக் குறிப்பாக எடுத்துக் கூறினார்:

“மகா சுவாமிகள் ஆங்கிலம், ஃபிரெஞ்சு, சமஸ்கிருதம், இந்தி, தமிழ், மராத்தி மொழிகளில் உரையாடுவது எனக்கு வியப்பாக இருக்கும். பதிமூன்று வயதில் வனவாசம் மேற்கொண்ட அவர் தனது இருபத்தைந்தாவது வயது முதல் சுமார் இருபத்தோரு ஆண்டுகள் இந்தியா முழுவதும் கால்நடையாகவே புனிதப் பயணம் மேற்கொண்டு வந்திருக்கிறார்.இப்போதும் அவர் மகாராஷ்டிரத்தில் சதாராவில்தான் தங்கி இருக்கிறார். பாரத தேசத்தின் மக்களின் நலனுக்காக ஓர் ஆன்மீகப் பெரியவர் இப்படித் தவம் செய்வதை நான் எங்கும் கண்டதில்லை.!”

பல்கிவாலா வாஷிங்டனில் இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டார். அப்போது அமெரிக்காவுக்குப் புறப்படுவதற்கு முன் மகா சுவாமிகளைத் தரிசிக்கப் போயிருந்தார் பல்கிவாலா.

அப்போது சுவாமிகள் காஞ்சிக்கு வெளியே ஒரு சிறுகுடிலில் தங்கி இருந்தார். இரவு மூன்று மணிநேரம் மட்டுமே தூங்குவார். மற்ற வேளைகளில் ஏதாவது ஒரு புனிதப் பணியில் ஈடுபட்டிருப்பார். ஒருவேளை மட்டும் ஒருகவளம் பொறி மட்டும் சாப்பிடுவார். தனது எண்பத்தெட்டாவது வயதில் ஒரு மகான் இவ்வளவு சுறுசுறுப்புடன் இருப்பதைக் கண்டு வியந்துபோனார் பல்கிவாலா.

“மகான்களின் சக்தி மனத்தில் உருவாகிறது என்பதை அன்று உணர்ந்து கொண்டேன். மகான் அரவிந்தர் கூறியதைப்போல, மகா சுவாமிகளைப் போன்றவர்கள் வாழும் இந்த பாரததேசத்துக்கு என்றும் எந்த மதத்தினராலும், எந்த நாட்டினாலும் தீங்கு விளைவிக்கவே முடியாது.” என்கிறார் பல்கிவாலா

Tell A Friend!
Type In Your Name:
Type In Your Email:
Your Friend's Email:
Your Comments:

Receive copy:

PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:  

*E-mail:  

*Comments:


*Enter number in the text box below



Post your comments to Facebook




Designed and maintained by AKR Consultants