Bookmark and Share 


Healthcare Tips
Parents Home
Couples Suit
Spiritual Path
Student's Corner
Youth Resort
Management
Lighter Moments
Entertainment
Serious Side
World Tour
Internet Links
Snippets

Tamil Software
அழகி மென்பொருள்
  
Tamil-English bilingual webmagazine dedicated to education of the masses through E-books, articles, worldwide informations, Slideshows,
Presentations on various subjects, photographs and images, moral and objective oriented stories and Lectures including audio and video

அதிர்ஷ்டமா?............. உழைப்பா?.............

Courtesy: KTR, Chennai

அதிர்ஷ்டமா?............. உழைப்பா?.............LUCK or HARD WORK ?

வெற்றி பெற்றவர்களின் கடும் உழைப்பு, விடா முயற்சி, தலைமைக் குணம், ஆழ்ந்த ஈடுபாடு இவற்றைத் தோற்றவர்கள் ரசிப்பதில்லை. அதெல்லாம் அதிர்ஷ்டம்.... கடவுளின் ஓரவஞ்சனையான அனுக்கிரஹம், கிரக பலன், யோகா ஜாதகம் என்று முத்திரை குத்துவார்கள்.

நம்பாதீர்கள்....கடவுள் நடுநிலையாளன். யாருக்கும் ஸ்பெஷல் கருணை காட்டும் ஓரவஞ்சனை அவருக்கு இல்லை. பாடுபட்டதற்கு பலன்...உழைப்புக்கு ஊதியம்... . முயற்சிக்கும், முனைப்புக்கும் ஏற்ற முன்னேற்றம் தரும் நீதிமான் அவர்.

சாது ஒருவர் காசியை நோக்கி யாத்திரை போய்க்கொண்டிருந்தார். வெயில் மணடையைப் பிளந்தது. தண்ணீர் எங்கேயாவது கிடைக்குமா என்று தாகத்தில் தவித்தார்.

கொஞ்ச தூரம் ஓடி, நடந்து நடந்து, ஓடி பசுமையான இடத்தை பார்த்து நின்றார். கிணற்றில் தண்ணீர் இறைத்துக்கொண்டு இருந்த கட்டுமஸ்தான வாலிபனைப் பார்த்து குடிக்க தண்ணீர் கேட்டார். குடித்தது போக, நீரின் சுகம் பார்த்து ஒரு காக்கா குளியலே நடத்திக் கொண்டார்.

"தம்பி..... நீ அதிர்ஷடசாலி. ஊரே வறட்சியாக இருக்கிறபோது, உன் நிலம் மட்டும் பசுமையாக இருக்கிறது என்றால், அது கடவுள் கருணைதான் ..." என்றார்.

"சாமி....அதிர்ஷ்டம்னு ஒரே வார்த்தையில் என்னை விளக்குமாத்தாலே அடிச்சிட்டீங்க... வர்ற வழியெல்லாம் பார்த்தீர்களா...? அப்படித்தான் இருந்தது இந்தப் பாறை பூமி..... பாடுபட்டுப் பாடுபட்டு, இப்பத் தான் பலன் கிடைச்சுது. இதைக் கடவுள்... கருணை... அதிர்ஷ்டம்னு சொல்லி நசுக்காதீங்க சாமி.... அம்புட்டும் உழைப்பு சாமி..." என்றான் வாலிபன்.

"தம்பி... கிணறு தோன்டினது, வயல்ல உழுதது உன் உழைப்பு.... ஆனா, தண்ணி வந்ததும், பயிறு விளைஞ்சதும் கடவுளாலதாம்ப்பா...!" என்றார் சாது.

"ஐயா! நான் பிறப்பதற்கு முன்னும் இந்த நிலம் இருந்தது. கடவுளும் இருந்தார். நானில்லாமல் அவர் மட்டும் தனியாக இருந்தபோது, இந்த நிலத்தை பார்க்க சகிக்கவில்லை...." என்றான் இளைஞன்

கடவுளின் கருணை இயல்பானது. அதில் வியப்பதற்கு அதுவும் இல்லை. மனித முயற்சிதான் குதிரைக் கொம்பாக இருக்கிறது. எனவே, அதைத்தான் கொண்டாட வேண்டி இருக்கிறது.

உலகப் புகழ்ப் பெற்ற இசை மேதை பீத்தோவான், பியானோ வாசிப்பதில் அவரை விஞ்ச முடியாது. இத்தனைக்கும் செவிப்புலன் பழுதுற்றவர் அவர்.

ஒரு பெண்மணி, அவர் கரங்களை எடுத்து முத்தமழை பொழிந்து..." ஆஹா!.... உங்கள் கரங்கள் விசேஷமானவை. வேறு எவருக்கும் தராத விசேஷ ஆற்றலை கடவுள் உங்களுக்கு மட்டும் வழங்கிஉள்ளார்...." என்றார்.

"அம்மணி..... தினந்தோறும் எட்டு மணிநேரம் விடாமல் செய்த பயிற்சியின் பலன் இது............முயற்சியும், பயிற்சியும் இருந்தால், நீங்களும் இப்படி வாசிக்கலாம்...." என்று திருத்தினார் பீத்தோவன்

கடும் உழைப்பை, அதிர்ஷ்டம் என்று சொல்லிக் கடவுளையும் மனிதனையும் ஒன்றாக அவமதிப்பது நியாயமா?

உழைப்பு இருந்தால் அதிர்ஷ்டம் வாலாட்டிக்கொண்டு பின்னாலேயே வரும்.

Tell A Friend!
Type In Your Name:
Type In Your Email:
Your Friend's Email:
Your Comments:

Receive copy:

PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:  

*E-mail:  

*Comments:


*Enter number in the text box below



Post your comments to Facebook




Designed and maintained by AKR Consultants