Bookmark and Share 


Healthcare Tips
Parents Home
Couples Suit
Spiritual Path
Student's Corner
Youth Resort
Management
Lighter Moments
Entertainment
Serious Side
World Tour
Internet Links
Snippets

Tamil Software
அழகி மென்பொருள்
  
Tamil-English bilingual webmagazine dedicated to education of the masses through E-books, articles, worldwide informations, Slideshows,
Presentations on various subjects, photographs and images, moral and objective oriented stories and Lectures including audio and video

அத்வைதம் பற்றி அலசிப் பேசிவிட்டுப் போவது தானே,

Courtesy: KTR,Chennai

அத்வைதம் பற்றி அலசிப் பேசிவிட்டுப் போவது தானே,இவர்கள் வேலை? அரசியல் எதற்கு.?

சொன்னவர்; வெங்கட்ராம சாஸ்திரி தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

மூர்க்கத்தனமும், ஈவு-இரக்கமுமற்ற அந்நிய மதக்காரர்களின் கோரமான தாக்குதலால்,தொண்டை மண்டலம் தத்தளித்துக்கொண்டிருந்த காலகட்டம்.

சான்றோர்கள் அடைக்கலம் தேடி, தெற்கு நோக்கிப் புறப்பட்டுச் சென்றர்கள். ஸ்ரீகாமகோடி இதற்கு விதிவிலக்கு அல்ல.

ஆங்காங்கே சில காலம் தங்கியிருந்து விட்டுத் தஞ்சாவூர் சென்றடைந்தது, ஸ்ரீமடம்.

மராத்திய மன்னர்களின் ஆட்சிக்காலம்.கலை,சமயப் பற்று மிக்க அந்தப் பரம்பரையினர், கும்பகோணத்தில், ஸ்ரீமடம் நிரந்தரமாக இயங்குவதுற்குத் தேவையான உதவிகளைச் செய்து கொடுத்தார்கள். அதனால் ஸ்ரீகாமகோடி பீடாதிபதிகளுக்கு, தஞ்சை மன்னரின் ராஜகுரு என்ற பதவியும் சிறப்பும் கிடைத்தன.

நாடு சுதந்திரமடைந்த பிறகு சுதேச மன்னர்களின் நிலை தலைகீழாக மாறி விட்டது.

'சுதேசி மன்னர் பரம்பரையினருக்குக் கொடுக்கப்பட்டு வரும் உதவித் தொகை நிறுத்தப்படப் போகிறது' என்ற தகவல், தஞ்சையின் மூத்த இளவரசர் ராஜாராம் ராஜா -அவர்களை எட்டியது.ஆடிப் போய்விட்டார், அவர்.

பரமாசாரியாளிடம் வந்து, தன் நிலைமையை விண்ணப்பித்துக் கொண்டார்.

உடனே,அந்தக் காலத்தில் சட்டத்துறை மகா மேதாவிகளான வழக்கறிஞர்கள் கே.எஸ். வேங்கடரமணியும், டி.ஆர். வேங்கடராம சாஸ்திரிகளும் வரவழைக்கப்பட்டார்கள்,(1967) அவர்களைக் கொண்டுஇந்திய அரசாங்கத்துக்கு ஒரு மனு தயாரிக்கப்பட்டது.

"பெரியவாளிடம் காட்டிவிட்டு,அனுப்பலாமே?"என்றார்கள், சட்ட வல்லுநர்கள்.

பெரியவாள், அப்போது கிழக்குக் கோதாவரிப் பகுதியில் யாத்திரையில் இருந்தார்கள்.

படித்துப் பார்த்தார்கள், பெரியவாள்.

"ரொம்ப சரி,பக்குவமா,சட்டரீதியா எழுதியிருக்கேள்.."

சிறு இடைவெளி.

"வெங்கட்ராமா, ஒரு சின்ன பாரா சேர்க்கலாமோ?- லண்டன் ப்ரிவி கவுன்சில்லே, பிலிப்ஸ்-ங்கிறவர் கொடுத்த தீர்ப்பிலே என்ன சொல்லியிருக்கு...?

இப்போது சுதேச சமஸ்தானங்களை இந்திய அரசு தன் கட்டுப்பாட்டுக்கள் கொண்டுவந்து விட்டாலும், பின்னர் ஒரு காலத்தில், அந்தந்த சமஸ்தானங்களை,அந்தந்த மன்னர் பரம்பரையினருக்கே வழங்கிவிடலாம் என்று தீர்மானம் செய்யுமேயானால், தஞ்சாவூர் மன்னர் பரம்பரையினருக்கே முன்னுரிமை வழங்கவேண்டும்.

"சமஸ்தானத்தையே திருப்பிக் கொடுக்கவேண்டும் என்று ப்ரிவி கவுன்சில் தீர்ப்பு சொல்லியிருக்கும்போது,இப்போதைய தஞ்சாவூர் மன்னர் பரம்பரையினருக்கு, போதுமான இடமும் வசதிகளும் செய்து கொடுப்பது நியாயமல்லவா.? குறைந்த பட்சம், தற்போதுள்ள வசதிகள் ரத்தாகாமல் பார்த்துக் கொள்வது அரசாங்கத்தின் கடமை..."

சட்டங்களின் கரைகண்டவர் என்று போற்றப்பட்ட வெங்கட்டராம சாஸ்திரி, அப்படியே பிரமித்துப் போய்விட்டார்.பெரியவாளின் நுட்பமான வாதம் அவரை கட்டிப்போட்டுவிட்டது.

'பெரியவாளுக்கு ஏன் இந்தப் பொறுப்பெல்லாம்?' என்று நமக்குத் தோன்றும்.

அத்வைதம் பற்றி அலசிப் பேசிவிட்டுப் போவது தானே, இவர்கள் வேலை? அரசியல் எதற்கு.?

புத்திசாலித்தனம் போன்ற இப்படி ஒரு கேள்வி எழக்கூடும் என்பதைப் பெரியவர்கள் அறிந்திருந்தார்கள்.

வித்யாரண்யர், பெரிய ஞானி; அத்வைதி; உபாஸகர், நிறைய ஸ்வர்ணம் கிடைச்சுது. மடம் கட்டி, பாடசாலை நடத்துவதோடு நின்று விடவில்லை. ஹிந்து சமயத்தை வேரோடு அழிக்க வந்த ஒரு அசுரக் கூட்டத்துக்கு எதிராக, மத நம்பிக்கையுடைய ராஜாக்களைக் கண்டு பிடித்து அபரிமிதமாக உதவினார்.

கோவிந்த தீட்சிதர் பற்றிக் கேள்விப் பட்டிருப்பீர்களே? சந்த்யாவந்தனத்தோடு தன் ஸ்வதர்மம் பூர்த்தி என்று நினைக்கவில்லை; சமஸ்தானாதிபதிக்கு நிர்வாகத்தையே சொல்லிக் கொடுத்தார்.

சமர்த்த ராமதாஸ் ஸ்ரீ ராம ஜயராம ஜய ஜய ராம- என்று ராம சங்கீர்த்தனம் செய்தே, நாட்டுப்பற்றையும், வீரத்தையும்,சமுதாய ஒற்றுமையையும் வளர்த்தார். நம்முடைய மதம் இன்னும் பட்டுப் போகாமல் இருக்கிறது என்றால், இந்த சமர்த்தர் ஒரு முக்கிய காரணம்.

பெரியவாளே பதில் சொல்லித் தெளியவைத்து விட்டார்கள். இனிமேல் எந்தப் ப்ரிவி கவுன்சிலுக்கு அப்பீல் செய்ய.!.

Tell A Friend!
Type In Your Name:
Type In Your Email:
Your Friend's Email:
Your Comments:

Receive copy:

PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:  

*E-mail:  

*Comments:


*Enter number in the text box below



Post your comments to Facebook




Designed and maintained by AKR Consultants