Bookmark and Share 


Healthcare Tips
Parents Home
Couples Suit
Spiritual Path
Student's Corner
Youth Resort
Management
Lighter Moments
Entertainment
Serious Side
World Tour
Internet Links
Snippets

Tamil Software
அழகி மென்பொருள்
  
Tamil-English bilingual webmagazine dedicated to education of the masses through E-books, articles, worldwide informations, Slideshows,
Presentations on various subjects, photographs and images, moral and objective oriented stories and Lectures including audio and video

குறைகள் கூட மூலதனம் தான்.........

Courtesy: KTR Chennai

குறைகள் கூட மூலதனம் தான்......... ( Defects too, are investments )

For those who can understand Tamil. Others please excuse me, but if anyone can translate to English, it will be a great help.-SIVA

குறைகள் கூட மூலதனம் தான்.........

"நான் மட்டும் இன்னும் கொஞ்சம் சிவப்பா பிறந்திருந்தா, எவ்வளவோ அழகா இருந்திருப்பேன்! ம்.... இப்படி பொறந்து தொலைச்சுட்டேன்.... - இப்படி அலுத்துக்கொள்ளும் பெண்கள் உண்டா, இல்லையா?"

"கொஞ்சம்...இன்னும் கொஞ்சம் உசரமா இருந்திருந்தா, நான் போலீஸ வேலைக்கு போய், தினமும் காசு பார்த்திருப்பேன்.... ஒரு இன்ச் கம்மியா படைச்சுட்டாண்டா கடவுள்... அதான் நாயா அலையறேன்! - இப்படி அங்கலாய்க்கிற இளைஞர்கள் உண்டா...இல்லையா?

"இன்னும் இரண்டு நாழிகை தள்ளி பொறந்திருந்தா, இந்த ஜாதகர் ஓகோவென இருந்திருப்பார். கையாள பிடிக்க முடியாது இவரை.... என்று அளந்து கட்டுகிற ஜோதிடர் முன்னிலையில் தன கனவுக் கோட்டைகள் தூள் தூளாகும் கோரத்தை அனுபவிக்கிற ஜனசமுத்திரம் உண்டா....இல்லையா?

"இப்படி இருந்திருந்தால், அப்படி நடந்திருந்தால்..." என்று உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்வது உங்களுக்கே வெட்கமாக இல்லையா..?

கைவசம் உள்ள மூலப்பொருளை கொண்டே உலகத் தொழிற்சாலையில் உற்பத்திகளை குவிக்க முடியும்!. இல்லாத ஒன்றைக் காரணம் காட்டி தோல்வியை நியாயபடுத்தாதீர்கள். அது எஸ்கேப்பிசம்!.

உயரம் குறைந்தவன் போலீஸ வேலைக்கு வேண்டுமானால் போக முடியாமல் போகலாம். போலீசையே வேலை வாங்குகிற கலைக்டர் வேலைக்கு போக முடியுமே!

கொஞ்சம் நிறம் குறைந்தவள், உலக அழகியாக முடியாமல் போகலாம். உலக அழகிகளை தேர்வுசெய்யும் உயர்மட்டக்குழுவின் தலைவியாக முடியுமே!

வாழ்க்கையில் நமக்கு அமைந்த குறைகள் இரண்டு வகை.

ஒன்று மாற்றக்கூடியது... மற்றொன்று மாற்ற முடியாதது. எது மாற்றக்கூடியது.... எது மாற்றவே முடியாதது என்பதை அறியும் விவேகம் கடவுள் கருணையால் எல்லோருக்கும் இயல்பிலேயே இருக்கிறது.

மாற்றவே முடியாத குறைகளை ஒருபோதும் குறைகளாகவே கருதாதீர்கள். முடிந்தால் அவற்றை மூலதனமாக ஆக்கி முன்னேறுங்கள்.....முன்னேறுங்கள்..... முன்னேறுங்கள்.....!

மிக அழகான கமல்ஹாசன், நல்ல நடிகர், அவர் நட்சத்திரமாக மின்னுவதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை.

ஆனால், சிரிப்பு கலைஞர் செந்தில், கவர முடியாத நிறம்.... சுமாரான உயரம்... ஈர்க்க முடியாத உடல்.... மீடியாவுக்கு பொருந்தாத குரல்.... இவைதான் நடிகர் செந்திலின் மூலதனங்கள்.... அவர் குவித்துள்ள வெற்றியின் விதைகள்.

நான் கமல் வெற்றியை ரசிக்கிறேன்... ஆனால், செந்தில் வெற்றியை மதிக்கிறேன்.

" மாற்றவே முடியாத குறைகள் நமது மகத்தான மூலதனங்கள் .." என்று புரிந்து கொண்டால் உங்கள் வெற்றி உறுதியாகிறது.

Tell A Friend!
Type In Your Name:
Type In Your Email:
Your Friend's Email:
Your Comments:

Receive copy:

PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:  

*E-mail:  

*Comments:


*Enter number in the text box below



Post your comments to Facebook




Designed and maintained by AKR Consultants