Bookmark and Share 


Healthcare Tips
Parents Home
Couples Suit
Spiritual Path
Student's Corner
Youth Resort
Management
Lighter Moments
Entertainment
Serious Side
World Tour
Internet Links
Snippets

Tamil Software
அழகி மென்பொருள்
  
Tamil-English bilingual webmagazine dedicated to education of the masses through E-books, articles, worldwide informations, Slideshows,
Presentations on various subjects, photographs and images, moral and objective oriented stories and Lectures including audio and video

மன வளத்திற்கு மல்டி விட்டமின் மாத்திரைகள்
Harihara Mahadevan

Courtesy:

மாத்திரை 8 வாழ்க்கை வங்கியில் ஒரு அக்கௌண்ட்

மோகன், மோகனா இருவருக்கும் அன்று திருமணம். ரிசப்ஷன் மாலையில் நடந்து கொண்டிருந்தது. ரிசப்ஷனுக்கு வந்த பிரசென்டேஷன் பொருட்களை ஒதுக்கி அடுக்கி வைத்து விட்டு நிமிர்ந்த மோகனாவின் தாய் மகளிடத்து வந்தாள். தந்தையை சிறு வயதிலேயே இழந்த அவளை வளர்த்து ஆளாக்கி `ஒரு நல்ல கணவனும் அவளுக்குக் கிடைத்து விட்டான்` என்ற திருப்தியும் அவளுக்கு ஒரு சேரக் கிடைத்திருந்தது. மகளைக் கட்டியணைத்து உச்சி மோந்த தாய் தனது அன்புப்பரிசினை தம்பதியருக்குத் தந்தாள்.

"எனது அன்பு மகளுக்கும் எனக்கு மகனாகத் திகழப் போகும் மாப்பிள்ளை மோகனுக்கும்" ஒரு சிறிய பார்சல். வாஞ்சையுடன் ஒரு சிறு குழந்தை போல் அதைப் பிரித்துப் பார்த்த மோகனா கேட்டாள்.

"என்னம்மா இது? பேங்க் பாஸ் புக்? எங்க ரெண்டு பேர்ல ஒரு ஜாயிண்ட் அக்கவுண்ட்? போன வாரம் அந்த அப்ளிகேஷன் பார்ம்ல கையெழுத்து வாங்கினது இதுக்குத் தானா?"

"இதோ பாருங்க.... மோகன் ஒங்களையும் சேர்த்துத் தான். ரூ. 5000 போட்டு அக்கவுண்ட் ஆரம்பிச்சிருக்கேன். ஒங்க `மேரியேஜ் டே`ஐ குறிக்கற மாதிரி. இதே மாதிரி உங்க வாழ்க்கையில ஒங்க ஒவ்வொருத்தருக்கும் அடுத்தவரால நடக்குற ஒவ்வொரு நல்ல நிகழ்ச்சியையும் நீங்க நோட் பண்ணுங்க. ஒங்க சக்திக்கேத்த பணத்தை அதக் குறிக்கற மாதிரி இதுல கிரெடிட் பண்ணனும். பாஸ்புக்குல கடைசி பேஜ்ல ஒரு சின்ன பேப்பர் வெச்சிருக்கேன். போட்ட பணம் அதோட காரணம் இதச் சுருக்கமா மறக்காம அதுல குறிச்சிட்டு வரணும் ஓகேவா" தழுதழுத்த குரலில் கூறிய தாய் இருவரையும் ஆரத் தழுவிக் கொண்டாள்.

நாட்கள் நகர்ந்தன. அக்கௌண்டில் கிரடிட் அதிகமாகிக் கொண்டே போனது.

மார்ச் 9 ஹனிமூன் போனது ரூ. 1000 + 1000
மார்ச் 12 மோகனாவுக்கு மோகன் புது நெக்லஸ் ரூ 5000
ஏப்ரல் 16 மோகனுக்கு மோகனா சுவிஸ் வாட்ச் ரூ 5000
மே 9 மோகனாவுக்கு புரமோஷன் ரூ. 5000
ஜுன் 16 மோகன் ஃபாரின் டூர் ரூ 5000

இந்த மாதிரி நிகழ்ச்சிகள் நிறையவே வந்தன. கிரெடிட் கூடிக்கொண்டே போனது.

ஒரு நாள் ஒரு பைசா பெறாத விஷயத்தில் ஆரம்பித்த தகராறு பெரியதாகியது. சண்டை முற்றியது. கொட்டினேன் கவிழ்த்தேன் என்ற இன்றைய தலைமுறையின் சாபத்தின்படி அவர்கள் இருவரும் இனி சேர்ந்து வாழப் போவதில்லை, டிவோர்ஸ் பண்ணப் போவதாக முடிவாயிற்று.

பெற்ற தாயிடம் போனாள் மோகனா. தாய் எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள். கேட்பதாக இல்லை.

"சரி! விதிப்படி நடக்கட்டும். நான் உன் ரிசப்ஷன் போது சொன்னது ஞாபகமிருக்கட்டும். பேங்க் அக்கவுண்ட்டை குளோஸ் பண்ணிருங்க. வாழ்க்கை அக்கவுண்ட் முடியறப்போ அது மட்டும் எதுக்கு? மாப்பிள்ளை கிட்டே குளோசர் பார்ம்ல கையெழுத்து வாங்கி அந்த ஜாயிண்ட் அக்கௌண்ட இல்லாம பண்ணிடுங்க" ஓவென்று கதறி விட்டாள் தாய்.

மறுநாள் பேங்கில் நின்றிருந்தாள் மோகனா. டோக்கன் வாங்கியாயிற்று. நம்பர் அவளோட லக்கி நம்பர் 81. இன்னும் 12 பேர் முன்னால் இருந்தார்கள். பாஸ் புக்கை கைகள் மெக்கானிக்கலாக திருப்பின. கடைசிப்பக்கம் தானாக வந்தது. டெபாஸிட் பணம் அதன் காரணம். அந்தக் குறிப்புடன் அந்த மலரும் நினைவுகளும் மனத்திரையில் படமாக ஓடின. இதயம் கனத்தது. கண்கள் பனித்தன. கவுண்டரில் அடுத்தது அவள் டேர்ன்.

"மேடம் என்ன வேணும்?" கவுண்டர் கிளார்க் கேட்டார்.
"நத்திங்" பேசாமல் திரும்பி விட்டாள். நேராக மோகன் ஆபீசுக்கு வந்து விட்டாள்.
"என்ன குளோஷர் முடிஞ்சுதா?"
"அது தேவையா? அதுக்கு என்ன இப்போ என்று தோன்றியது"
"அப்படின்னா?"
"ஒன் அவர் பெர்மிஷன் போட்டுட்டு வாங்க சொல்றேன்."

ஒரு பேமிலி ரெஸ்டாரெண்டில் ஒதுக்குப்புறமான சீட்டில் உட்கார்ந்தார்கள்.

பாஸ்புக்கின் கடைசிப் பக்கத்தைப் பிரித்து அவனிடம் தந்தாள் அவள். அதைப் பிரித்து அவன் படிக்கப் போகும் அந்த வேளையில் மோகனாவின் கண்களிலிருந்து விழுந்த கண்ணீர் துளிகள் அந்தப் பக்கத்தை ஈரமாக்கின. உருண்டோடிய கண்ணீருடன் மோகனின் கண்கள் அந்தப் பக்கத்தை ஒரு குயிக் கிளான்ஸ் பண்ணவே செய்தன.

குளோஷர் ஃபார்ம் டேபிளில் கிடந்தது. அதைச் சுக்கல் சுக்கலாக கிழித்து எறிந்தான் மோகன். அவர்களது டிவோர்ஸ் பேப்பரையும் சேர்த்துத்தான்.

மறு நாள் மோகனும், மோகனாவும் ஒருவரையொருவர் அறியாமலேயே தனித்தனியாக டோக்கன் வாங்கி பாங்க் க்யூவில் நின்றிருந்தனர். ஒருவரையொருவர் நன்கு புரிந்ததற்கு

5000 + 5000 டெபாஸிட் ஆகியிருந்தது.

"உணர்ச்சிகள் அன்பினால் உந்தப்பட வேண்டும். பிணக்கினால் அது முந்தும் போது உணர்ச்சிகளை ஒதுக்கி வைத்து விட்டு சிறிது நேரம் சிந்தனைக்கு இடம் கொடுக்க வேண்டும். உணர்ச்சி பூர்வமான முடிவைச் சிறிது நாள் தள்ளிப் போட வேண்டும். தவறான முடிவுகள் எடுக்கப்படுவது நின்று விடும்" எங்கோ படித்த வரிகளை தனது டைரியில் எழுதி வைத்திருந்தான் மோகன். அந்த டைரி மோகனாவை வரவேற்றது. "கீழே விழுந்த பிற்பாடு விழுந்த இடத்தைப் பார்ப்பதைக் காட்டிலும் கால் இடறியவுடன் கவிழாமல் தப்பித்த இடத்தைப் பார்வையிடவும். அடுத்த முறை இடர்வது தவிர்க்கப்படலாம்." மோகனாவின் டைரி வரிகள் மோகனை வரவேற்றது.

Tell A Friend!
Type In Your Name:
Type In Your Email:
Your Friend's Email:
Your Comments:

Receive copy:

PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:  

*E-mail:  

*Comments:


*Enter number in the text box below



Post your comments to Facebook




Designed and maintained by AKR Consultants