Bookmark and Share 


Healthcare Tips
Parents Home
Couples Suit
Spiritual Path
Student's Corner
Youth Resort
Management
Lighter Moments
Entertainment
Serious Side
World Tour
Internet Links
Snippets

Tamil Software
அழகி மென்பொருள்
  
Tamil-English bilingual webmagazine dedicated to education of the masses through E-books, articles, worldwide informations, Slideshows,
Presentations on various subjects, photographs and images, moral and objective oriented stories and Lectures including audio and video

Mathematical Explanation Of Hindu Philosophies + Sri Ahobila Matha Jeeyar's Anugraha Bhashanam

Courtesy: Jaikumar, Kumbakonam.

பெரியவா படிப்பிலே ‘மக்கு’ ன்னு நீ நெனச்சியோ?”

நான் திண்டிவனம் பள்ளிக்கு சென்று பெரியவா படித்ததற்கு அடையாளமாக ஏதாவது கிடைக்குமா என்ற ஆர்வத்தில் தலைமை ஆசிரியரின் அனுமதியுடன் பழைய ரெக்கார்ட்கள் வைக்கப்பட்டிருந்த அறையை துழாவினேன். அதிசயத்திலும் அதிசயமாக ஒரு வருகை பதிவேட்டின் ஒரே ஒரு காகிதம் மட்டும் கிடைத்தது. அது 1904 ஆம் வருடம், பெரியவா ரெண்டாம் பாரம் படித்தபோது, அந்த வகுப்பின் வருகை பதிவேட்டின் ஒரு ஷீட்.

அதில் 'சுவாமிநாதன்' என்ற பெயரை கண்டபோது எனக்கு மகிழ்ச்சி நிலைகொள்ளவில்லை. மறுநாளே, ஆந்திராவில் இருந்த பெரியவாளை தரிசிக்க சென்றேன்.

நடுநிசி, பூர்ண நிலா, பெரியவா ஓர் ஊரில் இருந்து வேறோர் கேம்ப் க்கு மேனாவில் பயணித்து கொண்டிருந்தார். கூடவே ஓடி, திண்டிவனம் சென்ற விவரத்தையும், 'வருகை பதிவேடு' காகிதம் கிடைத்த செய்தியையும் கூறினேன். சற்று தொலைவு சென்றதும் மேனா நின்றது. உடன் வந்தவர்களையும் மேனாவை தூக்கி வந்தவர்களையும் ஆகாரம் செய்து விட்டு, வரும்படி பணித்துவிட்டு, பெரியவா அந்த வருகை பதிவேட்டு ஷீட்டை வாங்கி டார்ச் லைட் லென்ஸ் உதவியோடு பார்த்தார். முகம் மலர்ந்தது.

இது எப்படிடா உனக்கு கிடச்சுது? என்று ஆச்சரியத்துடன் கேட்டு விட்டு, அதில் இருந்த பெயர்களை ஒவ்வொன்றாக படித்தார். அறுபத்து நான்கு வருடங்கள் முந்தய நாட்களின் நினைவுகளில் ஒரு கணம் மூழ்கி போனார். தம்முடன் ரெண்டாம் பாரத்தில் படித்த மாணவர்களை நினைவு கூர்ந்தார்.

அவர்களில் யார் யார் அப்போது உயிருடன் இல்லை என்பதையும் மற்றவர்கள் எந்த ஊரில் இருக்கிறார்கள் என்பதையும் சொன்னார்.

இறுதியாக, 'என் பேர் எல்லோருக்கும் கடைசிலே இருக்கே, பெரியவா படிப்பிலே 'மக்கு' ன்னு நீ நெனச்சியோ?' என்று சிரித்துக்கொண்டே கேட்டார்.

'இல்லே, பெரியவா பேர் ஏன் கடைசிலே இருக்குன்னு நெனச்சிண்டேன்' என்ற உண்மையை சொன்னேன்.

'என் பூர்வாச்ரம தகப்பனாருக்கு ஸ்கூல் இன்ஸ்பெக்டர் உத்தியோகம். அடிக்கடி அவரை, ஊர் மாத்திடுவா. சிதம்பரத்திலேருந்து திண்டிவனத்துக்கு செப்டம்பர் மாசம் மாத்தலாயி வந்தார். பாதியிலே வந்து இந்த ஸ்கூல் லே சேர்ந்தேன். அதனால தான் என் பேரு கடைசிலே இருக்கு' என்று விளக்கம் தந்தார்.

அன்பே அருளே புத்தகத்தில் ஸ்ரீ. பரணீதரன் அவர்கள். *********************************************************

[ GS : இவரா மக்கு ? எல்லாவற்றிலும் கொக்கு !

உதாரணம், கீழ் வரும் அற்புத தத்துவ கணக்கு ] *********************************************************

நாம அத்வைதத்த எடுத்துட்டாலும், த்வைதமா இருந்தாலும், விசிஷ்டாத்வைதமா இருந்தாலும் ஒரு ஜீவனுக்கு இறுதி இலக்கு பரமாத்மா தான். இதுல 'செகண்ட் தாட்' டே கிடையாது. ஆனா என்ன ஒவ்வொரு மார்க்கமும், ஒரு ஜீவாத்மா எப்படி, எந்த சூழ்நிலைல, என்ன வழிமுறைல பரமாத்மாவை அடையும்கறதுல வேறுபடறது.

[English Translation] Whatever philosophy we take - be it Advaita, Dvaita or Vishishtadvaita, the ultimate destination of soul is Paramatma. There is no second thought in this. The difference lies only the circumstance and path adopted to achive this.

இங்கே இருக்கற நிறைய பேர் கணிதம் படிச்சிருப்பீங்க என்ற நம்பிக்கைல சொல்றேன். மத்வாசார்யாரின் த்வைத மார்க்கம் கொஞ்சம் ஸ்ட்ரிட்.

[English Translation] I say this on the hope that many of you would have studied mathematics. Madhvacharya's Dvaita marga is a bit strict.

சங்கரரின் அத்வைத மார்கத்துல பரமாத்மாவுக்கும் ஜீவாத்மாவுக்கும் உள்ள தொடர்பு ஒரு சதுரத்தின் பக்கத்துக்கும் அதன் சுற்றளவுக்கும் உள்ள தொடர்பு மாதிரி. அதாவது பக்கத்தை மிகச் சரியாக நாலு மடங்கு செய்தால் அதன் சுற்றளவு வந்து விடும். நான்கு என்பது ஒரு RATIONAL நம்பர். எந்த Ambiguityயும் கிடையாது.

[English Translation] In Shankara's Advaita Marga, the relationship between Paramatma and Jeevatma is like the relationship between a square and its perimeter - i.e. if you multiply a side by 4 you will get its perimeter. 4 is a rational number and there is no ambiguity.

ஆனால் த்வைத மார்க்கத்தில் ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் உள்ள தொடர்பு ஒரு வட்டத்தின் விட்டத்துக்கும் அதன் சுற்றளவுக்கும் உள்ள தொடர்பு போன்றது. விட்டத்தை பை (Pi)மடங்கு பண்ணா அதன் சுற்றளவு வரும். ஆனால் நீங்க படிச்சிருப்பீங்க பை என்ற நம்பர் ஒரு Irrational number என்று. அதாவது அதை இரண்டு முழு எண்களின் விகிதமாக எழுத முடியாது. இருபத்து இரண்டு bi ஏழு அப்படீங்கறது ஒரு approximation தான். பை (Pi) என்ற இந்த விகிதம் முடிவில்லாமல் அனந்தமாகப் போய்க்கொண்டே இருக்கும் என்று உங்களுக்குத் தெரியும். மூணு புள்ளி ஒண்ணு நாலு அப்படீன்னு எழுதி அதற்குப் பிறகு கோடி கோடி இலக்கங்கள் போட்டாலும் பை (Pi) என்ற எண் முடிவு பெறாது. எனவே வட்டத்தின் சுற்றளவை அதன் விட்டத்தைப் போல இத்தனை மடங்கு அப்படீன்னு சரியாக, உறுதியா சொல்லவே முடியாது. விட்டத்தின் எல்லை அதன் சுற்றளவு தான். சுற்றளவு என்பது ஒரு முழுமையான எண். வட்டத்தின் விட்டமும் ஒரு முழுமையான எண். ஆனால் இவை இரண்டின் விகிதம் ஒரு முற்றுப்பெறாத எண்.

[English Translation] In Dvaita marga, the relationship between Jeevatma and Paramatma is like the relationship between the diameter and its perimeter of a circle. If you multiply diameter by Pi, (2πr) you get perimeter. But π is an irrational number - even if you take a precision of crore digits, you can't get the final answer for π. The end of diameter is the perimeter and both perimeter and diameter are whole numbers but their dividend is an irrational number.

விட்டம் தான் ஜீவாத்மா, சுற்றளவு தான் பரமாத்மா என்று எடுத்துக் கொண்டால் பரமாத்மா ஜீவாத்மாவின் இலக்கு என்றாலும் அது ஜீவனின் இத்தனையாவது படிநிலை என்று உறுதியாக சொல்ல முடியாது. விட்டத்தின் ஏதோ ஒரு முடிவிலி மடங்கில் சரியாக வட்டத்தின் சுற்றளவு வரலாம். ஆனால் எத்தனை துல்லியமாக கணக்குப் போட்டாலும் (Pi)பையை கோடி தசம ஸ்தானம் வரை எடுத்துக் கொண்டாலும் விட்டத்தின் மடங்குக்கும் சுற்றளவுக்கும் ஒரு சிறிய மைன்யூட் வேறுபாடு இருந்து கொண்டே தான் இருக்கும். அதே போல ஜீவனின் இலக்கு பரமாத்மா என்று சொன்னாலும் பரமாத்வை அடைய (பரமாத்மாவாக மாற) ஜீவாத்மா எண்ணிலாத, கணக்கற்ற படிகளை கடக்க வேண்டி இருக்கிறது. ஒரு ஜீவன் சாதனைகளை செய்து படிப்படியாக எவ்வளவு தான் முன்னேறினாலும் அது சுற்றளவை நெருங்கலாமே தவிர சுற்றளவாக மாற முடியாது.

[English Translation] If we take the diameter as Jeevatma and perimeter as Paramatma, it is not possible to say Paramatma can be reached in so many steps as the steps are innumerable. Even if a Jeevan keeps moving towards Paramatma, it can never become Paramatma.

த்வைதம் ஸ்ரீமன் நாராயணனை சுற்றளவாக நிர்ணயம் செய்கிறது. உலகின் எண்ணிறைந்த ஜீவன்கள் தான் வட்டத்தின் எண்ணிறைந்த விட்டங்கள். விட்டம் சுற்றளவாக மாற எண்ணிறைந்த முடிவிலியான படிநிலைகளைக் கடக்க வேண்டும். இதை தான் அவர்கள் தாரதம்யம் என்று அழகாகச் சொல்கிறார்கள். அதாவது ஒரு ஜீவாத்மா பரமாத்மாவாக முழுவதும் மாறி விடுவதை , எப்படி கணிதம் விட்டம் சுற்றளவாக மாறி விடுவதை தடை செய்கிறதோ , அப்படி த்வைதத்தின் பஞ்சபேத தத்துவம் தடை செய்கிறது. விட்டம் சுற்றளவா மாறுது அப்படீன்னா பை (Pi) அப்படீங்கறது ஒரு Rational நம்பர் அப்படீன்னு ஆயிரும். கணிதத்தின் முக்கிய எண்ணான பையின் அழகே அது கணிக்க முடியாமல் irrational ஆக இருப்பது தான். எனவே ஜீவன் மற்றும் பரமாத்வாவின் உறவும் இப்படி நிச்சயமற்று Irrational ஆக இருக்கிறது என்கிறார் மத்வாச்சாரியார்.

[English Translation] Dvaita establishes Sriman Narayana as the perimeter and the innumerable Jeevas as diametric. In the same way as mathematical principle prevents a diameter becoming the perimeter, the Jeevatma becoming Paramatma is arrested by the Panchabheda tattva . The beauty of π lies in the inability to precisely define the number as it is an irrational number. So Madhvacharya says that the relationship between Jeevatma and Paramata is like this irrational number.

ஒரு சுவாரஸ்யம் என்ன அப்படீன்னா ஐன்ஸ்டீனின் ஈர்ப்பு பற்றிய சமன்பாடுகளிலும் இந்த பை அப்படீங்கற நம்பர் வருது. அப்படீன்னா நம்மால் பிரபஞ்சத்தில் எதையும் இது இதன் இத்தனை மடங்கு அப்படீன்னு சொல்ல முடியாது. எதிலும் ஒரு நிச்சயமின்மை இருக்கவே செய்யும். இதை தான் மத்வாச்சாரியார் பஞ்சபேதம் , அதாவது சமமின்மை என்கிறார். ஒரு ஜடப்பொருளும் ஜீவாத்மாவும் பேதப்பட்டது, ஏன் ஒரு ஜீவன் இன்னொன்றில் இருந்து பேதப்பட்டது. ஒரு ஜீவன் பரமாத்மாவிடம் இருந்து பேதப்பட்டது. என்கிறார். சங்கரர் மாதிரி சி இஸ் ஈக்குவல் டு ஃபோர் ஏ (C= 4A) அப்படீன்னு சொல்லிட்டா, பரமாத்வா ஜீவனின் இத்தனையாவது படி அப்படீன்னு சொல்லிட்டா நாம பரமாத்மாவை வரையறை செய்து ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள்ள அடைச்சுட்ட மாதிரி இருக்கும். ஆனால் வேதாந்தம் பரமாத்மாவை நி-சீமா , எல்லையற்றவன், வரம்பு வரையறை அற்றவன் என்று சொல்கிறது. எனவே மத்வாச்சாரியார் ரொம்ப சைன்டிபிக்-கா சி இஸ் ஈக்குவல் டு பை டி அப்படீங்கறார். ஒரு சுவாரஸ்யம் என்ன அப்படீன்னா திரிகோணமிதில சைன் (sine) மற்றும் காஸ் (cos) மதிப்புகளை கண்டுபிடிக்கும் 'டைலர்' சீரீஸை அப்பவே கண்டுபிடித்தவர் மத்வாசாரியார். அவர் ஒரு பெரிய கணிதவியல் மேதை கூட .அவர் எவ்வளவு அழகா தன் சித்தாந்தத்தை கணிதத்தில் இருந்து, கணிதத்தின் ஒரு அழகான எண்ணில் இருந்து எடுத்திருக்கார் என்பது அற்புதம்.

[English Translation] One interesting thing is that Einstein's gravitational equations also contain this number π. This means that in this Prapancha (universe) nothing can be precisely measured as a multiple of something else. There will always be an uncertainty (not sure whether this is the right equivalent word). Madhvacharya defines this as Panchabheda or inequality. Every thing/Jeeva is different from Paramatma. If one can define C=4A like Adi Shankara, then it will look as if Paramatma can be encompassed within a definite frame but Paramatma is indefinable/immeasurable. Therefore Madhvacharya says this scientifically C = πd. Another interesting thing is that Madhvacharya discovered the Tylor series which are used to find out the values of sin and cos in Trigonometry. In fact he was a great mathematician. It is remarkable that he describes his philosophy in a mathematical way.

சரி இங்க விசிஷ்டாத்வைதம் ,அதாவது ஆண்டாள் போன்ற ஆழ்வார்களின் நெறி என்ன அப்படீன்னா, பரமாத்மா என்பது வட்டம் போல மாயத்தோற்றம் காட்டும் ஒரு சதுரம் என்பது. இந்த மார்க்கம் த்வைதம் மற்றும் அத்வைதம் இரண்டையும் ஓரளவு ஒத்துக்கொள்கிறது. அரிஸ்டாடிலின் கோல்டன் மீன் (Golden Mean) அப்படீன்னு சொல்வாங்களே அது மாதிரி .ஒரேயடியாக ஒரு ஜீவனிடம் நீ தான் பரமாத்மா அப்படீன்னு சொல்ல முடியாது. அவனுக்கு மிதப்பு வந்து விடும். அதே போல உன்னால் எத்தனை சாதனை செய்தாலும் பரமாத்மாவாக எப்போதும் மாற முடியாது என்று சொன்னால் அவன் மனமுடைந்து விரக்தியாகி விடுவான். எனவே நீ அஞ்ஞானத்தில் இருக்கும் வரை பரம்பொருள் உனக்கு ஒரு குழப்ப வட்டம். நீ ஞானம் பெற்றால் அது உனக்கு ஒரு தெளிந்த சதுரம் என்று சொல்கிறது இந்த நெறி. அதாவது வெளியே குப்பன், சுப்பன், கந்தன், கண்ணன் என்று பலபேர்களில் அழைக்கப்படுபவர்கள் பஸ்ஸில் ஏறியதும் கண்டக்டருக்கு 'டிக்கெட்' ஆக மாறி விடுவது போல. பெரியாவாளுக்கு நிகர் பெரியவாள்தான்.

[English Translation] OK. If we take Vishishtadvaita, Paramatma is a square that shows itself as a circle. This philosophy accepts both Dvaita and Advaita to some extent. It is like Aristotle's Golden mean. You can't tell a Jeevatma that you are Paramatma - if you say so, he will be engulfed in egotistic complex. But at the same time you can't tell him that you can never become Paramatma regardless of all your Sadhanas because he will become depressed. So, as along as you are ignorant (aGYAni), Paramatma is like a confusing circle. But when you become a GYAni, it becomes clear square. It is like people like Kuppan and Suppan become 'tickets' when they get into the bus.

*********************************************************

எல்லா தேவர்களுக்குச் செய்யும் நமஸ்காரமும் ஒரே ஈஸ்வரனைத்தான் போய்ச் சேருகிறது என்று சாஸ்திரம் சொல்கிறது: ‘ஸர்வ தேவ நமஸ்கார: கேசவம் ப்ரதிகச்சதி’ஒரே பரமாத்மாதான் பல ஸ்வாமிகளாக ஆகியிருக்கிறது. ஆஸாமிகள் அத்தனை பேராகவும் கூட அதுவேதான் ஆகியிருக்கிறது. ஆகையால், எந்த ஸ்வாமிக்குப் பண்ணும் நமஸ்காரமும்… எந்த ஆஸாமிக்குப் பண்ணும் நமஸ்காரமும் என்றும் சேர்த்துக்கொள்ள வேண்டும்… ஏக பரமாத்மாவையே சென்றடைகிறது.

‘கேசவம்’ என்று சொல்லியிருப்பதை கிருஷ்ணர் என்ற அவதாரம் என்றோ அல்லது அநேக தெய்வங்களில் ஒன்றாக இருக்கப்பட்ட விஷ்ணு என்றோ அர்த்தம் பண்ணிக்கொள்ளக்கூடாது.க, அ, ஈச, வ என்ற நாலு வார்த்தை களும் சேர்ந்து ‘கேசவ’ என்றாகி யிருக்கிறது. ‘க’ என்றால் பிரம்மா; ‘அ’ என்றால் விஷ்ணு; வேத புராணாதிகளில் பல இடங்களில் பிரம்ம- விஷ்ணுக்களுக்கு இப்படி (முறையே ‘க’ என்றும், ‘அ’ என்றும்) பெயர் சொல்லியிருக்கிறது. ஈச என்பது சிவன் என்பது எல்லோருக்கும் தெரிந்தது. க, அ, ஈச மூன்றும் சேர்ந்து ‘கேச’ என்றாகும். அதாவது பிரம்ம, விஷ்ணு, ருத்ரர்களான த்ரிமூர்த்திகளைக் ‘கேச’ என்பது குறிக்கும். ‘வ’ என்பது, தன் வசத்தில் வைத்துக் கொண்டிருப்பதைக் குறிக்கும். த்ரிமூர்த்திகளை எவன் தன் வசத்தில் வைத்துக் கொண்டிருக்கிறானோ, அதாவது த்ரிமூர்த்திகளும் எவனுக்குள் அடக்கமோ, அவனே கேசவன்.ஆசார்யாள் இப்படித்தான் பாஷ்யம் பண்ணியிருக்கிறார்.

[Murali] : This concept actually comes in Mahabharata (Harivamsha Purana, the last canto of Mahabharata, Bhavishya Parva, Chapter 88, Verse 48 in which Lord Shiva praises Lord Krishna as below:

ka iti brahmaNo nAma Isho.ahaM sarva dehinAm | AvAM tavA~N saMbhUtau tasmAt keshava nAmavAn || Meaning : Ka is Braham's Name, I am the Isha for all Dehis. We two raised from your body and that's why you have the name Keshava.

ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹார மூர்த்திகளான மூவரையும் தன் வசத்தில் வைத்துக்கொண்டிருப்பவன் என்றால், அவன் ஏக பரமாத்மாவாகத்தான் இருக்க வேண்டும். எந்த ஸாமிக்கும் ஆஸாமிக்கும் செய்கிற நமஸ்காரத்தை அந்த ஸாமிக்குள், ஆஸாமிக்குள் இருந்துகொண்டு அவன்தான் வாங்கிக் கொள் கிறான். ஸர்வ தேவ நமஸ்கார கேசவம் ப்ரதிகச்சதி.நமஸ்காரம் என்றால் என்ன? உடம்பினாலே தண்டால் போடுகிற மாதிரி காரியமா? இல்லை. இங்கே காரியம் இரண்டாம் பக்ஷம். பாவம்தான் முக்கியம். பக்தி பாவத்தைப் பலவிதமாகத் தெரிவிக்கத் தோன்றுகிறது. அப்போது, பகவானுக்கு முன்னால் தான் ஒண்ணுமே இல்லை என்று மிக எளிமையோடு விழுந்து கிடப்பதைக் காட்டவே நமஸ்காரம் என்ற க்ரியை. ஆக, நமஸ்காரம் என்று க்ரியையைச் சொன்னாலும், அது பக்தி என்ற உணர்ச்சியைக் குறிப்பதுதான். எவருக்குச் செய்கிற நமஸ்காரமும் ஒரே பரம்பொருளான கேசவனுக்குப் போய்ச் சேரும் என்று சொன்னால், எவரிடம் செலுத்தும் பக்தியும் பரமாத்மா என்ற ஒருவனுக்கே அர்ப்பணமாகும் என்றே அர்த்தம்.(‘தெய்வத்தின் குரல்’ நூலில் இருந்து…)

Tell A Friend!
Type In Your Name:
Type In Your Email:
Your Friend's Email:
Your Comments:

Receive copy:

PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:  

*E-mail:  

*Comments:


*Enter number in the text box below



Post your comments to Facebook




Designed and maintained by AKR Consultants