Bookmark and Share 


Healthcare Tips
Parents Home
Couples Suit
Spiritual Path
Student's Corner
Youth Resort
Management
Lighter Moments
Entertainment
Serious Side
World Tour
Internet Links
Snippets

Tamil Software
அழகி மென்பொருள்
  
Tamil-English bilingual webmagazine dedicated to education of the masses through E-books, articles, worldwide informations, Slideshows,
Presentations on various subjects, photographs and images, moral and objective oriented stories and Lectures including audio and video

மன வளத்திற்கு மல்டி விட்டமின் மாத்திரைகள்
மாத்திரை - 2 முடிவின் தொடக்கம்

Courtesy: Harihara Mahadevan

"Chicken Soul for the Soul" எனக்குத் தூண்டுகோலாக இருந்த ஒரு சிறந்தநூல். தமிழில் அது போன்ற ஒன்று வர வேண்டும் என்ற அவாவின் முயற்சி தான்.

"மன வளத்திற்கு மல்டி வைட்டமின் மாத்திரைகள்" என்ற இந்த நூல். அந்த நூலில் காணும் நிகழ்ச்சிகளுக்கும் இந்த நூலுக்கும் ஒரு சம்பந்தமுமில்லை.

கடந்த 17 வருடங்களாக ஒரு பயிற்சியாளராக, நிர்வாகத்துறையின் ஒரு பேராசிரியராக நான் சந்தித்த பல தரப்பட்டவரது அனுபவங்கள், அந்த வகுப்புகள் எடுக்க நான் மேற்கொண்ட முயற்சிகள், எனது Free Web Site “Shantham” மூலமாக எனது நண்பர்கள் குழாம் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் - இவைகளின் ஒட்டு மொத்த முயற்சி தான் இந்த நூல்.

கணவன் - மனைவி, பெற்றோர் - குழந்தை, அலுவலகம். பொது வாழ்வு போன்ற பலதரப்பட்ட உறவுகளில் ஏற்படும் விரிசல்கள், அதனைச் சுலபமாகத் தீர்க்கத் தேவைப்டும் அந்த `மனப்பக்குவம், மனத்தளர்வு அதனால் ஏற்படும் விரக்தி, இவை அனைத்தையும் துணிவுடன் எதிர்கொள்ளத் தேவையான மனத்திடம், ஆன்மீக பலம் - இவை போன்ற பல கருத்துக்களை நடைமுறை வாழ்க்கை நிகழ்ச்சிகளாக நமது பண்பாட்டிற்கேற்ற வகையில் அமைத்துள்ளேன்.

அன்புடன்

ஹர்ஷா
(M. HARI HARA MAHADEVAN)
Mobile: 98413 56075

முடிவின் தொடக்கம்

வாழ்வின் பொருள் என்ன என்பதை அறியும் ஆவலில் இளைஞன் ஒருவன் இருந்தான். பலரிடம் அது பற்றிக் கேட்டான். எந்த பலனும் இல்லை. அவனது அறியாமை பற்றி அவன் சந்தேகம் வலுப்பட்டது தான் அவன் கண்ட பலனாகப் போனது.

நாட்டில் தேடுவதை விட்டு விட்டு காட்டிற்குச் சென்று தேடுவது எனத் தீர்மானித்தான். """"நிறையப் பேருக்கு அந்த ஞானோதயம் காட்டில் தானே கிடைத்திருக்கிறது. எனக்கும் அப்படித்தானோ"""" அரைகுறை நம்பிக்கையுடன் காட்டிற்கு வந்தான்.

"வாழ்வின் பொருள் என்ன? பொருள் என்ன? என்ன?" என்று காட்டில் பல நாட்கள் தனக்குள் கேட்டான். கத்திக் கேட்டான். கூச்சல் போட்டான். அவனது குரல் எதிரொலியாக வந்தது தான் மிச்சம். வேறெதுவும் உருப்படியாகக் கிடைக்கவில்லை. மனந்தளரவில்லை. பொருள் கிடைத்தே தீரும் என்பதில் உறுதியாக இருந்தான்.

ஒரு நாள் அவனது சமீபத்தில் ஒரு துறவி வந்து கொண்டிருந்தார். அவரிடமும் கேட்டு விட்டான். விடவில்லை. "வாழ்வின் பொருளா? அப்பனே அது இங்கே கிடைக்கும் என்றா வந்தாய்? இது வீண், நாட்டிற்குப் போ" என்றார் துறவி.

"நாட்டுக்கா?" சந்தேகத் தொனியுடன் கேட்டானவன்.

"ஆமாம். நாட்டுக்குத் தான். நாட்டில் நீ சந்திக்கும் முதல் மூன்று மனிதர்களிடத்தில் இதே கேள்வியைக் கேள். தேவையான பதில் கிடைக்கும்." சொல்லிவிட்டு அவனது பதிலுக்குக் காத்திராது விடுவிடுவென்று சென்று விட்டார் துறவி.

"நாட்டில் பதில் க¨டைக்கவில்லை என்று தானே இந்தக் காட்டுக்கு வந்தேன். திரும்பவும் நாட்டுக்கா?" குழப்பத்துடன் நாட்டிற்கு நடையைக் கட்டினான்.

முதலில் அவன் சந்தித்த மனிதன் மரம் செதுக்கும் ஒரு தச்சன். அவனிடம் வாழ்க்கையின் பொருள் என்ன எனக் கேட்டான்.

"எனக்கென்ன தெரியும்? மரத்தை எடுப்பேன். கேட்கும் பொருளை மரத்தில் வடித்துக் கொடுப்பேன். எனக்குத் தெரிந்தது எல்லாம் இது தான்." என்றான் தச்சன்.

அடுத்ததாக அவன் சந்தித்த மனிதன் உலோகத் தகடுகளை உருவாக்கும் ஒரு பேப்ரிகேஷன் ஷாப் வைத்திருக்கும் ஒர்க் ஷாப் முதலாளி. அவனிடமும் அதே கேள்வி கேட்கப்பட்டது.

"வாழ்வாவது பொருளாவது? மெட்டல் கொண்டு வருபவருக்கு வேண்டிய ஷேப்புக்கு அதை பேப்ரிகேட் பண்ற வேலை என்னுடையது. எனக்கென்ன தெரியும் ஒன்னோட கேள்விக்குப் பதில்?" கைவிரித்து விட்டான் அவன்.

மூன்றாமவனைப் பார்த்தான். உலோகத் தந்திகள் உருவாக்கும் தொழில் புரிபவன் அவன். அவனையும் விடாது கேள்வியைக் கேட்டான்.

"பெரிய உலோகத் தகடு எங்கிட்டே வரும். அத¨லேருந்து சிறிய உலோகத் தந்தி அந்த வொயர் அதைப் பண்ற எங்கிட்ட வந்து கேட்டே பாரு." அலுத்துக் கொண்டான் அவன்.

"அந்தத் துறவி ரொம்ப சுலபமாகச் சொல்லி விட்டுப் போயிட்டார். என்னோட மண்டை காயறது தான் மிச்சம்" குழப்பத்தில் அப்படியே ஒரு குளக்கரையில் துhங்கிப் போனான்.

கொஞ்ச நேரந்தான் ஆகியிருக்கும் போல இருந்தது. ஒரு இனிமையான ஓசை கேட்டு துhக்கத்திலிருந்து விடுபட்டான். அது ஒரு வயலின் இசை. அதன் ரம்மியமான ஒலி அவனது உடல், மனதை ஊடுருவி ஆத்மாவுக்குள் நுழைந்தது போன்ற உணர்வு. ஒரு பெரிய சுகானுபவம். அந்த அனுபவத்தில் அவன் திளைத்திருக்கும் போது அந்தத் துறவி சொன்னது அவனது பொறியில் தட்டியது.

"ஆகா... விடை கிடைத்து விட்டது... விடை கிடைத்து விட்டது" துள்ளிக் குதித்து ஓடினான்.

முதலாமவன் வயலினுக்குத் தேவையான மரத்தைச் செதுக்கிய தச்சன், இரண்டாமவன் அதன் தந்திக்குத் தேவையான இரும்பைக் கொடுக்கும் பேப்ரிகேட்டர். மூன்றாமவன் அந்தத் தகட்டில¨ருந்து வயலின் தந்தியைத் தயார் செய்யும் தொழில் புரிபவன். மூன்றையும் இணைத்துப் பார்க்கும் போது ஒரு முழுக் கருவியின் உருவம் கண்ணில் புலப்பட்டது. வயலின் அவன் முன்பு ஜாலம் காட்டியது. வாழ்வின் பொருள் அவனுக்கு விளங்க ஆரம்பித்தது.

வாழ்க்கை என்பது சிதறிக் கிடக்கும் பல புள்ளிகள் கொண்ட ஒரு அமைப்பு அந்தப் புள்ளிகளை ஒழுங்காகச் சேர்க்கும் போது அழகிய கோலம் கிடைப்பது போல் வாழ்க்கையின் அழகிய வடிவமும் தென்படுகிறது.

சிதறிக் கிடக்கும் பல பொருட்களை - மரத்தை, உலோகத்தை, தந்திக் கம்பியை ஒரு ஒழுங்கு முறையில் இணைக்கும் போது அழகிய ஒரு வடிவம் கிடைப்பது போல் தான் வாழ்க்கை. சிதறிக் கிடக்கும் புள்ளிகள் கோலமாகி விடாது. பரவிக் கிடக்கும் பொருட்கள் அர்த்தமுள்ள ஒரு உருவமாகி விடாது. அதைச் சரிவரச் சேர்ப்பதில் தான், இணைப்பதில் தான் வாழ்வின் சூட்சுமம் இருக்கிறது. வாழ்வின் பொருள் விளங்கிய அவன் சந்தித்த துறவிக்கு மானசீகமாக நன்றி தெரிவித்தான்.

நமது அறியாமையை எண்ணி நாம் வருந்த வேண்டியதில்லை. அது வந்தால் தான் தெளிவு பிறக்கும். அது அழியும் போது தான் ஞானம் வரும். ஒரு பணக்காரன் முனிவர் ஒருவரிடம் கேட்டானாம் "என்னிடம் ஏராளமாகப் பணமிருக்கிறது. உன்னிடம் எதுவுமே இல்லையே நீ ஏழை தானே" என்று முனிவர் சொன்னாராம். "ஆமாம் உண்மை தான். நான் ஏழை தான். ஆசையை விருப்பு வெறுப்பை எதிர்பார்ப்புகளை இவை எல்லாவற்றையும் இழந்த ஏழை தான். ஒன்றை இழந்தால் தான் இன்னொன்றையும் பெற முடியுமப்பா. இந்த ஏராளமான செல்வத்தை எல்லாம் வைத்துக் கொண்டு நீ எதை எதையெல்லாம் இழந்து கொண்டிருக்கிறாய் என்பது எனக்குத் தெரியாத ஒன்றா? அது உனக்குத் தான் தெரியாமல் தான் போகுமா? செல்வத்தில் நான் பரம ஏழை தான். ஆனால் மன அமைதியில் உள் மகிழ்ச்சியில் நான் கோடீஸ்வரன்" என்றாராம் முனிவர். செல்வந்தன் வாயடைத்துப் போனானாம். ஒன்றை இழப்பதில் தான் அதிலிருந்து இன்னொன்றைப் பெறுவதில் தான் வாழ்வின் பொருளே அடங்கியிருக்கிறது.

வெறும் மரம் மரமாக மட்டும் இருந்தால் வெறும் உலோகத் தகடு தகடாக மட்டும் இருந்தால் அங்கு வயலின் கிடைப்பதில்லை. மரம் செதுக்கப்பட்டு அந்த மரத்தின் அந்த உருவம் அழிந்தால் தான் வயலினுக்குத் தேவையான வடிவம் கிடைக்கிறது. உலோகத் தகடு தன் உருவம் அழிந்து தந்திக் கம்பியாக மாறினால் தான் நல்ல ரம்மியமான இசை அளிக்கும் கருவியாக மிளிர்கிறது. ஒன்று அழிந்தால் தான் இன்னொன்று உருவாகிறது. வாழ்க்கையின் உயரிய தத்துவப் பொருள் அது தான்.

Tell A Friend!
Type In Your Name:
Type In Your Email:
Your Friend's Email:
Your Comments:

Receive copy:

PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:  

*E-mail:  

*Comments:


*Enter number in the text box belowPost your comments to Facebook
Designed and maintained by AKR Consultants