Bookmark and Share 


Healthcare Tips
Parents Home
Couples Suit
Spiritual Path
Student's Corner
Youth Resort
Management
Lighter Moments
Entertainment
Serious Side
World Tour
Internet Links
Snippets

Tamil Software
அழகி மென்பொருள்
  
Tamil-English bilingual webmagazine dedicated to education of the masses through E-books, articles, worldwide informations, Slideshows,
Presentations on various subjects, photographs and images, moral and objective oriented stories and Lectures including audio and video

மங்கல்யானும் மறக்கப்பட்ட மனிதர்களும்

Courtesy: Kalakad Subramanian

மங்கல்யானும் மறக்கப்பட்ட மனிதர்களும்

- அரவிந்தன் நீலகண்டன், November 11, 2013

Source: Tamil Hindu

செவ்வாய் கிரகத்துக்கு இந்திய விண்வெளி மையம் அனுப்பிய விண்கலத்தை சுமந்து சீறி பாய்ந்து சென்றது ராக்கெட். அந்த சந்தோஷ தருணத்தில் மறக்கப்பட்ட சில மனிதர்களை நினைவுக்கு கொண்டு வருவது நம் கடமை. அதற்கு முன் ஒரு சின்ன விஷயம்.morning_hindutva ஏன் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பி அங்கே மீத்தேன் வாயு இருக்கிறதா என பரிசோதனை செய்ய வேண்டும் – அதுவும் பாரதம் போல வறுமையுடன் போராடும் ஒரு நாடு?இந்த கேள்வி உடனடியாக இடதுசாரிகளால் கேட்கப்படும். உண்மையில் வளரும் நாடுகளுக்குத்தான் விண்வெளி தொழில்நுட்பம் மிகவும் தேவை. செயற்கை கோள் தொழில்நுட்பம் மனித வள மேம்பாட்டுக்கும் இயற்கை வளம் பேணுவதற்கும் மிகவும் அவசியமானது. மானுடத்தின் அடுத்த தாவலும் விரிவும் விண்வெளியில் அமையும். அது விரைவில் நிகழும். அப்போது நாம் –அதாவது நம்மை போல காலனிய சுரண்டலால் தேக்கநிலை அடைந்து வறுமையில் உழலும் நாடுகள்- என்ன செய்ய வேண்டும்? காலனிய ஆதிக்கத்தின் மூலம் வளர்ந்த நாடுகள் மட்டுமே அந்த முன்னேற்றத்தில் ஈடுபடட்டும் என விட்டுக் கொடுத்து விட வேண்டுமா? நாம் கைகட்டி அவர்கள் தமக்கு போக எஞ்சியதை நமக்கு தரும் போது அதை கை கட்டி வாங்கி அவர்களின் அரசியல் அழுத்தங்களுக்கு நம் சுதந்திரத்தை விட்டு கொடுத்து… ஒரு வேளை நம் இசங்கள் பேசும் இடதுசாரிகள் எதிர்பார்ப்பது கூட இதைத்தானோ என தோன்றுகிறது. தெரு தெருவாக அறிவியலையும் பகுத்தறிவையும் வளர்க்கிறோம் பேர்வழி என்று ‘பக்திமான் கண்டுபிடிச்சது விபூதி பாக்கெட் விஞ்ஞானி கண்டுபிடிச்சதோ ராக்கெட்’ என்று கோஷம் போடலாம் பாருங்கள்…

மங்கல்யானுக்கு முதல் பிள்ளையார் சுழி போட்டவர் யார்? ஆண்டு 1999. பொகரானில் அமெரிக்க செயற்கை கோள்களின் கண்களில் மண்ணை தூவி பாரதம் அணு சோதனையை நிகழ்த்திய முதலாம் ஆண்டு விழா. இந்திய விண்வெளி மையத்தின் அன்றைய தலைவர் கஸ்தூரி ரங்கன் உரை ஆற்றுகிறார், “பாரதத்துக்கு சந்திரனுக்கு விண்கலம் அனுப்பும் ஆற்றல் இருக்கிறது.” போகிற போக்கில் சொல்லி செல்லப்பட்ட இந்த வார்த்தைகள் அந்த கூட்டத்தில் இருந்த மனிதர் ஒருவருக்கு பொறி தட்டுகிறது. அக்கினி குஞ்சொன்றை கண்டேன் என.

உரைக்குப் பின்னர் அவர் கஸ்தூரி ரங்கனை சந்திக்கிறார்.

”உண்மையா? நெஜமாகவே முடியுமா?”

“ஆம்” என்கிறார் கஸ்தூரி ரங்கன். அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும்.

“செலவு? நம்மை போல வளரும் நாட்டின் பொருளாதாரத்துக்கு முடியுமா? அதுவும் அமெரிக்கா விதித்த தடைகள் எல்லாம் இருக்கின்றனவே…”

”அதையெல்லாம் கவலைப்படாதீர்கள். இந்திய தொழில்நுட்பத்தால் அதிசயங்களை செய்ய முடியும். அரசு முழுமையாக துணை செய்ய வேண்டும்.”

வேண்டிய வசதிகள் செய்து தரப்படும். என அந்த மனிதர் வாக்களிக்கிறார். வேலைகள் துரிதமாக நடை பெறுகின்றன. 2003 இல் அன்றைய பாரத பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களால் சந்திராயன் தேச விடுதலை திருநாள் அன்று அறிவிக்கப்படுகிறது. “ பாரதம் சந்திரனுக்கு விண்-பரிசோதனை மிஷன் ஒன்றை அனுப்பப் போகிறது. அதன் பெயர் சந்திரயான்.”

மிக குறைவான செலவில் சந்திரனுக்கு அனுப்பப்பட்ட விண் -சோதனை செயல்திட்டம் அது. சந்திரயான் இரண்டு ஆண்டுகளுக்குத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அது ஓராண்டுதான் செயல்பட்டது. என்ற போதிலும் அந்த காலகட்டத்தில் அது சந்திரன் குறித்து சேகரித்து அனுப்பிய தரவுகள் மிக அதிகம் – சந்திரனில் இருக்கும் நீர் உட்பட. இந்தியாவின் இந்த குறைந்த செலவு விண்-செயல்திட்டங்களுக்கு மற்றொரு முக்கிய மகத்துவம் உண்டு. 304 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கான உலக விண்வெளி தொழில்நுட்ப சந்தையில் ஒரு முதன்மை போட்டியாளராக இந்தியா வளர்ந்து வருகிறது. காலனியாதிக்கத்தால் வஞ்சித்து சுரண்டப்பட்ட மற்ற வளரும் நாடுகளுக்கும் இது ஒரு நல்ல முன்னுதாரணம்.

சரி. கஸ்தூரி ரங்கனின் உரையிலிருந்து சந்திரயானை கண்டறிந்து ஊக்குவித்த அந்த மனிதர் யார்?

joshi: பேராசிரியர். முரளி மனோகர் ஜோஷி. இந்திய ஊடகங்களால் குறிப்பாக இடதுசாரி ஊடகங்களால் மிக மோசமாக சித்தரிக்கப்பட்ட அந்த மனிதர்தான். ஏதோ மூடநம்பிக்கையாளர் பிற்போக்குவாதி என மீண்டும் மீண்டும் கேலி செய்யப்பட்ட அந்த மனிதர் இந்திய அரசியலில் வேண்டுமென்றே பலிகடாவாக்கப்பட்டவர். ஜோஷி மூடநம்பிக்கையாளரா? ஒரு சிறிய உதாரணம் புரியவைக்கும். 1995 இல் விநாயகர் விக்கிரகங்கள் பால் குடிக்கும் அதிசயம் நிகழ்வதாக ஒரு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது வெளிவந்த ‘சண்டே’ எனும் ஆங்கில இதழுக்கு ஜோஷி பேட்டி அளித்திருந்தார்: இது விக்கிரகங்களில் இருக்கும் நுண் துளைத்தன்மையால் ஏற்படும் இயற்கை நிகழ்வே தவிர இறை சக்தியால் நிகழும் அற்புதம் அல்ல.

கல்வி அனைத்து இந்தியருக்குமான அடிப்படை உரிமை என 1993 இல் உச்ச நீதி மன்றம் கூறியதற்கு செயல்வடிவம் அளித்தவர் ஜோஷி. அதற்கு அவருக்கு உத்வேகம் அளித்தது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஓராசிரியர் பள்ளி கோட்பாடுகள். இன்று சர்வ சிக்‌ஷா அபியான் எனும் செயல் திட்டம் முழுவடிவுடன் செயல்படுவதற்கு பின்னால் ஒரு இந்துத்துவ மூளை இருக்கிறது. இயற்கை வளம் மற்றும் பாரம்பரிய அறிவு பாதுகாப்பு ஆகியவற்றிலும் ஜோஷியின் செயல்பாடு முக்கியமாக இருந்தது. ஆனால் இவை எல்லாம் பேசப்படுவதே இல்லை. சர்வ சிக்க்ஷா அபியானுக்கும் சந்திரயானுக்கும் இன்றைக்கு மங்கல்யானுக்கும் ஒரு பொதுத்தன்மை இருக்கிறது. அது இந்த செயல்திட்டங்களின் சிக்கனம் சார்ந்த செயல்திறமை. இயல்பாக நம் பண்பாட்டில் ஊறியது அது. நம்மை போல காலனியத்தால் சுரண்டப்பட்ட நாடுகளுக்கு இன்றைய அதி முக்கிய தேவை அதுவேதான். மிகவும் சிக்கனமாக ஆகச்சிறந்த திறமையை சிந்தாமல் சிதறாமல் செயல்களில் வெளிக் கொண்டு வருவது…

nnஇதை போலவே மறக்கப்பட்ட மற்றொரு சாதனையாளர் -இன்னும் முக்கியமானவர் ஒருவர் உண்டு. அவர்தான் இஸ்ரோவின் முதன்மையான விஞ்ஞானிகளில் ஒருவராக திகழ்ந்த நம்பி நாராயணன். KVD எனும் விண்கலன் தொழில்நுட்பம் ஒன்றை இந்தியாவுக்கு அளிக்க சோவியத் யூனியன் ஒப்பு கொண்டது அமெரிக்க உளவு நிறுவனங்களுக்கு தெரிந்துவிட்டது. அதனினும் மேம்பட்ட தொழில்நுட்பம் ஒன்றை வடிவமைத்து கொண்டிருந்தவர் நம்பி நாராயணன். அமெரிக்கா சீற்றம் அடைந்தது. 1992 இல் முதலாம் புஷ் இந்திய விண்வெளி மையத்தின் மீது தடைகளை விதித்தார். 1994 இல் நம்பி நாராயணன் இந்திய விண்வெளி ரகசியங்களை விற்றதாக கைது செய்யப்பட்டார். செக்ஸுக்காக மாலத்தீவை சேர்ந்த இரு பெண்களுக்கு அவர் இந்திய விண்வெளி தொழில்நுட்பங்களை விற்றார் என அவர் மலினப்படுத்தப்பட்டார். கைது சித்திரவதை என தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்ட இந்த மனிதரின் வாழ்க்கை உண்மையில் மிக எளிமையானது. அவர் கைது செய்யப்பட்ட போது அவர் வீட்டில் இருந்த டிவி கூட வேலை செய்யவில்லை. ஒரு சாதாரண நடுத்தர வர்க்க குடும்பத்தைக் காட்டிலும் எளிமையான ஒரு வீடு என்பதை பத்திரிகையாளர்கள் கண்டார்கள்.

நடந்தது என்ன என்பதை ’Emerging Space Powers: The New Space Programs of Asia, the Middle East and South-America’ எனும் நூல் ரத்தின சுருக்கமாக சொல்கிறது. அது அப்படியே இங்கே:emerge:

The plot thickened when, at the Liquid Propulsion Systems Center, S.Nambi Narayanan and P.Sasikumaran were arrested for ‘spying for foreign countries’. Eventually the Central Bureau of Investigation admitted that the charges against S.Nambi Narayanan and P.Sasikumaran were false and baseless and they were freed. Later the United States was accused of setting them up as part of a dirty-tricks campaign against the sale of the KVD-1. Although not properly recognized for his achievement, Nambi Narayanan went on to develop the Vikas engine that eventually sent Chandrayan to the Moon in 2008. (Brian Harvey, Henk H. F. Smid, Théo Pirard, Springer, 2011, பக். 225)

அமெரிக்காவின் இந்த கீழ்த்தர விளையாட்டில் கேரள போலீஸிலிருந்து பங்கு வகித்த கள்ள ஆடுகளில் போலீஸ்துறையிலும் இருந்தன. பின்னர் பதவிற்ற இடதுசாரிகளிலும் இருந்திருக்கின்றன. பாரதத்துக்கும் எனவே இந்துத்துவத்துக்கும், எதிராக மார்க்ஸியர்கள் ஏகாதிபத்தியவாதிகளுடன் கை கோர்ப்பதென்பது வரலாற்றில் எப்போதும் நடக்கும் துரோகம்தானே!

ஏனெனில் முழுமையான விசாரணைக்கு மீண்டும் மீண்டும் முட்டுக்கட்டைகள் மார்க்ஸிஸ்ட் அரசால் போடப்பட்டு இறுதியில் உச்சநீதி மன்ற அதிரடியால் முழு விசாரணை நடந்தது. அதில் நம்பி நாராயணன் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டார். அன்று கேரள போலீஸின் SIB இல் டெபுடி டைரக்டராக இருந்தவர் ஸ்ரீகுமார். நம்பிநாராயணனை 50 நாட்கள் சிறையில் வைத்து உடல்-உள்ள ரீதியாக சித்திரவதை செய்து அவரை தன் மேலதிகாரிகளுக்கு எதிராக வாக்குமூலம் கொடுக்க நிர்ப்பந்தித்தார் இவர்.

ஏறக்குறைய ஒட்டுமொத்த இஸ்ரோ (ISRO) அமைப்பே இதனால் ஒரு முடிவுக்கு வந்திருக்கும். உச்சநீதி மன்ற தீர்ப்பின் படி 1999 இல் மத்திய அரசு இவருக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்தது. அப்போது குஜராத் உளவுத்துறையில் ஸ்ரீகுமார் பொறுப்பில் இருந்தார்.

sknnஆக பார்த்தார் ஸ்ரீகுமார். 2002 கலவரங்கள் அவருக்கு வகையாக உதவின. மோடி மீது குற்றச்சாட்டுகளை அடுக்கினார். இடதுசாரி வட்டங்களில் பிரபலமானார். 2004 இல் இவர் மீதான குற்றச்சாட்டுகள் சோனியா அரசால் அமுக்கமாக மறைக்கப்பட்டன. ஓய்வு பெற்ற நம்பி நாராயணன் தம் தள்ளாத வயதில் இன்னும் தனக்கு இழைக்கப்பட்ட அநியாயத்துக்கு எதிராக நீதி கேட்டு போராடிக் கொண்டிருக்கும் போது, ஸ்ரீகுமார் மனித உரிமை போராளி வேடம் தரித்து இந்திய அமெரிக்க முஸ்லீம் கவுன்ஸிலால் அழைக்கப்பட்ட விருந்தாளியாக அமெரிக்கா சென்று கொண்டிருக்கிறார்.

மங்கல்யானுக்காக மனம் மகிழும் போது ஒரு கணமாவது நம்பி நாராயணனையும் நன்றியுடன் நினைத்து கொள்வோம்.

Tell A Friend!
Type In Your Name:
Type In Your Email:
Your Friend's Email:
Your Comments:

Receive copy:

PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:  

*E-mail:  

*Comments:


*Enter number in the text box belowPost your comments to Facebook
Designed and maintained by AKR Consultants