Bookmark and Share 


Healthcare Tips
Parents Home
Couples Suit
Spiritual Path
Student's Corner
Youth Resort
Management
Lighter Moments
Entertainment
Serious Side
World Tour
Internet Links
Snippets

Tamil Software
அழகி மென்பொருள்
  
Tamil-English bilingual webmagazine dedicated to education of the masses through E-books, articles, worldwide informations, Slideshows,
Presentations on various subjects, photographs and images, moral and objective oriented stories and Lectures including audio and video

எது அருமை? எதற்குப் பெருமை?
Harihara Mahadevan

மாத்திரை 11 - எது அருமை? எதற்குப் பெருமை?

தாயில்லா மகன். தாயும் தந்தையுமாய் இருந்து மகனை வளர்த்தார் தந்தை. தந்தைக்குப் பொழுது போக்கு பல வித ஓவியங்களைச் சேர்ப்பது. அதில் அலாதிப்பிரியரான அவரிடம் உலகத்தில் உள்ள அத்தனை சிறந்த ஓவியங்களையும் பார்க்கலாம். அவ்வளவு கலெக்ஷன்ஸ் வளர்ந்து பெரியவனான அவர் மகன் ராணுவத்தில் சேர விரும்பினான்.

"வயதான காலத்தில் என்னைத் தனியே விட்டு விட்டுத் தான் போக வேண்டுமா?" தந்தையின் கண்ணீரையும் பொருட்படுத்தாமல் கிளம்பி விட்டான்.

அவன் ராணுவத்தில் சேர்ந்து மூன்று மாதங்களில் எதிரியுடன் போர் புரியும் வேளை வந்தது. தாய் நாட்டிற்காக வீர தீரச் செயல்கள் பல புரிந்து நாட்டுக்கு வெற்றி வாகை சூடிய வீரர்களில் அவன் விளங்கினான். அது பற்றிய செய்தி கேட்டு அவனைப் பெற்ற தந்தை பெருமை எய்திய அந்த வேளையில் அவன் தாய்நாட்டிற்காக வீர மரணம் எய்திய துயரச் செய்தியும் வந்தது. அவரை உருத் தெரியாமல் கிழித்த நாராகிப் போட்டு விட்டது. நடைப் பிணமாய்த் திரிந்தார். போர்க்களத்திலிருந்து ஒரு செய்தி வந்தது. ஒரு முக்கியமான பரிசுடன் அவரது மகனின் நண்பன் ஒருவன் அவரைப் பார்க்க வருகிறான் என்று. அந்த நாளை எண்ணி உயிரைக் கையில் பிடித்து வைத்திருப்பது போன்று படுக்கையில் விழுந்து கிடந்தார் அவர்.

பத்து நாட்களில் ஒரு இளைஞன் வந்தான். ஒரு பெரிய பார்சல் அவன் கையில். அதைப் பெற்றுக் கொண்ட அவர் மிகுந்த சிரமத்துடன் அதைப் பிரித்தார்.

"என் அருமை நண்பன் தந்தைக்கு என் அன்புப் பரிசு. போர்க்களத்தில் என்னைக் காப்பாற்ற, தன்னுயிரை ஈந்த நண்பனைப் பிரிந்து வாடும் அன்பு நண்பன்" என்ற வாசகத்துடன். தனது மகனின் தத்ரூபமான ஓவியம். அதை நெஞ்சாரத் தழுவிக் கொண்டு மடையாய்த் திறந்த கண்ணீர் வெள்ளத்தில் மூழ்கியிருந்தார்.

"ஐயா, தாங்களும் என்னைப் போல் ஓவியப் பிரியர் என்று தங்கள் மகன் சொல்லி இருக்கிறார். நானே வரைந்த தங்கள் மகனின் ஓவியத்தை விடச் சிறந்த பரிசாக வேறு எதுவும் இருக்க முடியாது என்பதால் தான் இதை நேரில் கொடுக்க எண்ணி இங்கு வந்தேன்." நெகிழ்வுடன் கூறினான் அவரது மகனின் நண்பன்.

"தம்பி, நான் அதிக நாள் உயிரோடு இருக்க மாட்டேன். இதோ நான் சொல்லச் சொல்ல எனது உயிலை எழுது. நான் இறந்த செய்தி உனக்கு வரும். அதன் பின் இந்த உயிலில் எழுதியபடி நடக்க வேண்டும். இந்த உறுதியை நீ எனக்குத் தர வேண்டும்." உறுதி வாங்கப்பட்டது. உயிலும் எழுதப்பட்டது.

இரண்டே மாதங்கள் தாம். அவர் இறந்த செய்தி கேட்டு ஓடோடி வந்தான் நண்பன். அவரது இறுதிச் சடங்குகள் முடிந்தது. அவரது இறுதி ஆசைப்படி அவரது ஓவியங்கள் அனைத்தும் ஏலம் விடப்பட்டு அந்த ஏலத்தில் வரும் பணத்தை அந்த ஊரிலுள்ள அநாதை ஆசிரமத்திற்கு அளிக்க அவர் ஆசைப்பட்டது நடக்கவிருந்தது.

பெரிய கலையரங்கத்தினில் அவரது அரிய கலெக்ஷன்ஸ். பார்வையாளர்களின் கவனத்தை நன்கு கவர்ந்தன. மறுநாள் ஏலத்திற்கு ஏற்பாடு. ஏலம் விடுபவர் அந்த நண்பரின் முன்னிலையில் ஏலத்தை ஆரம்பித்தார்.

முதலில் பெரியவரின் மகன். இறந்த ராணுவ வீரனின் ஓவியம் ஏலத்திற்கு வந்தது.

"இது யாருக்கு வேணும்? மத்ததை விடுய்யா"

"சாரி... இது தான் மொதலில். அது தான் எனக்குக் கொடுக்கப்பட்ட முதல் விதி."

"என்னய்யா விதி? மத்ததை விடு" ஒரே கூச்சல், குழப்பம்.

"100 ரூபாய்... 100 ரூபாய்....."

யாரும் வரவில்லை... 100 ரூபாய் பத்து நிமிடங்கள் வரை ஒரே மௌனம். பலத்த அமைதிக்குப் பிறகு ஒரு குரல் 150 ரூபாய். அந்தப் பெரியவரின் வீட்டில் வேலை பார்த்த வேலையாளின் குரல்.

"150 ரூபாய் ஒரு தரம், இரண்டு தரம், மூன்று தரம்" ஏல மணி அடித்தது. ஏலம் முடிந்தது.

"சீக்கிரமா அந்த கலெக்ஷன்ஸ ஏலம் விடுங்கய்யா"

"சாரி.... ஏலம் முடிந்து விட்டது"

"என்னது? ஏலம்? முடிஞ்சதா? எப்படிய்யா?" அவரது சட்டையைப் பிடிக்காத குறை தான்.

"என்னை ஏன் சார் அடிக்க வர்றீங்க? இதோ ஏலத்திற்கு ஏற்பாடு பண்ற இந்த ஆளு அவர்கிட்டேயே கேளுங்க" ஏலம் விடுபவர் நகர்ந்தார்.

"எல்லோரும் கேளுங்க. இந்த உயில்ல அப்படித்தான் இருக்கு. யாரு வேணா அதைப் பார்க்கலாம். மகனின் ஓவியத்தை யாரு ஏலத்துல எடுக்கறாங்களோ அவருக்குத் தான் எல்லா கலெக்ஷனும் சொந்தம்ன்னு எழுதியிருக்காரு. இந்த வேலைக்காரன் பாக்கியசாலி. மகனோட அருமை. மகிமை அவருக்கு மட்டும் தான் தெரிஞ்சிருக்கு" ஏலத்தை முடித்த திருப்தியுடன் அவர் திரும்பி விட்டார்.

இறந்த மகனின் அருமை ராணுவத்தினருக்குத் தெரியும். அந்த ஊர் மக்கள் அறிந்திருக்கவில்லை.

2000 வருடங்களுக்கு முன்பு சிலுவையில் மடிந்த ஏசுபிரானின் மகிமை ஊர் மக்களுக்கு அப்போது தெரியவில்லை. அவரின் பெருமையை உணர்ந்தவர்கள் பாக்கியவான்கள். அவரின் கருiணை அடைந்தவர்களுக்கு அளப்பற்கரிய பொக்கிஷங்கள் கிடைக்கும்.

பைபிளின் வரிகள் அங்கே தத்ரூபமாயிருந்தது.

Tell A Friend!
Type In Your Name:
Type In Your Email:
Your Friend's Email:
Your Comments:

Receive copy:

PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:  

*E-mail:  

*Comments:


*Enter number in the text box below



Post your comments to Facebook




Designed and maintained by AKR Consultants