- பரப்ரஹ்மம்
உண்மையான குரு பக்திக்கு என்றும் ஒரு குறையும் வராது
Courtesy: KTR, Chennai
பரப்ரஹ்மம் - உண்மையான குரு பக்திக்கு என்றும் ஒரு குறையும் வராது.
SHRI MAHAPERIYAVAL'S ONE OF THE GREATEST MIRACLES
கல்கத்தாவில்,அந்த பக்தை கணவருடன் , அப்போது அவரது வேலை நிமித்தமாக இருந்த கால கட்டத்தில் நடந்த சம்பவம்.
அன்றும் கணவர் ஆபீஸ் போன அப்புறம் வாசலில் பெல் அடித்ததும் , கதவை திறந்தார் , அந்த பெண்மணி .
naxalites கள் 3டு 4 பேர் திமு திமு என்று உள்ளே நுழைந்தும் என்ன செய்ய, என்றே தெரியாத அவர் தன்னை கொல்ல அவர்கள் தயாராக இருப்பதை அவர்கள் பேச்சின் மூலம் புரிந்து கொண்டார்.
பயத்தில் வெலவெலத்து போன அந்த மாது அவர்கள் கேட்ட படி சாய் போட்டு கொடுத்து விட்டு, அவர்களிடம் ஒரு போன்கால் போட்டு கொள்ள அனுமதி கேட்டார்.
சென்னையில் விடுதிஇல் படித்து வரும் தன் அன்பு குழந்தைகளிடம் ஒரு நிமிடம் பேசினார்.
நாளை எந்த செய்தி கேட்டாலும் அதை சுவாமி கொடுத்தது என்று எடுத்துகொள்ள வேண்டும் என்றார்.
வீட்டின் ஹால் பகுதிக்கு வந்த அவர் , பெரியவா படத்தையும் அதை அடுத்து இருக்கு,ம் காளி மாதாவின் படத்தையும் பார்த்து பூரண பக்தியோடு நமஸ்கரித்தார்.
இன்னிக்கு ஏகாதேசி. இன்று இந்த சோதனைக்கு உளாகி இருக்கேனே என்று வருத்தப்பட்டார்.
அவர்களை பார்த்து ஓரே போடாக போட்டு விடுங்கள்.வேறு ஒன்றும் என்னை செய்து விடாதீர்கள் என்று மனமுருக சொன்னார்.
பெரியவா படத்தை பார்த்து மனமுருகி வேண்டினார். தரையில் அவரை வேண்டி கொண்டே படுத்தார்.
அப்ப அந்த அதிசயம் நடந்தது.naxalites மேலே பார்த்தவர்கள் கண்ணுக்கு , பெரியவா போட்டோ இருந்த இடத்தில் பயங்கர உருவத்தோடு பவதாரிணி காட்சி கொடுத்தாள் .காளி பக்தர்கள் ஆன அவர்கள் திகைத்து போனார்கள்.
ஒரு காளி இருந்த இடத்தில இப்ப எப்படி ரெண்டாவது உக்ர காளி வந்தாள் என்று ஸ்தம்பித்து போனார்கள்.
காளியை மதிக்கும் அவர்கள் அந்த அம்மையாரையும் அம்பாள் ரூபமாக பார்க்க தொடங்கினர்.
"மன்னித்து விடுங்கள் தாயே" என்று எடுத்தனர் ஓட்டம்.
கணவர் வந்தவுடன் கண்ணீரை அடக்க முடியாமல் சொரிந்த அந்த மாது உடனே பெரியவாளை பார்க்க காஞ்சிக்கு புறப்பட்டார்.
மடத்தில் என்றும் போல அன்றும் ஒரே கூட்டம். வரிசையில் வந்த அந்த பெண்மணி பக்தி பெருக்கோடு கலங்கிய கண்களோடு பெர்யவாளை நமஸ்கரிக்க, "காமாக்ஷி காப்பதினாளா?" என்று ஒரே வார்த்தையில் நடந்தது எல்லாம் தனக்கு தெரியும் என்பதை உணர்த்தினார் அந்த பரப்ரஹ்மம்.
உண்மையான குரு பக்திக்கு என்றும் ஒரு குறையும் வராது.
|
Post your comments to Facebook |
Designed and maintained by AKR Consultants