Bookmark and Share 


Healthcare Tips
Parents Home
Couples Suit
Spiritual Path
Student's Corner
Youth Resort
Management
Lighter Moments
Entertainment
Serious Side
World Tour
Internet Links
Snippets

Tamil Software
அழகி மென்பொருள்
  
Tamil-English bilingual webmagazine dedicated to education of the masses through E-books, articles, worldwide informations, Slideshows,
Presentations on various subjects, photographs and images, moral and objective oriented stories and Lectures including audio and video

காலத்தில் அழியாத தமிழர் கலைவண்ணம்!
A Madurai temple sculpture

Courtesy: Kalakad Subramanian

காலத்தில் அழியாத தமிழர் கலைவண்ணம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆயிரம் கால் மாண்டபத்தில் உள்ள தூண் சிற்பம். இந்தப் பெண் சிற்பத்தில் மூன்று குழந்தைகளைத் தாங்கிக் கொண்டு நடக்கிறது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது, சிற்பியின் கற்பனைத் திறமையா? இல்லை தெருக்கூத்தாடிகளின் வாழ்க்கை முறையா என்பது தெரிவில்லை. அவள் கையில் ஒரு பனை ஓலையில் செய்யப்பட்ட கூடை போன்று வைத்துள்ளாள் அதில் அந்தக் கூடையை எங்கள் ஊரில் கடகா பெட்டி என்று பேச்சு வழக்கில் சொல்லுவார்கள். அதில் பனைஓலையின் வடிவம் செதுக்கப்பட்ட விதம், சிற்பியின் பொறுமையை என்னவென்று பாராட்டுவது? வார்த்தைகளே இல்லை! அந்த அளவுக்கு நுணுக்க வேலைப்பாடு. நீங்க அதை நேரில் சென்று பார்த்தல் நிஜமானதாகவே தோற்றம் அளிக்கும். அப்படி ஒரு தத்துருவமாக வடித்துள்ளார்.

அவள் மூன்று குழந்தைகளைத் தாயானவள் போலும், ஒரு குழந்தையைத் தன் தோள்பட்டையில் சுமந்து கொண்டும் மற்றொரு கைக்குழந்தையை நெஞ்சில் தன் துணியால் தொட்டில் போன்று கட்டிப் பாதுகாப்பாக வைத்துள்ளாள். இந்த வழக்க முறைகளை நான் குறவன் குறத்திகள் வாழ்கை முறையில் பார்த்துள்ளேன், இது செதுக்கப்பட்ட ஆண்டு 17 ஆம் நுற்றாண்டில். ஆனால் இன்று நகரப்புறங்களில்,, வெளிநாடுகளில் இதைக் கொஞ்சம் நவீனப்படுத்தி பெல்ட் போன்ற அமைப்பில் வடிவமைக்கப்பட்டு, குழந்தைகளைக் கொண்டு செல்கின்றனர், அந்தக் குழந்தை அவளின் மார்பில் பால் குடிப்பது போன்று உள்ளது, வெகுதூரம் நடக்கும்போது குழந்தை பசியால் அழாமல் இருக்க இப்படி யுத்தியை வைத்துள்ளாள் போல?

மூன்றாவது குழந்தை இன்னொருகையின் அரவணைப்பில் நடப்பது போன்று உள்ளது. இரண்டு குழந்தைகளுமே எதோ ஒன்றைக் கைகளில் வைத்து சாப்பிடுகின்றனர், மறுபக்கம் பனைஒலைப் பெட்டி தன் முழங்கையால் இருக்கப் பற்றிக்கொண்டும், கைவிரல்களால் அந்தக் குழந்தையையும் பாதுகாத்துக் கூட்டிச்செல்கிறாள்.

முன்பெல்லாம் சந்தை போன்ற அமைப்பு உண்டு. வாரத்தில் ஒருநாள் அனைத்துவிதமான பொருள்களும் அங்கு விற்பனைக்கு வரும்.கிராமங்களில் மக்கள் எல்லோரும் வீட்டுக்குத் தேவையானதை அன்றைக்கு வந்து வாங்கிச் செல்வர்கள், அப்போது தன் குழந்தைகளைக் கூட்டிக்கிட்டு வருவார்கள். குழந்தைக்குத் தேவையானதை வாங்கிக் கொடுத்துவிட்டு அவன் வெகுதூரம் நடக்க வேண்டும், அழாமலும் இருக்க வேணும் என்பதற்காக அவனுக்குப் பிடித்தமானதை வாங்கித்தருவார்கள் முட்டாய் அல்லது ரொட்டி எதோ ஒரு தீன் பண்டத்தைக் கொடுத்து வீடுவரைக்கும் நடந்து வருவார்கள், இதைப் போன்று கூட அந்த சிற்பம் சித்தரிக்கப்ட்டு வடிவமைக்கப்பட்டு இருக்கலாம். .

அன்பு மிகுந்த தாயின் வெளிப்பாடு சிற்பியின் உளிபட்டு இப்படி ஒரு உயிர் தோன்றல் இதுவும் ஒரு வகை பிரசவிப்பு தானே. சிற்பியின் மனதுக்குள் இருப்பதைக் கற்பனைக் கருவை மனசால் சுமந்து அதை ஒரு பாறையில் இருந்து பிரசவிக்கிறான். அது முழுமையடையும் பொது அதை அவன் பார்த்து எப்படி பூரித்துப் போயிருப்பன்! கற்பனை பண்ணிப்பார்த்தால் கூட நம் கண்களில் ஆனந்தக் கண்ணீர் தான் வரும்.

தூண்களை எல்லாம் தூக்கி நிறுத்திய பிறகே இந்த வேலையைத் தொடங்குவார்கள். சாரம் கட்டி எத்துனை நாள் பசியை மறந்தும் கூட இதை வடித்திருப்பான்? நிலைநிறுத்திய பிறகு சிற்பங்கள் செதுக்கும் பொது சேதம் ஆனாலும் தூணை அப்புறப்படுத்துவது என்பது இயலாத காரியம். சிற்பியின் முழு அற்பணிப்பும் இதுலையே அடங்கும். இதை முடித்த பிறகு கூட அவன் பெயரைக் கூட அதில் பொறிக்கவில்லை. அப்படிப் பட்ட சிற்பிகள் நம் தமிழ் நாட்டில் வாழ்ந்திருகிறார்கள். இந்த சிற்பங்கள், கலைகள் எல்லாம் நம் தலைமுறை வந்திருக்கிறது என்ற நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது.

இப்படி பட்ட ஒரு வேலைப்பாட்டை, நாம் பாதுகாக்க வேண்டும். நம் முன்னோர்களின் பெருமையை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டும் அதை எடுத்துச்சொல்ல நாம் என்றும் மறக்கக்கூடாது. இன்னும் ஆயிரம் தலைமுறைக்கும் நம் மண்ணின் பெருமையும்,திறமையும் அற்பனிப்பையும் சொல்ல வேண்டும் . சிற்பங்களை நாம் பாதுக்க வேண்டும், அதில் வண்ணம் பூசுவது, திருநீர் கொட்டுவது ,குங்குமம் கொட்டுவது, பரிட்சை எண்களை எழுதவது காதல் சின்னங்களைப் பொறிப்பது கூடாது. அப்படி நம் கண்முன்னாடி இது போல நடந்தாலும் அதை உடனே தட்டக் கேட்க வேண்டும். அவர்களிடம் நம் பெருமையை எடுத்துச் சொல்ல வெண்டும்

N. Govindarajulu

Tell A Friend!
Type In Your Name:
Type In Your Email:
Your Friend's Email:
Your Comments:

Receive copy:

PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:  

*E-mail:  

*Comments:


*Enter number in the text box below



Post your comments to Facebook




Designed and maintained by AKR Consultants