Bookmark and Share 


Healthcare Tips
Parents Home
Couples Suit
Spiritual Path
Student's Corner
Youth Resort
Management
Lighter Moments
Entertainment
Serious Side
World Tour
Internet Links
Snippets

Tamil Software
அழகி மென்பொருள்
  
Tamil-English bilingual webmagazine dedicated to education of the masses through E-books, articles, worldwide informations, Slideshows,
Presentations on various subjects, photographs and images, moral and objective oriented stories and Lectures including audio and video

இறைவனை அடைய உதவும் ஐந்து மார்க்கங்கள்!

Courtesy: KTR, Chennai

இறைவனை அடைய உதவும் ஐந்து மார்க்கங்கள்!

இந்து தர்மத்தில் இறைவனை அடைய ஐந்து மார்க்கங்கள் உண்டு; மற்ற மதங்களில் ஒரே ஒரு மார்க்கம் மட்டுமே உண்டு; ஐம்பூதங்கள் எனப்படும் நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகும். மனிதர்களின் பிறவி சுபாவங்கள் இந்த ஐந்தில் எதாவது ஒன்று இருக்கும்; சிலர் நிலம் போல ஆழ்ந்த பொறுமையோடு செயல்படுவர்; சிலர் நீர் போல ஓடிக்கொண்டே இருப்பர்; சிலர் நெருப்பு மாதிரி ஒவ்வொரு செயலிலும் செயல்படுவர்; சிலர் ஆகாயம் போல பரந்த மனப்பான்மையோடு இருப்பர்; இதில் பலர் ஏதாவது இரண்டு நிலைகள் உள்ள சுபாவத்துடன் பிறப்பதும் உண்டு.

ஐம்பூதங்களில் ஏதாவது ஒரு சுபாவத்துடன் பிறப்பவர்களுக்கு இறைவனை அடைய ஒரு வழிமுறை போதாது; எனவேதான் நமது முன்னோர்கள் ஐந்து மார்க்கங்களாக சரியை, கிரியை, யோகம், ஞானம், பக்தி என்று வகுத்துள்ளனர்.

சரியை என்றால் தினமும் பின்பற்ற வேண்டிய அனுஷ்டானங்கள்; தினமும் இரு முறை குளிப்பது; ஜீவகாருண்யம் எனப்படும் அசைவம் சாப்பிடாமல் வாழ்ந்து வருவதும்; மிருகங்களை பிறர் வதைக்காமல் தடுப்பதும்; தினமும் காக்கைக்குச் சாதம் வைத்தல்; அரிசி மாவினால் கோலம் போட்டு அதன்மூலமாக எறும்பிற்கு உணவிடுதல்; புரட்டாசி மாதம் முதல் பங்குனி மாதம் வரையிலான கால கட்டத்தில் மலையும் காடும் சார்ந்த ஆலயங்களுக்குச் செல்லும்போது ஐந்து கிலோ நவதானியங்களையும், ஒரு கிலோ டயமண்டு கல்கண்டையும் மனித காலடி படாத இடத்தில் தூவுதல்; செய்யும் தொழிலில் நேர்மையுடன் செயல்படுதல்; இல்லறத்தில் அதிதிகளை உபசரித்தல்; தினமும் தூங்கும் முன்பும்,தூங்கி எழுந்த உடனேயும் வலது கையை உற்று நோக்கி ஏதாவது ஒரு மந்திரம் ஜபித்தல், தினமும் பசுவுக்கு அகத்திக்கீரை அல்லது மஞ்சள் நிற வாழைப்பழங்கள் கொடுத்து வரலாம்;

கிரியை என்பது மந்திர- எந்திர- தந்திர முறைப்படி விக்கிரகங்களை வணங்கி வருவது; யாகங்கள் - யக்ஞ்சங்கள் செய்வது; கோவில்களில் திருவிழாக்கள் கொண்டாடுவது (அல்லது கொண்டாட பணம் செலவழிப்பது அல்லது கொண்டாட ஒருங்கிணைப்புப்பணியில் ஈடுபடுவது)

யோகம் என்பது ஆசனங்கள், சின் முத்திரைப பயிற்சி மற்றும் மூச்சுப் பயிற்சி மூலமாக பரமாத்மாவுடன் ஒன்றிணைதல்; மனவளக்கலை போன்ற தியான பயிற்சிகளில் தினமும் ஈடுபட்டு இல்லறத்தானாக இருந்தவாறே ஆன்மீக முன்னேற்றத்தில் ஈடுபடுதல்;

ஞானம் என்பது நான் யார்? நான் எதற்காகப் பிறந்தேன்? என்னால் இந்த உலகிற்கு என்ன பயன்? என்று தன்னைத் தானே மன விசாரணை மூலம் தன்னை அறிந்து கொள்ள முயலுதல்; அதற்குரிய ஆன்மீக நூல்களைத் தேடி தேடி வாசித்தல்; வாசித்து தகுந்த ஆன்மீக குருவைக் கண்டறிதல்; பிறகு அந்த ஆன்மீக குருவின் வழிகாட்டுதலின் படி நமது ஞான நிலையை உயர்த்த முயற்சி செய்தல்;

இவைகள் அனைத்தையும் விடவும் மிகவும் எளிமையானது பக்தி மார்க்கம் ஆகும்; மேலே கூறப்பட்டிருக்கும் சரியை - கிரியை- யோகம் - ஞானம் என்பவைகளுக்கு சில விதிமுறைகள் உண்டு; ஆனால் பக்திக்கு இப்படித்தான் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு எதுவும் கிடையாது; அவரவர் மனதுக்கு எப்படித் தோன்றுகிறதோ அப்படி உணர்ச்சி பூர்வமாக செய்வது தான் பக்தி. என்ன கஷ்டம் வந்தாலும், என்ன பெருமை வந்தாலும் என்னால் தான் வந்தது என்றோ அல்லது உடன் இருப்பவர்களால் வந்தது என்றோ கருதாமல் எல்லாம் நாம் வழிபடும் குலதெய்வமே காரணம் என்றோ சரணாகதிப்படி நினைத்துக் கொள்வது. சரியை - கிரியை - யோகம் - ஞானம் இவைகள் ஆன்மீகத்தில் ஓரளவு முன்னேறியவர்களுக்கு சரிப்பட்டுவரும்; நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களுக்கு பக்தி மார்க்கமே போதுமானது; நாம் இவைகளில் ஏதாவது ஒன்றைச் செய்யத் துவங்கும்போது எல்லோரும் வந்து பாராட்டுவார்கள் என்று நினைத்துவிடக் கூடாது; கிண்டலும் கேலியும் தான் முதலில் வரும்; பிறகு நம்மை இதைச் செய்ய விடாமல் தடுக்கவே பலர் இருப்பார்கள்; ஒருவேளை பாராட்டினால் அதை ஏற்றுக் கொள்ளக்கூடாது;

மனித மனம் பாராட்டுக்கு ஏங்கும்; அதுவும் கூட நம்மை பக்தி மார்க்கத்தில் முன்னேற விடாமல் தடுக்கும் என்பதை நினைவிற் கொள்ளுங்கள்;

பலர் ‘நான் இந்த சித்தரை சந்தித்தேன்;’ ‘அந்த சித்தரிடம் அடிக்கடி பேசுவேன்’ என்று சொல்வதைக் கேட்டு வருவீர்கள்;

நிஜத்தில் அப்படி யாராவது ஒருவர் ஒரு சித்தரிடம் அடிக்கடி பேசுபவராக இருந்தால் அவர் எவரிடமும் தன்னைப் பற்றி இப்படி தம்பட்டம் அடிக்கவே மாட்டார்; பரம ரகசியமாக வைத்துக் கொள்வார்.

ஓம்ஹரிஹரிஓம்
ஓம்ஹரிஹரிஓம்
ஓம்ஹரிஹரிஓம்

Tell A Friend!
Type In Your Name:
Type In Your Email:
Your Friend's Email:
Your Comments:

Receive copy:

PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:  

*E-mail:  

*Comments:


*Enter number in the text box below



Post your comments to Facebook




Designed and maintained by AKR Consultants