Bookmark and Share 


Healthcare Tips
Parents Home
Couples Suit
Spiritual Path
Student's Corner
Youth Resort
Management
Lighter Moments
Entertainment
Serious Side
World Tour
Internet Links
Snippets

Tamil Software
அழகி மென்பொருள்
  
Tamil-English bilingual webmagazine dedicated to education of the masses through E-books, articles, worldwide informations, Slideshows,
Presentations on various subjects, photographs and images, moral and objective oriented stories and Lectures including audio and video

விநாயகர் தரிசனம், தோஷ விமோசனம்

Courtesy: KTR, Chennai

விநாயகர் எளிய கடவுள். இவரை வணங்கிட கட்டுப்பாடோ, கடுமையான நியமங்களோ கிடையாது.

நாம் மேற்கொள்ளும் எந்த காரியமாக இருந்தாலும் விக்னங்கள் ஏற்படாமல் தடைகளில்லாமல் நடைபெற முதலில் விநாயகரை வணங்குவதுதான் நம் மரபு. ...

தேவர்களானாலும் சரி, இறைவனே ஆனாலும் சரி, விநாயகரை துதிக்க மறந்து, செயல்களில் ஈடுபட்டு அதனால் பட்ட அவஸ்தைகளை பல புராணங்களில் பார்க்கலாம். முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதுபோல் விநாயகரை வணங்காது செய்வது என்பது செயலை முழுமைப்படுத்தாது.

விநாயகரை வணங்க வெற்றி நிச்சயம். இப்படி வெற்றி தரும் விநாயகரின் சில தலங்களை இங்கே தரிசிப்போம்.

சுகப்பிரசவம் அருளும் புத்தூர் சீலைப் பிள்ளையார்

விநாயகரின் பெயரால் நெடுங்காலமாக ஓர் ஊர் அழைக்கப்படுகிறது என்றால் நீங்கள் ஆச்சரியம் அடைவீர்கள். திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா காட்டுப்புத்தூர் அருகே அமைந்துள்ள சீலைப்பிள்ளையார்புத்தூர் என்ற இடம்தான் அது.

காவிரிக் கரையில் சிறு ஆலயத்தில் எளிய கோலத்தில் காட்சி அளிக்கிறார் இந்தப் பிள்ளையார். பொதுவாக விநாயகருக்கு ஆடையாக துண்டு, வேஷ்டி, பட்டு வஸ்திரம் அணிவிப்பது வழக்கம். ஆனால், இவருக்கு சேலையை வஸ்திரமாக அணிவிக்கிறார்கள்.

இதனாலேயே இந்த ஊருக்கு சீலைப்பிள்ளையார்புத்தூர் என்ற பெயர் வந்ததாம். இவ்வூரைச் சேர்ந்த மக்கள் விநாயகரை தாயாக நினைத்து வணங்கி வந்துள்ளனர்.

இந்த விநாயகரை வேண்டிக் கொண்டால் பெண்களுக்கு சுகப்பிரசவம் நிகழ்த்தித் தருகிறார்; தாயும், சேயும் ஆரோக்கி யத்துடன் திகழ அருள்புரிகிறார் என்று இப்பகுதி பக்தர்கள் நம்புகின்றனர்.

தங்கள் வேண்டுதல் நிறைவேறி யவுடன், சீலைப் பிள்ளையாரை தாயாக நினைத்து பட்டு சித்தாடை கட்டி மோதகம் படைத்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்து வதை வழக்கமாக கொண்டிருந்துள்ளனர்.

ஒரு காலத்தில் மூன்று கால பூஜையும், விளக்கேற்றப்பட்ட ஒளியும் விநாயகரின் அருட் கடாட்சமும் நிறைந் திருந்த இடம் இன்று கவனிப்பார் இல்லாமல் களையிழந்து காணப்படுகிறது.

பெண்களின் மறுபிறப்பான பேறு கால சிரமத்தை போக்கும் சீலைப் பிள்ளையாருக்கு உரிய மரியாதையையும், பராமரிப்பையும் அளிக்க வேண்டும் என்பது பக்தர்களின் விருப்பமாக உள்ளது.

நவகிரக தோஷங்கள் அகற்றும் காருகுடி கற்பக விநாயகர்

விநாயகரை வழிபட்டால் நவகிரகங்களை வழிபட்டதற்கு சமமாகும். அந்த வகையில் திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா, தா.பேட்டை அருகே உள்ள காருகுடி கிராமத்திலுள்ள கைலாசநாதர் ஆலயத்தில் அருளும் கற்பக விநாயகரை வழிபட்டால் அனைத்து தோஷங்களும் விலகுகின்றன.

ஆனைமுக விநாயகர் நவகிரகங்களை உள்ளடக்கியவர். கண்கள் சூரியனாகவும், தும்பிக்கை சந்திரனாகவும், செவி செவ்வாயாகவும், நெற்றி புதனாக வும், நாபிக்கமலம் குருவாகவும், திருக்கரங்கள் சுக்கிரனாகவும், திருப்பாதங்கள் சனியாகவும், தொடைகள் ராகு, கேதுவாகவும் விளங்குகின்றன.

பெரும்பாலான ஆலயங்களில் விநாயகரின் பார்வை பூமியை நோக்கியபடி இருக்கும். ஆனால், இந்த காருகுடி விநாயகரோ ஆகாயத்தைப் பார்த்திருக்கிறார். இவருக்குப் பட்டு வஸ்திரம் அணிவித்து வழிபட்டால் கிரக தோஷங்கள் விலகும்; எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும்.

நல்லெண்ணையில் எள் கலந்து விளக்கிடுவதன் மூலம் அனைத்து பிரச்னைகளும் அகலும் என்று கூறுகின்றனர். இளம் பச்சை மற்றும் இளம் கருப்பு நிறம் கொண்ட ஒரே கல்லினால் ஆன விநாயகரின் உருவம் இது. கிரக தோஷ பாதிப்புக்குள்ளானவர்கள் இந்த காருகுடி கற்பக விநாயகரை தரிசித்து பலன் பெறலாம்.

தடைகளை தகர்க்கும் தாத்தையங்கார் பேட்டை ராஜயோக கணபதி

வாழ்வில் எதிர்பாராமல் ஏற்படும் இடர்பாடுகளையும், இன்னல்களையும் போக்க வல்லவர் திருச்சி மாவட்டம், தாத்தையங்கார்பேட்டை காசி விஸ்வநாதர் ஆலயத்தில் அருளும் ராஜயோக கணபதி.

ஆஜானுபாகுவாக திரண்ட தோள்களும், பெரிய தொப்பையும், மடித்து அமர்ந்திட்ட கால்களும், ஞான நிஷ்டையுடன் கூடிய பார்வையுடனும் அருள்கிறார். நீத்தார் கடனை சரிவர நிறைவேற்றாதவர்களுக்கு சில சிரமங்கள் ஏற்படலாம்.

அந்த சிரமங்களில் இருந்து விடுபட ராஜயோக கணபதியை வழிபட்டால் சிரமங்கள் அகலும். பருத்தியினால் ஆன வெண்மை நிற வஸ்திரத்தை இந்த விநாயகருக்கு அணிவித்து வழிபடுவது சிறப்பு.

ஆயுள் பலத்தையும், புத்திர பாக்கியத்தை கொடுத்து பிதுர் தோஷத்தையும் போக்க வல்லவர் இவர். ஆறடி உயர அழகிய சிற்பம் இது. பிராகார கருவறையினுள் விநாயகர் சிலை வைக்கப்பட்ட பின்னர்தான் சுற்றுச்சுவர் கட்டப்பட்டதாகத் தெரிவிக்கின்றனர். ராஜயோக கணபதியை வணங்கி வழிபட்டு வளம் பல பெறலாம்.

மனித முகத்துடன் அருளும் ஆதிவிநாயகர்

கணபதியை யானை முகத்துடனும் மூஞ்சுறு வாகனத்துடனும் பார்த்திருப்போம். ஈசன் மனைவி பார்வதிதேவியின் மைந்தனான கணபதி திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா புளியஞ்சோலையில் இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் ஆதிவிநாயகர் என்ற பெயரில் மனித முகத்துடன் யாளி வாகனத்தில் அமர்ந்த நிலையில் பக்தர்களுக்கு அருள்கின்றார். மிகவும் அரிதான கோலத்தில் காட்சி அளிக்கும் ஆதி விநாயகர் துயரங்களை கலைவதிலும் முதல் நாயகனாக விளங்குகிறார்.

Tell A Friend!
Type In Your Name:
Type In Your Email:
Your Friend's Email:
Your Comments:

Receive copy:

PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:  

*E-mail:  

*Comments:


*Enter number in the text box below



Post your comments to Facebook




Designed and maintained by AKR Consultants