Bookmark and Share 


Healthcare Tips
Parents Home
Couples Suit
Spiritual Path
Student's Corner
Youth Resort
Management
Lighter Moments
Entertainment
Serious Side
World Tour
Internet Links
Snippets

Tamil Software
அழகி மென்பொருள்
  
Tamil-English bilingual webmagazine dedicated to education of the masses through E-books, articles, worldwide informations, Slideshows,
Presentations on various subjects, photographs and images, moral and objective oriented stories and Lectures including audio and video

தீக்குள் விரலை வைத்தால்

Courtesy: A.V. Ramanathan, Chennai

'தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா-நின்னைத்
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா'

அமரகவி பாரதியின் 'காக்கை சிறகினிலே' பாடலின் மேற்கூறிய வரிகள் தரும் பொருள் என்ன? பாரதி ஏன் அப்படி பாடினார்? கண்ணனை தொடும்போதோ, நெருங்கும்போதோ கிடைக்கும் சுகானுபவத்தை வர்ணிக்க, சிறுகுழந்தையின் பட்டுக்கன்னம், பாதங்கள், அழகிய மலர்கள், பனிக்கட்டி, அருவி நீர் என்று எத்தனையோ பிடித்தவற்றை தொடும் சுகானுபவத்தோடு ஒப்பிடுவதை விட்டுவிட்டு, விரலை கொடூரமாக சுடவைக்கும்,கருகிப்போகவைக்கும் தீயைத் தீண்டும் பெருந்துயரமான அனுபவத்தோடு ஏன் ஒப்பிட்டார்? அதுவும் தீயை மேலாக தொடும் அனுபவம் இல்லை, தீக்குள் விரலை விடும் பயங்கர அனுபவம்! இதற்கு மேலெழுந்தவாறே பொருள் கொண்டால், கண்ணன் தீயைப்போல உஷ்ணமயமானவன்,நெருங்குவதற்கு ஆபத்தானவன் என்ற பொருள் வருகிறது. அதே சமயம் அதில் இன்பம் தோன்றுவதாக பாரதி சொல்வதை பார்த்தால், அவர் தீக்குள் விரலை வைப்பது எப்படி மகிழ்ச்சியை கொடுக்கும் அனுபவமாகும் என்ற கேள்விக்கு பாமரத்தனமான எண்ண ஓட்டத்தில் விடை கிடைக்காது. ஆழ்ந்து சிந்திப்போம்.

ஒரு உண்மையான பக்தன், கண்ணனாகிய இறைவன் என்றும் தன்னோடுதான் இருக்கிறான் என்ற பக்தி உணர்வோடு இருப்பதாலும், துயரமான அனுபவத்தை சந்திக்கும்பொழுது இறைவனை சரணாகதி உணர்வோடு நெருங்கி பற்றிக்கொள்ளுவதாலும், தீக்குள் விரலை விடும் துயர அனுபவத்தில், கூடவே துணை நின்று காக்க வரும் கண்ணனையே தீண்டும் மனதிற்கினிய ஆன்மிக அனுபவம் கிடைத்ததாக பழுத்த ஆன்மிகவாதி பாரதி இங்கு பாடிக்களிக்கிறார். இதுதான் உண்மை! பாரதி ஆன்மிக ரசனையோடும், இலக்கிய ரசனையோடும் இனிய தமிழில் பாடிய இந்த அதிசய வரிகள் என்றும் நம்மை பரவசத்தில் ஆழ்த்தி நல்வழிப்படுத்தும்!

(சுதா சேஷய்யனின் சொற்பொழிவில் கேட்டு ரசித்தது)

-ஏ.வி.ராமநாதன்,
சென்னை

Tell A Friend!
Type In Your Name:
Type In Your Email:
Your Friend's Email:
Your Comments:

Receive copy:

PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:  

*E-mail:  

*Comments:


*Enter number in the text box below



Post your comments to Facebook




Designed and maintained by AKR Consultants