- ஆருத்ரா தரிசனம்
Courtesy: K. Thiagarajan, Mumbai
ஆர்த்ரா என்றால் நனைதல் என்று பொருள்.சிவபிரான் அருள் மழையில் மக்கள் நனையும் நாள் இது. பதஞ்சலி, வியாக்ரபாதர் என்கிற இரு பக்தர்களுக்காக சிதம்பரத்தில் நடராஜர் ஆனந்தத் தாண்டவம் ஆடிய புனித தினம். கன்னிப்பெண்களுக்கு எண்ணெய் தேய்த்து நீராட்டி, நுனி இலையில் களியும், தாளகமும் இட்டு சாப்பிடச் செய்த பிறகே பிறர் சாப்பிடுவது மரபு.
நடராஜர் காலடியில் உள்ள முயலகன் போல் அஹந்தை கொண்டு புத்தி தடுமாறி நடப்பவரை சித்ஸபேசன் அடக்கி ஒடுக்கி களியாக்கி விடுவார் என்பதையும், அடியார்களுக்கு களிப்பைத் தருவார் என்பதையும் குறிக்க களி தரப்படுகிறது.
கறுப்பு என்பது சனியின் நிறம்.
இன்றும் ஆலயங்களில் ஆருத்ரா தரிசனத்தன்று சனி உபாதையிலிருந்து நீங்க கறுப்பு மை பிரஸாதமாக வழங்கப்படுகிறது.
With warm Regards,
K. Thiagarajan
|
|
Post your comments to Facebook |
Designed and maintained by AKR Consultants

