Bookmark and Share 


Healthcare Tips
Parents Home
Couples Suit
Spiritual Path
Student's Corner
Youth Resort
Management
Lighter Moments
Entertainment
Serious Side
World Tour
Internet Links
Snippets

Tamil Software
அழகி மென்பொருள்
  
Tamil-English bilingual webmagazine dedicated to education of the masses through E-books, articles, worldwide informations, Slideshows,
Presentations on various subjects, photographs and images, moral and objective oriented stories and Lectures including audio and video

குப்பைகளை சேகரிக்க புது வெப்சைட்

Courtesy: S S Mani, kalakad

குப்பைகளை கொட்டுவது எங்கே என்று தவித்து வந்த தமிழக மக்களுக்கு நற்செய்தியாக, குப்பைகளை வீட்டிலேயே வந்து வாங்கி செல்ல வசதியாக ஒரு வெப்சைட் துவக்கப்பட்டுள்ளது. குப்பைகளை வீ்ட்டில் வந்து வசூலிக்க எந்த கட்டணமும் வசூலிக்கப்படுவது இல்லை என்பதுதான் இதில் விசேஷம்.

காய்கறி கழிவுகள், பழைய பேப்பர்கள், தேவையற்ற பொருட்கள் என்று வீடுகள், அலுவலகங்கள், கடைகளில் உருவாகும் கழிவுகள் ஏராளம். கழிவுகளை சேகரித்து அவற்றை அப்புறப்படுத்த அரசு பல திட்டங்களை திட்டி அதற்காக பணியாளர்களையும் நியமித்து உள்ளது.

ஆனாலும் குப்பைகள் முழுமையாக நீக்கப்பட்டது என்று கூற முடியவில்லை. சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட மாநகராட்சிகளை சேர்ந்த பல பகுதிகளில் சேகரமாகும் குப்பைகள் சேகரிக்கப்படுவதில்லை என்று குற்றசாட்டு மக்களிடையே வலுத்து வருகின்றது.

இந்த நிலையில் குப்பைகளை சேகரிப்பதற்காக தனி வெப்சைட் ஒன்று துவக்கப்பட்டு உள்ளது. நெல்லை மாவட்டம் ராதாபுரத்தை சேர்ந்த ஜெகன், அவரது மனைவி சுஜாதா உள்ளிட்டோர் இந்த வெப்சைட்டை துவக்கி உள்ளனர்.

எம்.சி.ஏ. பட்டதாரிகளான ஜெகனும், சுஜாதா துவக்கி உள்ள இந்த வெப்சைட், வீ்டுகளில் சேகரமாகும் பழைய பொருட்கள், பால் பாக்கெட் கவர்கள், பழைய செய்தித்தாள்கள், பிளாஸ்டிக் கவர்கள், இரும்பு, அலுமனியம் கழிவுகளை உள்ளிட்டவற்றைப் பெற்று, நெல்லையில் உள்ள பல குடோன்களில் சேகரிக்கிறது.

இந்தப் புதிய நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக சுஜாதா செயல்படுகிறார். கடந்த மாதம் 11ம் தேதி துவக்கப்பட்ட இந்த நிறுவனத்தைச் சேர்ந்த பணியாளர்கள், ஒவ்வொரு வீடாகச் சென்று குப்பைக் கழிவுகளைச் சேகரித்து வருகின்றனர். குப்பைகளைத் தரும் வீட்டினருக்கு ஊக்கத் தொகையையும் அளிக்கின்றனர்.

இது குறி்த்து ஜெகன் கூறியதாவது:

"நாங்கள் எந்தக் காரியத்தையும் புதுமையாகவும், சிறப்பாகவும் செய்ய விரும்புகிறோம். அதற்காக இந்த வெப்சைட் சேவையைத் துவக்கி உள்ளோம். இந்தியாவில் குவியும் குப்பைகளை அகற்றத் தகுந்த நிறுவனம் எதுவும் செயல்படுவதாகத் தெரியவில்லை. இலவசமாகச் செய்யும் இந்த சேவைக்கு நாங்கள் எந்தக் கட்டணமும் வசூலிப்பதில்லை. எங்களின் கிளைகள் சென்னை அசோக் நகர், மேற்கு மாம்பலம், கோடம்பாக்கம், வளசரவாக்கம், கே.கே. நகர் பகுதிகளில் செயல்படுகின்றன. எங்கள் நிறுவனத்தின் கிளைகளை மேலும் விரிவுப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். இந்த இணையதளத்தில் பெயர்களைப் பதிவு செய்வது இலவசம். இதுவரை எங்களிடம் 150 பேர் பெயர்களைப் பதிவு செய்து உள்ளனர்." என்றார்.

உங்களது குப்பைகளை ஒப்படைக்க இங்க போங்க: kuppathotti.com

Tell A Friend!
Type In Your Name:
Type In Your Email:
Your Friend's Email:
Your Comments:

Receive copy:

PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:  

*E-mail:  

*Comments:


*Enter number in the text box below



Post your comments to Facebook




Designed and maintained by AKR Consultants