Bookmark and Share 


Healthcare Tips
Parents Home
Couples Suit
Spiritual Path
Student's Corner
Youth Resort
Management
Lighter Moments
Entertainment
Serious Side
World Tour
Internet Links
Snippets

Tamil Software
அழகி மென்பொருள்
  
Tamil-English bilingual webmagazine dedicated to education of the masses through E-books, articles, worldwide informations, Slideshows,
Presentations on various subjects, photographs and images, moral and objective oriented stories and Lectures including audio and video

இன்று ஒரு செய்தி
நாசாவுக்கே தண்ணி காட்டும் திருநள்ளாறு

Courtesy: Ananthu, Chennai

இன்று பல நாடுகள் செயற்கை கோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு, உளவு என பல்வேறு காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கை கொள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் போது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிட்டது. எந்தவித பழுதும் அதன் செயற்கை கோளின் கருவிகளில் ஏற்படவில்லை. இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்தை அளித்தது.

இது எப்படி சாத்தியம்? என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு, நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது. ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின் – தமிழ்நாடு அருகிலுள்ள புதுச்சேரி – திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பநேஷ்வரர் கோவிலுக்கு மேல், நேருள்ள வான்பகுதியை கடக்கும் 3 வினாடிகள் மட்டும் ஸ்தம்பித்துவிடுகின்றன. அப்படி நிகழ்வதற்கு என்ன காரணம்?

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலக்கதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்துகொண்டே இருக்கிறது. 2 ½ வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின்போது இந்த கருநீலகதிர்களின் அடர்த்தி (intensity) மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கை கோள்கள் இந்த கருநீலக்கதிர்கள் பாயும் பகுதிக்கு நுழையும் போது ஸ்தம்பித்துவிடுகின்றன. அதே நேரத்தில் அந்த செயற்கைக்கோள்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுவதில்லை.

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், இந்த கோவில்தான் இந்துக்களால் சனிபகவான் ஸ்தலம் என்று போற்றப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு நாசாவிலிருந்து பலமுறை திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர். மனிதனை மீறிய ஷக்தி உண்டு என்பதை உணர்ந்தனர். அவர்களும் சனிபகவானை கையெடுத்து கும்பிட்டு உணர்ந்தனர். இன்று வரை விண்ணில் செயற்கைக்கோள்கள் திருநள்ளாறு பகுதியை கடக்கும் போது ஸ்தம்பித்து கொண்டேயிருக்கிறது. இந்த செய்தியை கேட்டு ப்ரமிக்காதவர்கள் கூட நம்முடைய முன்னோர்களின் அறிவின் ஆழத்தை எண்ணி, கட்டாயம் பிரமித்தேயாக வேண்டும். நவீன உலகில், நாம் விஞ்ஞானத்தின் உதவி கொண்டு, பல செயற்கைக்கோள்கள் கொண்டு, கண்டறியும் சனிக்கோளின் கதிர்வீச்சு விழும் பகுதியை, நம் முன்னோர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன், எவ்வித தொழில்நுட்பத்தின் துணையுமில்லாமல், துல்லியமாக கண்டுபிடித்து, அதற்கென ஒரு கோயிலையும் கட்டி, கதிர்வீச்சுகள் அதிகம் விழும் நாட்களையும் கணக்கிட்டு, அதற்கான நாளை சனிப்பெயர்ச்சி என்று அறிவித்த, நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட நம் முன்னோர்களை நினைத்து, நாம் வியப்பின் உச்சிக்கே செல்வோம் என்பதில் ஐயமில்லை.

இதை விஞ்சும் வகையில் ஒரு விஷயம் உங்களுக்காக! நீங்கள் ஏதாவது சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே நவக்ரஹங்களை நன்றாக கவனியுங்கள். அந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டுள்ள துணிகளையும் நன்றாய் உற்று பாருங்கள்! உங்கள் அறிவியல் அறிவையும் கொஞ்சம் தட்டி விடுங்கள்.

எந்த கோள் எந்த நிறத்தில் இருக்குமென்பதை நம் முன்னோர்கள் கட்டிவைத்திருக்கும் அந்த துணிகளில் கண்டறியுங்கள், பிரமித்து போவீர்கள் பெரியோர்களின் அறிவாற்றலை நினைத்து. இந்த அறிவியலின் அதிசயத்தை அனைத்து தலைமுறையும் அறிய வேண்டும். அதற்காக அவர்கள் நம்மை பின்பற்ற வைத்ததுதான் கடவுள் மார்க்கம் என்றே நான் எண்ணுகிறேன். எது எப்படியோ? நமது முன்னோர்கள் நம்மை விட பன்மடங்கு கில்லாடிகள்!

RAJASEKAR

Tell A Friend!
Type In Your Name:
Type In Your Email:
Your Friend's Email:
Your Comments:

Receive copy:

PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:  

*E-mail:  

*Comments:


*Enter number in the text box below



Post your comments to Facebook




Designed and maintained by AKR Consultants