- பயனுள்ள குறிப்புகள்
Courtesy: Anantha Narayanan, Chennai
பயனுள்ள குறிப்புகள்
01) தினசரி சில துளசி இலைகளை மென்று தின்று தண்ணீர் குடித்து வர தொண்டைப் புண் வராது.
02) துளசி இலையை தினசரி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் ரத்த ஒட்டம் சீராகி ரத்தம் சுத்தமாகும்.
03) தினமும் மோரில் எலுமிச்சைப்பழத்தை பிழிந்து குடித்து வந்தால் சிறுநீர் பிரச்சினைகள் வராது.
04) புதினா, மல்லி, கருவேப்பிலை ஏதாவது ஒன்றை துவையல் செய்து தினசரி சாப்பிட்டால் சோம்பல் என்ற பேச்சே வராது.
05) இஞ்சியானது உடல் சூட்டை அதிகமாக்கி, உடலின் கொழுப்பைக் கரைக்க உதவுகிறது.
06) பூண்டானது இதய நோய் வருவதை தடுக்கும்; சிறுநீரை உடலில் இருந்து வெளியேற்றுவதற்க்கும், உடலை இளைக்கவும் வழி செய்கிறது.
07) காலையிலும், இரவு படுக்கப்போகும் கால்களை நன்றாக தேய்த்துக் கழுவி, விளக்கெண்னெய் அல்லது தேங்காய் எண்ணெயை பாதத்தில் தடவி வந்தால் பித்த வெடிப்பு மறையும்.
08) இரவில் படுக்க செல்லும்போது, கால்களை 5 நிமிடம் சுடுநீரிலும், பின்பு 5 நிமிடம் குளிர்ந்த நீரிலும் வைத்தால், கால் பாதங்களுக்கு ஏற்பட்ட சோர்வு நீங்கி விடும்.
09) தொடர்ந்து அதிக நேரம் படிக்கவோ, தொலைக்காட்சி பார்ப்பதோ, ஒரு பொருளை உற்று நோக்கவோ கூடாது. அடிக்கடி கண்களுக்கு அசைவு கொடுத்து கொண்டு இருக்க வேண்டும்.
10) கரிசலங்காண்ணி சாற்றை தேங்காய் எண்ணெய்யில் கலந்து தலை முடியில் தேய்த்து வந்தால் இளநரையை தடுக்கலாம்.
11) செம்பருத்தி இலையை நன்றாக அரைத்து தலையில் தேய்த்து குளித்தால், முடி பளபளவென இருக்கும்; மேலும் வந்த பொடுகையும் நீக்கும்.
12) அடிக்கடி பருக்கள் வந்தால் தினமும் காலையில் இளநீர் குடித்து வந்தால், உடல் சூடு தணிந்து பருக்கள் மறையும்.
13) சுக்கு, கொத்தமல்லி இலை இரண்டையும் இடித்து தூளாக்கி பாலில் கலந்து சாப்பிட்டால், உடலில் உள்ள ஊளைச் சதைகள் குறைந்து விடும்.
14) வாழை இலையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், முதுமை, முடி நரைத்தல், தள்ளாமை ஆகியவை காலம் தாழ்த்தியே வரும்.
15) பீட்ரூட்டை அடிக்கடி சமைத்து உண்டால், நரம்புகளுக்கு வலிமை உண்டாகும்; மேலும் மலச்சிக்கலையும் தடுக்கும்.
16) பருகும் நீர் மணமாகவும், சுவையாகவும் இருக்க அதனுடன் சிறிது துளசியை போட்டு வைக்கவும்.
17) சாதம் செய்யும் போது சிறு துளி எலுமிச்சம் பழ சாறை விட்டால், சாதம் பூப்போல இருக்கும்.
Designed and maintained by AKR Consultants

