- HANUMAN PRATHYAKSHA DHARSHAN
Courtesy: Lakshmi Ramachandran, Kalakad
தரிசனம்
இது ஒரு கட்டுகதையோ கற்பனையோ அல்ல. ரத்லம் என்கிற மத்ய பிரதேசத்தின் பிரதான ஊரில் காளி மாதா கோவிலில் போன மாதம் நடந்த ஒரு அதிசயமான நிகழ்ச்சி. ஒரு மகான் ராமாயண சொற்பொழிவு ஆற்றிகொண்டிருந்தார். அனுமானின் செயற்கரிய செய்கைகளை வர்ணித்து அனைவரும் மகிழ்ந்திருந்த வேளையில் ஆஞ்சநேயர் பிரத்யக்ஷமானார். லாங்கர் என்ற வகை பழுப்பு நிற கருநிற முகம் கொண்ட நீண்ட வால் குரங்கு ஒன்று மேடைக்கு வந்தது. உபன்யாசகர் அருகில் அமர்ந்து, அவர் தலையை தடவி ஆசிர்வதித்து அருகில் இருந்த ஸ்ரீ ராமர் படத்திற்கு நமஸ்காரம் செய்துவிட்டு தாவி சென்று விட்டது. இதை என்ன வென்று சொல்வது. எதோ ஒரு கம்ப்யூட்டர் கிராபிக் என்று கொள்வதா, இறைவன் இருக்கிறான், உண்டென்றால் உண்டு இல்லையென்றால் இல்லை என்று கொள்வதா? படம் பிடித்து அனுப்பியிருக்கிறார்கள். பாருங்களேன். ஒரு கதையும் கேளுங்கள். ஒரு சிற்பியிடம் ராஜா (பழையகாலத்து கிரீடம் வைச்ச ராஜா தான்) கேட்டான். "இந்த பெரிய பாறையை எப்படி ஸ்ரீனிவாச பெருமாளாக செய்கிறாய்?"
சிற்பி சொன்னான்: "ஸ்ரீனிவாச பெருமாள் பாறைக்குள்ளும் இருக்கிறார். வேண்டாத கற்களையெல்லாம் செதுக்கி எறிந்துவிட்டால் அவர் தானாகவே தோன்றுவார்."
The Sculptor
What a simple story with such a profound truth!
Man asked a sculptor: "How do you make such beautiful idols from stone?"
He replied: "Idols and images are already hidden there…
I only remove the unwanted stone!"
Moral:
Your happiness is hidden within you, just remove your worries!
Designed and maintained by AKR Consultants