Bookmark and Share 


Healthcare Tips
Parents Home
Couples Suit
Spiritual Path
Student's Corner
Youth Resort
Management
Lighter Moments
Entertainment
Serious Side
World Tour
Internet Links
Snippets

  
Tamil-English bilingual webmagazine dedicated to education of the masses through E-books, articles, worldwide informations, Slideshows,
Presentations on various subjects, photographs and images, moral and objective oriented stories and Lectures including audio and video

கடி கடி Jokes

Courtesy: A.V.Ramanathan, Mumbai

ஒரு மழை மாதிரி, நனையும் போது சந்தோஷம். நனைந்த பின்பு ஜலதோஷம்.

வாழை மரம் 'தார்' போடும் ஆனால் அதை வச்சு நம்மால 'ரோடு' போட முடியாதே!

கண்ணா நீ கல்யாணத்திற்கு முன்னாடி சூப்பர்மேன், கல்யாணத்திற்கு பின்னாடி ஜென்டில்மேன், பத்து வருஷத்திற்கு பிறகு வாட்ச்மேன், நாற்பது வருஷத்திற்கு பிறகு டாபர்மேன்.

நாய்க்கு நாலு கால் இருக்கலாம், ஆனால், அதால லோக்கல் கால், எஸ்.டி.டி. கால், ஐ.எஸ்.டி. கால் ஏன் ஒரு மிஸ்டு கால் கூடப் பண்ண முடியாது.

நண்பா நீ கம்ப்யூட்டர் முன்னாடி உட்காந்தா, அது என்ன நினைக்கும் தெரியுமா? Intel inside Mental outside!

சார், டீ மாஸ்டர் டீ போடறாரு, பரோட்டா மாஸ்டர் பரோட்டா போடறாரு, மேக்ஸ் மாஸ்டர் மேக்ஸ் போடறாரு, நீங்க ஹெட்மாஸ்டர் தானே ஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க?

இன்றய எxட்ரா...

பையன் 1: நம்ம பாட்டிக்கு நெறய பாய் பிரென்ட்ஸ் இரூக்காங தெரியுமா? பையன் 2: அப்படியா? பையன் 1: ஆமான்டா.. சக்குபாய், மீராபாய், ராதாபாய்...

பொங்கலுக்கு கவர்ந்மென்ட்ல லீவு குடுபாங்க. ஆனா இட்லி தோசைக்கு குடுப்பாங்களா?

கோலம் மாவில் கோலம் போடலாம். கடலை மாவில் கடலை போட முடியுமா?

சண்டே ஆனா சண்டைய போடலாம். மண்டே ஆனா மண்டைய போட முடியுமா?

train டிக்கெட் வாங்கி பிளாட்பார்ம்ல உக்காரலாம்; ஆனா பிளாட்போர்ம்கு டிக்கெட் வாங்கி ட்ரைன்ல உக்கார முடியாது!

குவார்ட்டர் அடிக்கும்போது எல்லாம் மயக்கம் வரும்; ஆனா மயக்கம் வரும் பொது எல்லாம் குவார்ட்டர் வராது.

Ticket வாங்கிட்டு உள்ள போரது சினிமா தியேட்டர்; உள்ள போயிட்டு டிக்கெட் வாங்குறது ஆபரேஷன் தியேட்டர்!

பொண்டாட்டி சமையல்

"என்னங்க இது கல்யாண மண்டபத்துல பொண்ணைக் காணோம்னு தேடிக்கிட்டு இருக்காங்க?" "நான்தான் அப்பவே சொன்னேனே. பொண்ணு இருக்கற இடமே தெரியாதுன்னு!"

"என் பொண்டாட்டி சமையலை வாயில வைக்க முடியாது; அவ பேச ஆரம்பிச்சா பைத்தியமே பிடிச்சிடும்." "யோவ், பாங்க்ல வந்து ஏன்யா இதையெல்லாம் சொல்றே?" "நம்ம கஷ்டத்தை சொன்னாதான் லோன் கிடைக்கும்னு சொன்னாங்க!"

"என்னங்க, ரசத்துல புளியே போடலை; ஒண்ணும் சொல்லாம சாப்பிடறீங்களே?" "நீ சமைக்கப் போறேன்னு சொன்னதே என் வயித்துல புளியைக் கரைச்ச மாதிரி இருக்கு. அதான்!" செருப்பு இல்லாம நாம நடக்கலாம் ஆனா, நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது.

இட்லி மாவை வச்சு இட்லி போடலாம். சப்பாத்தி மாவை வச்சு சப்பாத்தி போடலாம். ஆனா, கடலை மாவை வச்சு கடலை போட முடியுமா?

பஸ் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா பஸ்ஸு வரும். ஆனா, ஃபுல் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா ஃபுல்லு வருமா? நல்லா யோசிங்க! குவாட்டர் கூட வராது!

என்னதான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும், ஹீரோ ஹோன்டா, ஹீரோயின் ஹோன்டா ஆய்டாது! அதேமாதிரி, என்னதான் பசங்க வெண்டைக்காய் சாப்பிட்டாலும், லேடீஸ் ஃபிங்கர், ஜென்ட்ஸ் ஃபிங்கர் ஆய்டாது!

டிசம்பர் 31க்கும், ஜனவரி 1க்கும் ஒரு நாள்தான் வித்தியாசம். ஆனால், ஜனவரி 1க்கும், டிசம்பர் 31க்கும், ஒரு வருசம் வித்தியாசம். இதுதான் உலகம்.

பல்வலி வந்தால் பல்லை புடுங்கலாம், ஆனா கால்வலி வந்தால் காலை புடுங்க முடியுமா? இல்லை தலைவலி வந்தால் தலையைதான் புடுங்க முடியுமா? (டேய்! எங்க இருந்துடா கிளம்புறீங்க?)

பில் கேட்ஸோட பையனா இருந்தாலும், கழித்தல் கணக்கு போடும்போது, கடன் வாங்கித்தான் ஆகனும்.

கொலுசு போட்டா சத்தம் வரும். ஆனா, சத்தம் போட்ட கொலுசு வருமா?

பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும், ஃப்ரன்ட் வீல முந்த முடியாது. இதுதான் உலகம் (ஐயோ! ஐயோ! ஐயோ! காப்பாத்துங்க!)

T Nagar போனா டீ வாங்கலாம். ஆனால் விருது நகர் போனா விருது வாங்க முடியுமா?

என்னதான் பெரிய வீரனா இருந்தாலும், வெயில் அடிச்சா, திருப்பி அடிக்க முடியாது.

இளநீர்லயும் தண்ணி இருக்கு, பூமிலயும் தண்ணி இருக்கு. அதுக்காக, இளநீர்ல போர் போடவும் முடியாது, பூமில ஸ்ட்ரா போட்டு உரியவும் முடியாது.

உங்கள் உடம்பில் கோடிக்கணக்கான செல்கள் இருந்தாலும், ஒரு செல்லில் கூட ஸிம் கார்ட் போட்டு பேச முடியாது.

நிக்கிற பஸ்ஸுக்கு முன்னாடி ஓடலாம் ஆனா ஒடுற பஸ்ஸுக்கு முன்னாடி நிக்க முடியாது.

வண்டி இல்லாமல் டயர் ஓடும். ஆனால். டயர் இல்லாமல் வண்டி ஓடுமா?

இது மல்லாக்க படுத்துகிட்டு யோசிக்க வேண்டிய விஷயம். சைக்கிள் ஓட்டுறது சைக்கிளிங்னா, ட்ரெய்ன்

PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:  

*E-mail:  

*Comments:






Designed and maintained by AKR Consultants