- நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய்
Anand Prasad
Courtesy: http://drcet.org/
முதன் முதலாகத் தேர்தலைச் சந்தித்து, தோல்வியடைந்த நேரத்தில், பிராத்தனை கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார் அபிரஹாம் லிங்கன். கூட்டம் முடிந்ததும், “உங்களில் சொர்க்கத்துக்குச் செல்ல விரும்புவர்கள் மட்டும் கையை உயர்த்துங்கள்” என்றார் பாதிரியார். எல்லோரும் கையைத் தூக்க, அபிரஹாம் லிங்கன் மட்டும் பேசாமல் நின்றார். “அபிரஹாம்! நீ எங்கே போவதாக உத்தேசம்?” என பாதிரியார் கேட்க, தோல்வி அடைந்திருந்த அந்த மன நிலையிலும், “நான் செனட் உறுப்பினராகப் போகிறேன்” என்று உறுதியான குரலில் சொன்னார் அபிரஹாம். “நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய்” என புன்னகையுடன் ஆசி வழங்கினார் பாதிரியார்.
1809ம் வருடம் அமெரிக்காவின் சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்த லிங்கனை, “தோல்விகளின் செல்லக் குழந்தை” என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு தொடர் தோல்விகள் அவரைத் துரத்திக் கொண்டே இருந்தன. பிறந்த சில வருடங்களிலேயே தாயை இழந்தார். ஒரு கடையில் எடுபிடி வேலை பார்த்துக் கொண்டே இரவு நேரங்களில் மட்டும் பள்ளிப் பாடத்தை ஆர்வத்துடன் படித்தார். இளைஞனாகி, பக்கத்து நகருக்குப் போனபோது, அங்கே அடிமைகளை வியாபாரம் செய்யும் மனிதச் சந்தையைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். கறுப்பர்களின் அடிமை வாழ்க்கையைப் பற்றி அவர் கேள்விப்பட்டு இருந்தாலும் காய்கறி போல மனிதர்கள் விற்கப்படுவதை நேரில் கண்டதும் ரத்தம் சூடேற, லிங்கனுக்கு ஒரு புது லட்சியம் பிறந்தது. ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால்தான் இந்த அவலத்தை அகற்ற முடியும் என்று தெரிந்தும், அவசரமாக தனது 22வது வயதில் ஒரு நகராட்சி தேர்தல் வேட்பாளராக களம் இறங்கி, படுதோல்வி அடைந்தார். இந்த நேரத்தில், சொந்தமாகத் தொழில் தொடங்கி, அதில் பெரும் கடனாளியாக மாறியிருந்தார்.
சோர்ந்து போயிருந்த லிங்களை ஒரு போராளியாக மாற்றியது, அவரது வளர்ப்புத் தாய் சாரா புஷ். ‘ஆட்சிப பொறுப்புக்கு வரவேண்டும் என்றால், ஆசைப்படுவதைப் பெறுவதற்கான தகுதிகளை முதலில் வளர்த்துக்கொள்’. “நீ எதுவாக விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய்!” என்றார் சாரா புஷ். பாதிரியார் சொன்ன அதே வார்த்தைகள்!
இப்போது லிங்கனுக்கு தன் இலக்கு புரிந்தது. மனதில் தெளிவு பிறந்தது. அடிமை வியபாரத்தை சட்டம் போட்டுத்தானே ஒழிக்க முடியும்? எனவே, முழுமூச்சுடன் சட்டம் படிக்கத் தொடங்கினார் லிங்கன். மக்கள் மனதை மாற்றினால் மட்டுமே சட்டத்தை சுலபமாக அமல்படுத்த முடியும் என்பதால், சட்டப்படிப்புடன் பேச்சுத் திறமையையும் வளர்த்துக் கொண்டார். அடிமை ஒழிப்பைப் பற்றி ஊர் ஊராகக் கூட்டம் போட்டுப் பேசினார். ஒரு தலைவருக்கான தகுதிகளை வளர்த்துக் கொண்டு, 1834ல் நடந்த நகராட்சி உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். அதன்பின் நகராட்சித் தலைவர், மாமன்ற உறுப்பினர், செனட் உறுப்பினர், உபஜனாதிபதி, எனப் பல்வேறு பதவிகளுக்குப் போட்டியிட்டு சில வெற்றிகளையும், பல தோல்விகளையும் சந்தித்து 1860ம் வருடம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். ஆம், எதுவாக மாற நினைத்தாரோ, அதுவாகவே ஆனார் லிங்கன்!.
இல்வாழ்விலும் அவருக்குத் தோல்விகள்தான்! 1835ல் அவரின் காதலி ‘ஆனி’ விஷக் காய்ச்சலால் மரணம் அடைந்தார். 33வது வயதில் மேரியுடன் திருமணம் முடிந்து நான்கு குழந்தைகள் பிறந்தன. மூன்று குழந்தைகள் சிறுவயதிலேயே மரணமடைந்தார்கள். மனைவிக்கு மனநோய் இருந்தது. இத்தனைத் தோல்விகளையும் மன உறுதியோடு எதிர்கொண்டதால்தான், லிங்கன் வெற்றி பெற முடிந்தது.
அமெரிக்க ஜனாதிபதி ஆனதும், அதிரடி நடவடிக்கை எடுத்து அடிமை அவலத்தை ஒழித்து, மாகாணங்களை ஒன்று சேர்த்து, அமெரிக்காவைத் தலை நிமிரவைத்தார் லிங்கன். அந்தச் சாதனையால்தான், அடுத்த முறையும் அவரே மீண்டும் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1865ல் நாடகம் பார்த்துக் கொண்டு இருந்தபோது ஒரு நிறவெறியினரால் சுடப்பட்டு மரணம் அடைந்தார் லிங்கன்.
மணவாழ்க்கை பற்றி லிங்கன் கூறியது - மணவாழ்க்கை லிங்கனுக்கு அவ்வளவு உவப்பாக இல்லை. பிற்காலத்தில் தம் இல்லற வாழ்க்கை பற்றி குறிப்பிடும் போது “மண வாழ்க்கை மலர்ப் படுக்கை அல்ல; போர்க்களம்” என்று குறிப்பிட்டார்.
“நீ எதுவாக மாற விரும்புகிறாயோ அதுவாக மாறுவாய்” என்பது அபிரஹாம் லிங்கனுக்கு மட்டுமல்ல… நம்பிக்கையைத் தளரவிடாமல், லட்சியத்துக்காக விடாப்பிடியாக போராடும் நம்மைப்போன்ற ஒவ்வொருவருக்கும் அது வெற்றி திருமந்திரம்.
குறிப்பு: அபிரஹாம் லிங்கனை பற்றி முழுமையாக அறிய விரும்பினால் எமது உலகம் ஒரு பார்வை என்ற தலைப்பில் அபிரஹாம் லிங்கனின் வாழ்க்கை வரலாறு பற்றிய இந்த மின்புத்தகத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். (பதிவிறக்கம் செய்ய இங்கு சொடுக்கவும் – Download Here)
பசுமைப் புரட்சி: கோடான கோடி மக்களில் இப்படியும் ஒரு சிலர் பசுமைப் புரட்சி செய்கின்றனர். இவர்களைப் பற்றி அறிய இந்த மின் புத்தகத்தை பதிவிறக்கம் செய்யவும். (பதிவிறக்கம் செய்ய இங்கு சொடுக்கவும் - Download Here)
எமது முந்தைய தகவல் பற்றிய வாசகர்கள் கருத்து: அதிர்ஷ்டம் என்ற சொல் தமிழ் அல்ல.மேலும் அதிர்ஷ்டம் என்பதன் பொருள் குருட்டுத்தனம் என்பதாகும்.அதாவது திர்ஷ்டம் என்றால் பார்வை என்று பொருள்.அ திர்ஷ்டம் என்றால் பார்வையின்மை என்று பொருள். நம்மில் பலர் உழைப்புக்கு எதிரான இந்த சொல்லின் பொருள் அறியாமலேயே பயன்படுத்திவருகிறோம்.
உங்களின் பதில்: "தமிழ் நெஞ்சங்களுக்கான தமிழ் கருத்துரையாடல் வலைதளம்" துவக்கமாக நிறைய வாசகர்களால் கேட்கப்பட்ட இந்த கீழே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு கேள்விகளையும் http://tamilforum.kapsystem.com/ வலைதளத்தில் கொடுத்துள்ளோம். தங்களின் பதில்களை அளித்து அனைவரும் பயன் பெறுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். தங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் எமக்கு தெரியப்படுத்தவும். தங்களது கேள்விகள் பல்லாயிரக்கண்கான வாசர்களுக்கு தினம் ஒரு தகவல் மூலியமாக அனுப்பப்படும்.
1. தமிழில் தட்டச்சு செய்வது எப்படி?
2. Unicode Font என்றால் என்ன? இது எவ்வாறு தமிழ் எழுத்துறுக்களுடன் தொடர்புடையது?
குறிப்பு: தங்களது நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள், சகஊழியர்கள் என எவரேனும் இந்தச் சேவையை பெற விரும்பினால் தயவு செய்து அவர்களது மின்னஞ்சலை எமக்கு தெரியப்படுத்தவும். தெரியப்படுத்த வேண்டிய மின்னஞ்சல் ananthprasath@drcet.org | Subscribe | Unsubscribe .
அனுதினமும் ஆனந்தமாய் வாழ்ந்திட வாழ்த்துக்களோடு,
கொல்லிமலைச் சாரல் பொ. ஆனந்த் பிரசாத்
கல்விச் சேவை பற்றி அறிய மற்றும் எங்களது இந்த கல்விச் சேவைக்கு உதவி ஏழை குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்த்திட - DRCET
எம்மைப் பற்றி மற்றும் எமது முந்தைய தொகுப்புக்களை பற்றி அறிய - தினம் ஒரு தகவல்
எமது நிறுவனம் மற்றும் தொழில் பற்றி அறிய - Web Designing Company
Designed and maintained by AKR Consultants

