Bookmark and Share 


Healthcare Tips
Parents Home
Couples Suit
Spiritual Path
Student's Corner
Youth Resort
Management
Lighter Moments
Entertainment
Serious Side
World Tour
Internet Links
Snippets

Tamil Software
அழகி மென்பொருள்
  
Tamil-English bilingual webmagazine dedicated to education of the masses through E-books, articles, worldwide informations, Slideshows,
Presentations on various subjects, photographs and images, moral and objective oriented stories and Lectures including audio and video

நமக்குள் இராவணன்
Vishalam Raman

Courtesy: Vishalam Raman

வட இந்தியாவில் நவராத்திரியை "தசேரா" என்று கொண்டாடுகிறர்கள். இங்கு ஒரு பெரிய மைதானத்தில் {தில்லியில் ராமலீலா மைதானம்} இராமயணத்தை நாடகமாகப் போடுவார்கள் அதில் துளசி ராமாயணம் பெரிய பங்கு வகிக்கும். தஸ் ஹரா என்பது தசேராவாக மாறி இருக்கலாம். அதாவது பத்து தலைகளை மாய்ப்பது என்று பொருள் வரும். அந்தப் பத்து தலைகள் என்பது நம்மிடமே இருக்கின்றன. அதாவது பொறாமை, .கோபம், பேராசை, பற்று, வரட்டு கௌரவம், தன்னலம், குயுக்தி புத்தி, .வெறுப்பு, .வரம்பைத் தாண்டும் காமம், ஈகோ.

ஸ்ரீராமரும் இராவணனைக் கொல்ல தேவியை ஆயிரம் தாமரையால் பூஜித்தார். பூஜை முடியும் கட்டத்தில் தேவி விளையாட கடைசி தாமரையை ஒளித்து வைத்துக் கொண்டாள். ஸ்ரீராமார் கடைசிப் பூவைப் போட கண்களைத் திறந்து பார்த்தார். அது அங்கு இல்லாததால் மனம் மிகவும் வருத்தமுற்று "தேவி, இது என்ன சோதனை? பூஜை முடியும் தருவாயில் இப்படி ஆக வேண்டுமா? பரவாயில்லை என் தாய் என் கண்களைத் தாமரை மலருக்கு ஒப்பிடுவாள். ஆகையால் என் கண்ணைப் பிடுங்கி உனக்கு மலராகச் சம்ர்ப்பிக்கிறேன்" என்று சொல்லியபடியே தன் கண்களைப் பிடுங்க, ஒரு கை வந்து தடுத்து நிறுத்தியது. பாராசக்திதான் அவள். இதை மிக அழகாக சியாம்சரண் குப்த்ஜி என்பவர் ஸ்ரீராம் கி சக்தி பூஜா என்ற கவிதையில் சொல்லியிருக்கிறார் என நினைக்கிறேன்.

இதில் இராவணின் அழிவு என்பது மனதில் இருக்கும் ஆசாபாசங்களை அழித்து மனதை வெற்றி கொளவது. இதை மகிஷாசுரனின் அழிவிலும் பண்டாசுரனின் அழிவிலும் எடுத்துக் கொள்ளலாம். பஞ்சேந்திரியங்களைக் கட்டுப்படுத்தி ஞானத்தை வரவழைக்கும் செயல். மனதைக் கட்டுப்படித்தினால் தான் இயலும். மனம் ஒரு குரங்கு. தாவிக்கொண்டே இருக்கும் அந்தக் குரங்கைக் கட்டிப் போடுவது அவ்வளவு எளிதல்ல. அதற்கு அம்பாளின் அருளும் நாமஸ்மரணையும் வேண்டும். இடைவிடா நாமஜபத்தால் மெஸ்மரிசம் போல் இந்த மனக்குரங்கு கட்டப்பட்டு விடும்.

பாண்டிசேரி அன்னையை ஸ்ரீ அரவிந்தார் முத்தேவியின் ரூபமாகக் காண்கின்றார். மஹாலட்சுமி, மஹாசரஸ்வதி, மஹாகாளியின் ஸ்வரூபமாக சேர்ந்து மஹேச்வரியாகக் காட்சி அளித்தார். அந்த மஹேச்வரியின் படம் வீட்டில் இருநதால் மிகவும் நல்லது என்கிறார்கள் அன்னையின் பக்தர்கள்.

"ஆனந்தமயீ சைத்தன்யமையீ சத்யமயீ" என்று அன்னையை அழைப்பபர்கள். இதைப் பார்க்கப் பேரானந்தம் கிடைப்பது என்பது மனதிற்குள் இருக்கும் ஒளியைக் கண்டு பிடித்து சத்தியத்தின் பாதையில் நடப்பது என்று எனக்குத் தோன்றுகிறது.

Tell A Friend!
Type In Your Name:
Type In Your Email:
Your Friend's Email:
Your Comments:

Receive copy:

PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:  

*E-mail:  

*Comments:


*Enter number in the text box below






Designed and maintained by AKR Consultants