- சுவர்க்கம் எங்கே
Courtesy: Vishalam Raman
காலை நீட்டிய பாட்டி அருகே
காளையான பேரன் வந்தான்
குறும்புக்காரப் பேரன் அவன்
கும்மாளம் போடும் பேரன் அவன்
படிப்பைத் தவிர எல்லாம் உண்டு
பணிவு இல்லாமல் பேசுவதுண்டு
"பாட்டி, பாட்டி, ஒரு கேள்வி
பார்த்து அழகாய் பதில் சொல்லு
சுவர்க்கம் எங்கே இருக்கிறது?
சுவர்க்கம் போகும் வழியென்ன?
உயிருடன் சுவர்க்கம் போக வேண்டும்
உண்மை அங்கு விளங்க வேண்டும்'
"போடா போக்கத்தவனே!
போய்ப் பார் ஒரு ஞானியை.
அவர் நன்கு பதிலுறைப்பார்
அவர் உன் கண்ணைத் திறப்பார்"
பாட்டி சொல்லைத் தட்டாமல்
பாதை வழியே நடந்து வந்தான்
கண்டான் அங்கு ஒரு ஞானியை.
கண்கள் மூடிய தியானத்தை.
உடனே அவன் கேள்வியும் பிறந்தது
"உயிருடன் சுவர்க்கம் போக வேண்டும்
ஒரு வழி கூறுங்கள் சுவாமி"
ஒரு நிமிடம் ஞானி யோசித்தார்
ஒரு கிண்டல் இருப்பதை அங்குக் கண்டார்
"உன் அம்மா இருக்கும் இடம் செல்
உடனே அவளுக்குச் சேவை செய்.
அன்பொழுக அவளுடன் வார்த்தையாடு
அப்போதே உனக்கு சுவர்க்கம் தெரியும்.
அதுவே உயிருடன் சுவர்க்கம் போகும் வழி
அது ஒன்றுதான் சுவர்க்கம் திறக்கும் வழி.
Designed and maintained by AKR Consultants

