- உண்மையான ஆன்மீகம்
- கருவை இராமசாமி
இழிவு தான் கிடைக்கும் முடிவில் ...
துறவறம் இயற்கைக்கு மாறானது
பசி எடுக்கும் வயிற்றைப் பட்டிணி போடுவது
உடல் வருத்தி உயர்தவம் செய்வது
உண்மை நிலைதவறாத உத்தமராய் நடிப்பது
வேண்டாம் இந்த போலி வேஷம் ...
அவதாரப்புருஷன் மனிதனாய் அவதரித்தாலும்
இயற்கையோடுதான் வாழ்ந்தாக வேண்டும்
உண்பதும் காலைக்கடன் முடிப்பதும்
உலகில் வாழும் உயிர்களின் நியதி ...
வேண்டாம் இந்த போலி வேஷம் ...
வேண்டாம் இந்த நம்பிக்கை (மகான் - எதிர்பார்ப்பு)
சில பாதிரியார்களின் லீலைகள் பார்த்திருந்த போதிலும்
பல போலிச்சாமியார்களின் சாயம் வெளுத்த போதிலும்
காசாப்புக்காரனை நம்பும் நம் ஆட்டு ம(னிதர்)ந்தை கூட்டம்
என்றுமே மாறிவிடப்போவதில்லை ...
வழி தெரிந்தவர்கள் (குரு) வழிகாட்டலாம் - ஆனால்
அவரையே வழியென்று நினைப்பது நம் தவறு ...
மகான்கள் இயற்கைக்கு மாறாக இருக்க வேண்டும்
என்று நினைப்பது நம் தவறு ...
அவர்களும் மனிதர்கள்தான் என்று எண்ணும்போது
தவறாய்த் தெரியாது எதுவும் ...
சக மனிதர்களை மகான் என்று புகழவும் வேண்டாம் - பின்பு
மதிகெட்டவன் என்று இகழவும் வேண்டாம் ...
புரிந்துகொள்வோம் ... ஆன்மீகப் புனிதம் காப்போம் ...
கருவை இராமசாமி
Designed and maintained by AKR Consultants

