- நபிகள் நாயகம்
- Vishalam Raman
எல்லா மதங்களின் தலைவர்களும் அனபு, பொறுமை, சத்தியம், மனித நேயம் போன்றவைகளையே அறிவுறுத்தி இருக்கின்றனர்,.தவிர தானத்திற்கும் மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது, நபிகள் நாயகத்தின் அவதாரத்திற்கும் காரணம் இருந்திருக்கிறது, அவரால் இஸ்லாம் மதம் ஸ்தாபிக்கப்பட்டது. எந்த மகானாக இருந்தாலும் அல்லது மதத்தலைவராக இருந்தாலும் ஆரம்பத்தில் அவரது கொள்கைகளை பலர் ஆமோதிக்க சிலர் எதிர்ப்பும் தெரிவிக்கின்றனர். இது ஏசுதேவருக்கும் ஏற்பட்டது, சாக்ரடிஸ், ,ஆதி சங்கராசார்யார் போன்றவர்களும் இதை அனுப்வித்தனர்,
நபிகள் நாயகம் சொன்ன கொள்கைகளுக்கு எதிர்ப்புக்காட்டிய சிலர் அவர் மேலும் மேலும் வளர்வதைப் பார்த்து பொறாமையும் கொண்டனர். பலர் அவரைப்பற்றி உண்மைக்குப் புறம்பாகவும் பேசினராம். இதனால் அவர்மேல் வெறுப்புக்கொண்டு அவரை ஒதுக்கட்டும் என்ற கெட்ட எண்ணம் தான் காரணம்,
இப்படி வெறுத்த ஒரு அரபியன் பெண்மணி அவருக்குத் தொந்தரவு கொடுக்க நினைத்தாள். ஒவ்வொரு நாளும் அவள் வீட்டு வழியாக நபிகள் செல்வதைப் பார்த்தாள். அந்தத் தெருவில் ஒரு மஸ்ஜித் இருந்தது, அவள் வீட்டில் இருக்கும் குப்பைகளைச் சேமித்தாள். பின் அவர் போகும் போது அவர் மேல் விழும்படி அவைகளைக் கொட்டினாள்,.ஆனால் நபிகள் நாயகம் புன் முறுவலுடன் சாந்தமாக மேலே நடந்தார். இரண்டாவது நாள் இதே மாதிரி குப்பைகள் விழுந்தன, அவர் கண்டுக்கொள்ளவில்லை. அந்தப் பெண்மணிக்கு இவரது செய்கை மேலும் கோபத்தை வரவழைத்தது..தொடர்ந்து மேலும் சில நாட்கள் குப்பைகளை அவர் மேல் கொட்டினாள் .ஒன்றும் பலனில்லை.
மறு நாள் குப்பை அவர் மேல் விழவில்லை, இதே போல் மூன்று நாட்கள் குப்பை விழாமல் இருக்க நபிகள் கவலை கொண்டு அந்த வீட்டிற்குச் சென்றார். கதவைத் தட்டினார், பாதி திறந்தபடி கதவு இருந்தது,
"யார் வாசலில்? உள்ளே வாருங்கள்." என்ற குரல் கேட்க உள்ளே சென்றார், அங்கு சற்று வயது முதிர்ந்த பெண்மணி பட்டுக்கையில் படுத்திருந்தாள், உடல் வலி தாங்காமல் முனகினாள்.
"அம்மா நீங்கள் மிகவும் மெலிந்து வலியுடன் சிரமப்படுகிறீர்கள், எதாவது மருந்து சாபிட்டீரா?"
"ஒன்றும் இல்லை என்னைப் பார்த்துக்கொள்ள என் வீட்டில் ஒருவரும் இல்லை, நான் தனியாக இருக்கிறேன், என்னால் எழுந்திருக்கவும் முடிய்வில்லை"
"கவலைப்படாதீர்கள் நான் உங்களுக்குச் சேவை செய்கிறேன்" என்றபடி அவரின் உடலின் உபாதைகளைக் கேட்டிக்கொண்டு ஹகீமிடம் சென்று மருந்தும் வாங்கி வந்தார். பின்னர் மூன்று நாட்கள் மூன்று வேளைகள் இந்த மருந்தை எடுத்துக்கொள்ளுங்கள் சரியாகிவிடுவீர்கள்" என்றார்.
அந்த அம்மணி தன் செய்கைக்கு வருந்தி அழத்தொடங்கினாள். "எத்தனை பொறுமை, சகிப்புத்தனமை, அன்பு இந்த மாமனிதருக்கு!" என்று மனதில் நினைத்தபடி அவரிடம், ""ஐயா, நீங்கள் கடவுளேதான். நான் செய்த செயல்களுக்கு மன்னிப்பு கேட்கிறேன். எனக்கு நீங்கள் தான் அந்த இறைச்சக்தியை உணர வழி காட்டவேண்டும்."
"அம்மணி, எப்போதும் நல்ல தாயாக இருங்கள்..முழு நம்பிக்கையோடு கடவுளை அணுகுங்கள். வெறும் பிரார்த்னையைவிட அன்புடன் சேவை, எதிப்பார்ப்பு இல்லாத சேவையில் நம்மிடம் கடவுள் ஓடோடி வருகிறார். மனம் மகிழ்ந்து தானம் செய்தாலும் அவரைக் காண முடியும். தியாக்த்திலும் அவர் நம்முன் வந்து நிற்பார், இது போல் செய்து நாம் ஒரு அடி முன் வைக்க அவர் பத்து படிகள் முன் வைத்து நம்மைக்காண ஒடி வருவார்"
எல்லா நதிகளும் சங்கமிப்பது அந்தச்சாகரத்தில் தான். நபிகள் நாயகம் அவர்களின் பிறந்த நாளில் அவரை தொழுகிறேன்.
Designed and maintained by AKR Consultants


