- வம்ச விருட்சம்
- Vishalam Raman
முன்பு கூட்டுக்குடும்பம் இருந்ததால் குடும்பத்தினர் இதனால் பல பயன்களைப் பெற்றனர். முதலாவதாக சகிப்புத்தன்மையை வளர்க்க வாய்ப்பு கிடைத்தது, தவிர பொறுமை, ஒற்றுமை, பெரியோர்களிடம் மரியாதை, மனதிற்கு ஒரு பாதுகாப்பு, அனபு பரிமாற்றம், குடும்ப அங்கத்தினரிடையே பாசம், நிர்வகிக்கும் திறமை, leadership போன்ற தலைமை ஏற்கும் பொறுப்பு, வரும் வருமானத்திற்குத் தகுந்தபடி சிலவு செய்யும் வழக்கம், சிறுவர்களுக்கு கலாச்சாரத்துடன் கல்வி என்று பல அடிக்கிக்கொண்டே போகலாம். கூட்டுக்குடுமபத்தில் தீபாவளி கர்த்திகை போன்ற திருநாள் வந்தால் வீடே களைக்கட்டும்.
ஆனால் சிறு சுதந்திரத்திற்காக இன்று எல்லோரும் இதை இழ்ந்து நிற்கின்றனர், வடநாட்டில் சர்தார்ஜி குடும்பத்தில் இன்னும் கூட்டுக் குடும்பத்தைக் காண்கிறோம். இதே போல் குஜராத்தி வியாபாரகள் வீட்டிலும் ராஜஸ்தான் ஜெய்சல்மர் போன்ற இடத்திலும் எல்லா சகோதரர்களும் சேர்ந்தே வசிக்கின்றனர்.
நம் நாட்டில் பல இளைஞர்கள் வெளிநாடுகளுக்கும் சென்றுவிட்டதால் இப்போது இருக்கும் தலைமுறைகளுக்கு எது குலதெய்வம் என்றும் தெரிவதில்லை, தவிர கலப்புத் திருமணமும் அதிகமாகிவிட்டதால் இதில் அதிக அளவு அக்கறை காட்டுவதுமில்லை. அவர்களது தாத்தா பாட்டி இருக்கும் வரை கோயில் பூஜை, குலதெய்வ வழிபாடு என்று நடந்திருந்து பின் விட்டுப்போயிருக்கலாம். தற்போது இருக்கும் இளைஞர்கள் கஷ்டமான சமயத்தில் ஜோசியரை நாடிப்போக, ஜோசியரும் குலதெய்வ பூஜை செய்யும்படிச்சொல்ல, அவர்களுக்கு யார் குலதெய்வம்? என்றே தெரிவதில்லை. இன்று பலர் குலதெய்வத்தின் பெயர் மட்டும் தெரிந்துகொண்டு அது எங்கே இருக்கிறது என்று தேடுகிறார்கள்.
ஒருவர் இறந்துவிட்டாலும் காரியம் செய்ய மூன்று தலைமுறை மூதாதையர்களின் பெயர்கள் தேவைப்படுகின்றன. காரியம் செய்ய வரும் சாஸ்திரிகள் இதைக்கேட்டால் மகன்கள் சொல்லத்தெரியாமல் திண்டாடுகின்றனர். கூட்டு குடும்பத்தில் பல உறவினர்கள் பண்டிகைகளுக்கும் அத்துடன் கெட்ட நாளுக்கும் வருகைத்தருவதால் குழந்தைகளுக்குக்கூட உறவு முறைகள் தெரிந்திருந்தது, ஆனால் இன்றோ கணவன், மனைவி, குழந்தைகள் என்று குடும்பம் அமைந்து அதுவும் பெற்றோர்களை விட்டு மிகத்தொலைவில் இருக்க, இந்தப் பாசம் பந்தம் மிகவும் குறைந்துவிடுகிறது.
out of sight out of mind என ஆங்கிலத்தில் சொல்வது வழக்கம். என் அக்காவின் மகனின் மனைவிக்கு நான் யார் என்றே தெரியாது. திருமணத்தில் பார்த்ததுதான். இப்படி நிலைமை இருந்தால் கோத்திரம் உறவு முறைகள்அவர்களது நட்சத்திரங்கள் ஒன்றுமே தெரிய வாய்ப்பில்லை.
ஒரு உறவினரின் மருமகள் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தாள். அவள் ஒரு அமெரிக்கன். என்னிடம் வந்து சொன்னாள், "வீ ஆர் கோயிங்க் டு சீ கொல தெவம்" என்று. எனக்கு முதலில் புரியவில்லை, பின்பு தான் தெரிந்தது அவள் குறிப்பிட்டது குலதெய்வம் என்று. அதைக் கொலையே செய்துவிட்டார். ஆனாலும் இந்தமட்டும் ஆசையாக அவர்களது கோயிலைப் பார்க்க வந்தாரே அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. அவளை அணைத்துக்கொண்டேன். சிராத்த தினங்களில் பாட்டனார் முப்பாட்டனார் முதலியவர்களின் பெயர்கள் கூடத்தெரியாது தவிக்கின்றனர். இதைச் சரிசெய்ய சில வழிகள் கடைப்பிடிக்கலாம். ஆரம்பத்திலிருந்து குழந்தைகளுக்கு தங்கள் குலதெய்வம் பற்றியும் அதைல் பூஜை செய்யும் விவரம் பற்றியும் சொல்லிக்கொடுக்க வேண்டும். .தங்கள் இஷ்ட தெய்வத்தினால் ஏற்பட்ட வியப்பான சம்பவங்கள் இருந்தாலும் எடுத்துறைக்கலாம் அவர்கள் மனதில் பக்தியின் வித்தை விதைக்க வேண்டும். கோயிலுக்குப்போகும் போது கூட அழைத்துப்போகலாம், அவர்களது அத்தைகள் மாமாக்கள் பற்றி நல்ல விஷயங்கள் எடுத்துக்கூறலாம், உறவினர்கள் வீட்டிற்கு நேரம் கிடைக்கும் போது அருகில் இருந்தால் அழைத்துசென்று ஒரு பிணைப்பை உண்டாக்கலாம்.
தற்போது இருக்கும் பெரியவர்கள் பூர்வோத்திரங்களை எழுதி தங்கள் மகன் அல்லது மருமகளிடம் கொடுத்துவைக்கலாம். சுமங்கலிப் பிரார்த்தனை செய்யும் போது அழைக்க வேண்டிய இறந்து போன சுமங்கலிகளின் பெயர்களையும் எழுதிக்கொடுக்கலாம். தங்களுடைய "குடும்பவிருட்சம்" வரைப்படம் போல் தயாரித்து குடும்பத்தாரின் தலைவர், அவரது மனைவி, குழந்தைகள், அவர்களது படிப்பு, இருக்கும் இடம், குடும்பத் தலைவரின் முப்பாட்டனார் குடுமபம், என்று அத்தை மகன், மகள் திருமணம் போது பரிசுடன் கொடுக்கலாம். இப்போது கணினியில் கூட இதை மிக அழகாக பெயர், கோத்தரம், படிப்பு, வேலை, இருக்குமிடம், மனைவி, குழ்ந்தைகள், சிறப்பம்சம் என்று பிரிவு படுத்தி எல்லா குடுமப அங்கதினர்களையும் அதில் சேர்க்கலாம்,
இதைப்பெரிய அளவில் தயாரித்து வீட்டில் படம் போல் மாட்டலாம். என் நண்பர் ஒருவர் அமெரிக்காவிலிருந்து வந்தவர், தன் சகோதரியின் மகனுக்கு இது போல் திருமணத்தில் அளித்தார். சிலர் வீட்டில் இதுபோல் செய்ய ஆரம்பித்திருக்கின்றனர். இன்று தனித்தனியாகப்போன குடும்பத்தை இணைக்க முயற்சித்தால் தனிமையில் மோட்டுவளையப் பார்த்து நாளை எப்படி முடியும் என்று அதைரியமாக நினைப்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.
Designed and maintained by AKR Consultants


