- விஞானம் தந்திடும் விழுதுணங்காய்
- நடராஜன் கல்பட்டு
ஒளவைக்கு அளித்திட்டான் விருந்து
ஆயிரம் ஆண்டுகள் முன்பு
ஏழை விவசாயி
விழுதுணங்காய் பொரியல் செய்தே
ஆயிரம் ஆண்டுகள் முன்பு
ஏழை விவசாயி
விழுதுணங்காய் பொரியல் செய்தே
விருந்துண்ட ஒளவை பாடினாள்
அன் றதன் புகழ்
கத்தரிக்காய் என்றே அழைக்கின்றோம்
அந்தக் காய்தனை இன்று நாம்
சுவை கொண்ட கத்திரியை
சதை கொண்டு விதை வரா வண்ணம்
விஞ்ஞானம் துணை கொண்டே
மாற்றம் செய்து பி.டி. கத்திரி எனப் பெயர் சூட்டி
விற்கின்றா றதை நமக்கே
நாணயம் ஒன்றே குறி என் றிருக்கும்
அமெரிக்க வர்த்தகர்கள்
மீண்டும் வேண்டுமா உங்கள்
தோட்டத்தில் கத்திரிச் செடி
ஓடுங்கள் அவரிடமே விதை நாடி
ஓட்டைக் குடிசை வாழ் விவசாயி
அவன் வீட்டினிலே மற்றுமோர்
ஓட்டை போடுகின்றார்
அமெரிக்க முதலாளி
விஞானம் எனும் பேரில் இயற்கையொடு
விளையாடு மிவர் அறிவரோ அதன் விளைவு
நம்முடல் நல்ம் கெட்டா லென்ன
அதற்கும் அளித்திடுவா ரவர்
மருந் தொன்று தன் கண்டு பிடிப் பென்றே
நடராஜன் கல்பட்டு
Designed and maintained by AKR Consultants


