- காலதேவன் 2010
- Vishalam Raman
ஒ நுழைந்தும் விட்டாயா?
பார்க்க அழகாகத்தான் இருக்கிறாய்
ஆனால் ஓடிக்கொண்டே இருக்கிறாய்"
காலதேவன் 2010
"நான் தான் 2010,
காலதேவன் என் பெயர்,
ஒருவருக்கும் நிற்பதில்லை
எவர் சொல்லையும் கேட்பதில்லை
கடமையைச் செய்கிறேன்
ஒடிக்கொண்டே இருக்கிறேன்,
எத்தனை விடிவுகள்
எத்தனை வீழ்ச்சிகள்.
எத்தனை மலர்ச்சி
எத்தனை இகழ்ச்சி"
நான் ........
"வரவேற்கிறேன் காலதேவா,
இந்த வருட கணிப்பு என்னவோ?
என் உள்ளத்தில் ஒரு கிளர்ச்சி
எத்தனைக் கனவுகளின் வளர்ச்சி!
என் கனவுகளை நினைவாக்குவாயா?
உன் உழைப்பைக் கண்டு வியக்கிறேன்
மழைப்பொழிய காட்டுவாய் கருணை
பசுமையின் விரிப்பில் என் மகிழ்ச்சி
கொடுப்பாயா எங்கும் சுகம்
தருவாயா எங்கும் இன்பம்?"
காலதேவன் 2010
"இனபம் அளிக்கவே வந்துள்ளேன்.
துன்பம் ஆக்குவது நீங்களே!
இயற்கையின் எதிர்ப்பு
மரங்களின் ஒழிப்பு
காடுகளின் அழிவு
பிராணவாயு முறிவு
எங்கும் கான்கிரீட் கட்டடங்கள்.
ஆகாயம் வரை எழுப்ப
மாரி எப்படி பெய்யும்?
பசுமை எப்படி அமையும்?"
நான் ,,,,,
"2010 காலதேவனே
மக்கள் மனதில் ஆனந்தம் பொங்க
பண்டிகை நாளில் அனைவரும் களிக்க
பஞ்சபூதங்களை உன்னகதே கொண்ட நீ
முக்காலங்களில் தவிழ்ந்து சிறக்கும் நீ
எங்களைப் பூரிக்க வைப்பாயா?"
காலதேவன் 2010
"சந்தோஷம் என்பது உங்கள் கையில்
இன்பம் துன்பம் உங்கள் மனதில்
மதபேதம் உங்கள் செயலில்
பழிக்குப்பழி உங்கள் மனதில்
ஒழித்துப் பாருங்கள் சாதிவெறி
அன்பின் வழிநடப்பதுவே சரி.
பண்புடன் வாழ்க்கை பிறக்கட்டும்
ஆன்மீக வாழ்வு சிறக்கட்டும்
இனிக்கட்டும் உங்கள் வாழ்க்கைக் கருமபு
மனித நேயம் வளர அங்கே மலரும் அருமபு"
அன்புடன் விசாலம்
Designed and maintained by AKR Consultants


