- இரட்டை முகம்
- vishalam raman
உனக்கு ஏன் இந்த இரட்டை முகம்?
உன் நாட்டில் ஒரு மாதிரி!
அயல் நாட்டில் நீ வேறு!
உன் நாட்டில் நீ இருக்க
அதையே குறை சொல்கிறாய்!
குடியரசு நாடுதான்,
எல்லாம் சுதந்திரம்
பேச்சு சுதந்திரம்!
எழுத்து சுதந்திரம்,
மத சுதந்திரம்
தொழில் சுதந்திரம்!
சுதந்திரத்திற்கும் வரம்பு உண்டே!
சுதந்திரம் கேட்கும் நீ,
உரிமையைக் கேட்கும் நீ,
உழைப்பை மறக்கிறாய்!
கடமையை மறக்கிறாய்!
நாட்டில் சுகாதாரம் எங்கே?
உனக்கும் அதில் பங்குண்டே.
எங்கும் குப்பை எங்கும் நாற்றம்,
பலவீட்டுச்சுவர்கள் உனக்கு டாய்லெட்!
கடலையைச் சுவைக்கிறாய்
தோலி தெருவில்
சிகரெட் ஊதுகிறாய்
துண்டு தெருவில்
விதிகளை மீறுகிறாய்
இஷடப்படி வாகனம் ஓட்டுகிறாய்
உன் சுயநலம் பெரிது
அதனால் லஞ்சம் கொடுக்கிறாய்,
லஞ்சம் பெறுகிறாய்,
அயல் நாட்டில் உன் முகமே வேறு!
உன் செயல்களும் வேறு
விதிகளை அப்படியே ஏற்கிறாய்
அதன்படியும் நட்க்கிறாய்,
கோயிலில் எண்ணெய்த்துடைப்பதில்லை
தெருவின் விதிகளை மீறுவதில்லை
வாழைப்பழத்தோலி வீசுவதில்லை
வரிகளும் சமயத்தில் செலுத்துகிறாய்
சுத்தத்திற்கு முதல் இடம் தருகிறாய்
உழைப்பையே மூலதனமாகக்கொள்கிறாய்,
வீட்டு வேலையில் சம பங்கு
கிடைப்பது மன அமைதி அங்கு,
கார் ஓட்டும் ஒழுங்கு
சரியான இடத்தில் நிறுத்தும் பாங்கு
உன் இரட்டை முகத்தை மாற்றிக்கொள்
உன் நாட்டைத் தூஷிப்பதை நிறுத்திக்கொள்
உன் நாடு முன்னேற கைகொடு
உழைப்பும் தியாகமும் காணிக்கையாக்கு
Designed and maintained by AKR Consultants


