- நமோ ஹரி ஹந்தாணம்
Courtesy: Vishalam Raman
அன்பு, ,ஒழுக்கம், நற்சிந்தனை, கடமை, உழைப்பு இதிலேயே நாம் அந்த இறைச்சக்தியைப் பெறலாம் இல்லையா?
ஜைனமதப் பிரார்தனை
"நமோ ஹரி ஹந்தாணம்
நமோ ஹரி சித்தாணம்
நமோ ஹரி ஆர்யாணம்
நமோ ஹரி உவஜ்யாணம்
நமோலோ ஸர்வ ஸாஹீமாணம்
பஞ்ச நமக்காரோ சர்வ பாவ பாணாஸனா
பதமை ஹாவ மங்களம்,
இதன் அர்த்தம்: "அந்த இறைச்சக்தியை வணங்குகிறேன். முக்தி நிலையை எய்தியவர்களை வணங்குகிறேன். பெரிய மதத் தலவர்களை வணங்குகிறேன். நல்லாசிரியர்களை வணங்குகிறேன். நல்ல மேலோர்களை வண்ங்குகிறேன். இந்த பஞ்ச நமஸ்காரங்களைச் செய்தால் வாழ்க்கையில் மங்களம் உண்டாகும், மகிழ்ச்சி பெருகும்".
புத்தமகானைப்போல் ஸ்ரீமஹாவீரரும் ஒரு ராஜகுமாரர்தான் .
ஸ்ரீ மஹாவீரரின் தந்தை திரு சித்தார்த்த் என்பவர் ஒரு அரசர், அவர் தாய் "திரிசலா" அல்லது "பிரியகர்னி", இந்தத் தாய் மஹாவீரரைப் பெற்று எடுக்கும் முன் 14 பொருட்களைத் தன் கனவில் கண்டாள். அவைகள். சிங்கம், யானை, வெள்ளி தட்டு, தாமரைக்குளம், காளை, லட்சம் பாற்குடம், காற்றில் தெய்வீகச்சக்தி, இரண்டு மலர் மாலைகள், சந்திரன், சூரியன், புகையாத அக்னி, கொடி, அபிஷேகப்பால், அரிசி,
இந்த நல்ல கனவு அவர் மனதுக்கு மகிழ்ச்சியையும் கொடுத்தது, இதைப் பற்றி பல பெரியவர்களிடம் அவர் கேட்க அவர்கள் சக்க்கிரவர்த்தி போல் ஒரு ஒளி பொருந்திய மகன் பிறப்பான் என்றனர், அவர்கள் வாக்கு பொய்க்கவில்லை. மகனும் பிறந்தான். மகன் பிறக்கும் போது அவர் அன்னைக்குப் பிரசவ வலியே தெரியவில்லையாம். 599 பி.சி.யில் இவரது அவதாரம் என்கிறது சரித்திரம். இவரும் ஸ்ரீ புத்தரைப் போல் அரசக் குடும்பத்தில் பிறந்திருந்தும் தனது முப்பதாவது வயதில் அரண்மனையை விட்டு வெளியேறி ஆசைகளை அடக்குவதில் வெற்றியும் கண்டார், பல இடங்கள் காலில் செறுப்பு இல்லாமலே நடந்து பின் அந்த இறைச் சக்தியைக் கண்டு கொண்டார், உண்மை பேசுதல், திருடாமல் இருத்தல், பால் உணர்ச்சியைக் கட்டுப் படுத்தல், எனபதை மிக முக்கியமான கொள்கையாக வலிவுறுத்தினார். முற்பிறவியின் கர்மவினையில் அவருக்கு நம்பிக்கை இருந்தது. எந்தவிதமான கொலையும் இவர் மறுத்தார், ஒரு எறும்பைக்கூட கொல்வது தவறு என்று வலியுறுத்தினார். தன் சொல்ப தொகையிலும் ஏழை எளியவ்ர்களுக்கு முடிந்தவரை தானம் செய்ய வேண்டும் என்றும் பிரசாரம் செய்தார். கோபம், பேராசை இன்னாசொல், கெட்ட எண்ணங்கள் முதலியவை பாபங்களை மேலும் பெருக்க உதவுகின்றன என்றும் உபதேசித்தார்.
இந்த ஜைன மதம் ஜினா என்பவர்களின் மூலம் ஆரம்பமாகியது. இவர்களே பின்னால் ஜைன் என்று அழைக்கப்பட்டனர், இதில் இரண்டு பிரிவுகள் இருந்தன, ஒன்று திகம்பரர்கள், மற்றொன்று ஸ்வேதமபராகள். திகம்பரர்கள் உடை அணியாமல் உடல் முழுதும் திருநீறு பூசியபடி இருப்பார்கள். ஸ்வேதம்பராவிலும், தீர்த்தங்கரா என்று ஒரு பிரிவு உண்டு. ஸ்ரீ மஹாவீரரின் குரு ஸ்ரீ பார்ஸ்வநாத் என்பவர் தீத்தங்கராவைச் சேர்ந்தவர். இவர்கள் தனக்குள்ளே நிலைத்திருக்கும், "நான் 'என்பதை ஒழித்து, கோபம், பேராசை, அக்ஞானம், அஹங்காரம் இவற்றை ஒழிக்க உபதேசம் செய்பவர்கள். அவர்கள் தங்களுக்கென்று ஜைனக் கோயில்களும் கட்டினார்கள்,
மிகவும் பழைய ஜைனக் கோவில்கள் குஜராத்தில் கிரினா, பலிதானாவிலும் ராஜஸ்தானில் மஹாவீர்பி என்ற இடத்திலும் காணலாம். கொல்கொத்தாவில் பலிதானா என்னும் இடத்திலும், பீகாரில் பாவபுரி எனும் இடத்திலும் அருமையான ஜைனமத கோயில்கள் உள்ளன, இந்த மஹாவீர் ஜயந்தி அன்று தேர் ஜகஜ்ஜோதியாக அலங்கரிக்கப்பட்டு, அதில் இந்த மஹாவீரர் எழுந்தருளி வலம் வருவார், தவிர கோயில் முழவதும் கொடிகளால அலங்கரிக்கப்பட்டிருக்கும். அன்னதானம், கல்வித்தானம் போன்ற பலவிதமான சிறப்பு தானங்கள் நடக்க பெரிய திருவிழாக் கோலம் தான். பல ஜைனர்கள் வாயில் தூய்மையான வெள்ளைத் துணியைக்கட்டி வைத்திருப்பார்கள். அதே போல் காலிலும் செருப்பு போன்ற காலண்களைப் போட மாட்டார்கள்..தன் காலணியால் எதாவது புழு பூச்சியை மிதித்துவிடப் போகிறோமோ என்ற உயர்ந்த எண்ணம் தான். சில ஜைனர்கள் தங்கள் குடும்பத்திலிருந்து ஒரு பெண்ணை ஜைனக் கோயிலுக்கே அர்ப்பணம் செய்துவிடுவார்கள். அந்தப்பெண் பின் ஒரு சன்யாசினி போல் தான் வாழ வேண்டும். நம் பூணல் வைபவம் போன்று இந்த நிகழ்ச்சியை மிகவும் படாடோபமாக பேண்டு செட் வைத்து கோலாட்ட நடனத்துடன் ,பாடல்களுடன் ஒரு பெரிய ஊர்வலம் வர அதில் அந்த சன்யாசியினியாகும் சிறுமி ஒரு தேரில் மிகுந்த அலங்காரத்துடன் அமர பல தெருவுக்குள் ஊர்வலம் வர பின் பெரிய பந்தல் முன் வந்து முடியும். இந்தத் திருவிழாவைக் காணக் கண்கோடி வேண்டும், அத்தனை வண்ண விளக்குகள், ஆனாலும் முடிவில் சின்னப்பெண் சன்யாசினியாக போய்விடுகிறதே என்று அவர்கள் குடும்பத்தினர்கள் மனக்கலக்கம் அடைவதையும் பார்க்கலாம், மஹாவீர் ஜயந்தியின் போது அவர்கள் கோயிலுக்குப்போய் பார்க்க மனம் மிகவும் அமைதி அடைகிறது.
அன்புடன் விசாலம்
Designed and maintained by AKR Consultants
