- சொக்கவைத்த குரல் - திரு எம் கே. டி
vishalam raman
மாயவரம் திரு கிருஷ்ணமூர்த்தி ஆசாரிக்கு ஒரு அழகான மகன், சுந்தரன் தான், பெயர் தியாகராஜன். அவனது தந்தை அநதச்சிறுவனை பள்ளியில் சேர்த்தார் ,ஆனால் அந்தப்பையனுக்குப்படிப்பில் அத்த்னை நாட்டமில்லை, ஆனால் ஒயாமல் எதாவது பாடிக்கொண்டிருப்பான். மிகவும் கஷ்டப்பட்டு பள்ளிக்கு அனுப்பிய தந்தைக்கு ஏமாற்றம் தான் மிகுந்தது. பையன் படிப்பில் ஆர்வம் காட்டவில்லை, ஆனால் அந்த வயதில் அவன் பாடிய பாட்டுக்கள் எல்லோரையும் கவர்ந்தன. அவனது தந்தை அவனைப் பள்ளியிலிருந்து எடுத்துவிட்டு தன்னுடன் தன் தொழிற்சாலையில் அந்த வேலையைக் கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பளித்தார். ஒரு நாள் தந்தை சற்று தாமதமாக வேலைக்கு வர, வாசலில் ஒரு பெரிய கூட்டம் கூடியிருந்தது. என்னமோ ஏதோ என்று பதறிக்கொண்டு உள்ளே போனால் அவரது மகன் தியாகராஜன் சில பாடல்களைப் பாடியபடி நிற்க, "ஆஹா! பலே பலே!" என்ற கைத்தட்டல்கள். தந்தை அவனுக்குள் இருக்கும் சங்கீதத் திறமையைக் கண்டு கொண்டார். பின் அவனைப் பெரிய நாடக நடிகராக ஆக்கவும், இசையை மேலும் வளர்க்கவும் திருச்சி திரு நடேசய்யர் என்பவரிடம் அனுப்பி வைத்தார். நடேசய்யருக்கு ஒரு நாடக்க் கம்பெனியும் இருந்தது. அந்த நாடகக் கம்பெனியில் போட்ட ஹரிஸ்சந்திரா நாடகத்தில் லோஹிதாசனின் பாத்திரம் ஏற்று கூட பாடல்களும் படி அசத்திவிட்டான் பையன். பார்த்த்வர்கள் விசில் அடித்து சந்தோஷத்தில் பல நாணயங்களை மேடையில் வீசினர். நாடகக் கலையுடன் கர்நாடக இசையும் கற்றுக் கொடுக்கப்பட்டது. அதில் நாமக்கல் திரு ராகவ அய்யங்கார் என்பவரும் ஒருத்தர். பையன் பெரியவனாகி சக்கைப்போடு போட ஆரம்பித்தான். அவனைப் பாகவதர் என்றும் ஆசையாக ஒரு குரு அழைக்கத் தொடங்கி அதுவே அவனுக்கு வெற்றி மேல் வெற்றியாகப் பரிணமித்தது,
அவர்தான் திரு எம்.கே. தியாகராஜ பாகவதர். இவர் பெயரை சொன்னாலே "ராதே உனக்குக் கோபம் ஆகாதடி" என்ற பாடல் மனதில் நிற்கிறது இவரை மேலே தூக்கிவிட்ட படங்கள் "சிந்தாதமணி", "அம்பிகாபதி", "பிலவமங்களா" போன்ற சிறந்த கதைகள். இந்தச் சிந்தாமணி காசியில் இருந்த ஒரு சம்ஸ்கிருத கவி. பில்வமங்களா பற்றிய கதை, இந்த பில்வமங்களாதான் "கிருஷ்ண கர்மாம்மிருதம்" என்ற கண்ணனின் சிற்ப்பை வண்ணமயமாக்கினார்.
அம்பிகாபதி என்ற படத்திற்கு இசை அமைத்தவர் திரு பாபநாசம் சிவன் அவர்கள். கூட நடிகையாக நடித்தவர் திருமதி சந்தான லட்சுமி. தியாகராஜ பாடலும் திரு எம்.கே.டி. அவர்கள் பாடியிருகிறார். அவை நேனந்து வெது குதுரா, மோக்ஷமுகலதா என்பவை.
பழையகால சூப்பர் ஸ்டார் என்று இவரைச் சொல்லலாம். இவர் நடித்த ஹரிதாஸ் படம் 114 வாரம் ஒரே தியேட்ட்ரில் ஓடியதாம். இவருடைய மெஸ்மரிசம் செய்யும் குரலும் ஸ்வஷ்டமாகப் பாடும் விதமும் மேல்ஸதாயியில் அருமையாக எட்டும் தொண்டையும் இவரை கலை உலகத்தின் உச்சிக்கு அழைத்துச் சென்றது. இவர் சினிமாவில் இருந்த காலம் ஒரு 10 வருடங்கள் தான் ஆனால் அதில் அவர் சாதித்தது மிகப்பெரிய சாதனை தான். இவருடைய "பவளக்கொடி"யும் பெரிய ஹிட் தான். இதில் சுமார் 40க்கு மேல் பாடல்கள் இருந்ததாம். இவரது நவீன சாரங்கதாராவும் வெற்றியடைந்தது.
இந்த வருடம் மார்ச் ஒன்றாம் தேதியில் அவர் பிறந்த நூறாவது ஆண்டு. அவர் பாடிய "சிவபெருமான் கிருபை வேண்டும்", "உலகனில் இன்பம் வேறுண்டோ" என்ற பாடல்கள் இன்றும் பசுமையாக இருக்கின்றன. ஆஹா அந்தக் கணீரென்ற குரல் சுமார் 7 கட்டையில் எட்டும் சாரீரம் மறக்க முடியுமா திரு தியாகராஜரை?
Designed and maintained by AKR Consultants



