- இறைவன்
- சீராசை சேதுபாலா
அண்மையில் ஒளிப்பெட்டியில் சிவசங்கரி சொன்ன சின்னக் கதை:
பதைபதைக்க ஓட்டிவந்த ஒருவன் கூட்டத்தின் மத்தியில் வீற்றிருந்த குருவிடம் "பிறப்பு என்றால் என்ன? இறப்பு என்றால் என்ன?" என்று கேட்டான்.
குரு அருகில் உள்ள அறை ஒன்றினைக் காட்டி ஒரு புத்தகத்தின் பெயரைச் சொல்லி எடுத்துவரச் சொன்னார். இருட்டான அறைக்குள் ஒன்றும் தெரியவில்லை என்று திரும்பிவிட்டான்.
குரு தீப்பெட்டியும் மெழுகுவர்த்தியும் கொடுத்தனுப்பி அந்தப் புத்தகத்தை எடுத்துவரச் சொன்னார்..இம்முறை எடுத்து வந்துவிட்டான்.
குரு மெழுகுவர்த்தியை அணைத்துவிட்டு மீண்டும் அதே செயலைச் செய்யச் சொன்னார். புத்தகத்தை எடுத்துவர இயலவில்லை.
"அந்த வெளிச்சம்தான் பிறப்பு - அந்த இருட்டுதான் இறப்பு - இரண்டிற்கும் இடையில் உள்ளதுதான் வாழ்க்கை. பிறப்பும் இறப்பும் தெரியாத காலக்கட்டத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வத்துதான் வாழ்க்கை/" என்று சொன்னார் குரு-
Designed and maintained by AKR Consultants

